கருப்பாயி (மலையகம்)
தற்கொலை, காணாமல் போதல், கொலை, கடத்தல், பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்குதல், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என பல குற்றங்களுக்கு ஆசியாவிலேயே இலங்கை முதலாமிடத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இக்குற்றச் செயல்களில் தற்கொலை செய்வோரின் வீதத்தில் 90களின் முற்பகுதியிலிருந்து இன்று வரை மலையக தோட்டப்பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள தற்கொலைகள் சார்ந்த எந்த ஆய்வுகளும் இதுவரை மேற்கொள்ளப்படாதது மலையகத்தின் புறக்கணிக்கப்பட்ட நிலையையே காட்டுகிறது.
மலையக பெண்களின் தற்கொலை முயற்சியானது பெரும்பாலானவை மண்ணெண்iணையை உடம்பில் ஊற்றி பற்ற வைத்துக்கொள்வதாகவே இருக்கிறது. �’ரு குறிப்பிட்ட தோட்டத்தில் �’ரு வாரத்திற்குள் மாத்திரம் 11 பெண்கள் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தளவுக்கு மலையக பெண்கள் மத்தியில் தற்கொலை எனும் சமூக வன்முறை அதிகரித்துள்ளது.
இதில் கொடுமையானது என்னவென்றால் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்தப்பிய பெண்களது வாழ்வு விபரிக்க முடியாத கடினங்களை கொண்டிருப்பதுதான். அதைவிட இலங்கையின் குற்றவியல் கோவையில் தற்கொலை என்பது �’ரு தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதால் தற்கொலைக்கு முயற்சித்த பெண்களை சட்டமும் தன் பங்கிற்கு கொலை செய்கிறது. பொலிஸ் விசாரணை, சிறைத் தண்டனை என அவர்களது துன்பங்கள் தொடர்கிறது.
ரிமான்ட் சிறைகளில் மாற்றத் துணியின்றி, சவக்காரமின்றி மண்ணெண்ணை நாற்றத்துடன் இவர்கள் நாட்கணக்கில் வாட நேர்கிறது. இவர்களை பார்க்க தோட்டத்தில் இருந்து நகரத்திற்கு வர உறவினர்களுக்கும் இயலாது. �’ன்று பணப்பிரச்சினை,மற்றது நகரத்தில் இடம் தெரியாதது. சிங்களம் தெரியாதது அரச நிர்வாக அங்கத்தினால் புறக்கணிக்கபடுவது, அச்ச உணர்வு… இத்தியாதிகள். இந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறைச்சாலைகளில் நலம்புரி சேவைகளை கூட சிறைச்சாலை அதிகாரிகள் காவலர்கள் இனவாதத்தின் காரணமாக பெற்றுக்கொடுப்பதில்லை. பிணையில் விடுதலையாக பணம் இல்லை. அதற்கான வழிமுறைகள் இப்பெண்களுக்கோ இவர்களது உறவினர்களுக்கோ தெரியாதது மொத்தத்தில் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாது இப்பெண்கள் அவதிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மலையக பெண்களின் நலன்களில் அக்கறையுடையவர்கள் தற்கொலையின் விளைவுகள் சார்ந்து பெண்களிடையே விரிவான விழிப்புட்டலை மேற்கொள்ள வேண்டிய உடனடி கடப்பாட்டைக் கொண்டுள்ளனர். தீயின் விளைவுகளிலிருந்து பெண்களை காப்பது எமது இன்றைய பிரதான கடமையாகிறது. பெண்களின் நலத்தில் அக்கறை யுடையோர், பெண்கள் அமைப்புக்கள், பெண்ணிய சிந்தனையுடையோர் போன்றவர்களுடன் நாம் கைகோர்த்து இதற்கு �’ �”ரு முற்றுப்புள்ளி வைக்க பாடுபடுவோமாக…