ஷாமீலா முஸ்டீன்
நிர்மலமான அந்த மனது சலனமற்றுக் கிடக்கிறது புரிந்து கொள்ளப்படாத சமயக் கருத்துக்கள் நிரம்பி வழிந்தபடி…
குழம்பிய குட்டையில் மீன்பிடித்து சேற்றில் காயப்போடப்படுகிறது.
காற்றுகெழும் காகிதம் தான் ஆயினும் கடந்துவிட்டுப் போகமுடியாதபடி எரிந்து சாம்பலாகிற்று பெண் அவள் இன்னும் உற்றுநோக்குகிறாள்
வாய்க்கும் வார்த்தைக்கும் கட்டுப்போட்டு வைத்து பார்க்கிறது சமூகம் களவாடப்படும் கற்பு கனதியற்று பெண் உடம்பு வேட்டையாடப்படுகிறது
மனித உடம்பை புசிக்கும் வேட்டைநாய்கள் இன்னும் துரத்திவருகின்றன. பெண்ணை பூட்டி வைக்கும் காலம் வந்துவிட்டது.. அவள் பாதுகாக்கப்படவேண்டிள்
மிருகங்களிடமிருந்து தன்னைக்காப்பாள்