மரணமூறும் கனவுகள் (யாழினி) – ஊதாநிறச் செம்பருத்தி – ( தமிழில், பிரேம்) புத்தகம் பேசுது பிப்ரவரி மாத இதழில்

uatha

yali canada

அணங்கு பெண்ணியப்பதிப்பகம் வெளியீடுகள்

நெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினவுகளுக்கும் புலம்பெயர் நிலத்திலும் உருவம் தரும் மொழி யாழினியடையது. துயர்களும் பிரிவுகளும் கூட முடிவுக்கானவை அல்ல என்பதை கதைகளின் வழி சொல்லிச்செல்லும் தொன்மையும் முதிர்ச்சியும் படிந்த குரலூடாக வரலாற்றின் முகத்தில் கீறும் முட்களாகச் சில. இன பாலின காயங்களை கடக்கவும் மீறவும் வாழவும் முயலும் கவிதைகள் கொண்ட யாழினியின் முதல் தொகுப்பு .

சிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், தொன்மங்கள் மொழிகள் என அனைத்துக்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தை சொல்லஒpநிற்கிறது இடம் மறுக்கப்பட்ட இடத்தில் தனக்கான இடத்தை உருவாக்கும் செயல்பாடு தான் பெண்ணியச் செயல்பாடு எனில் அது எதிர்காலம் பற்றியதாக மட்டுமன்றி இதுவரையான காலங்களையும் தன்வயப்படுத்த வேண்டிய தேவை உள்ளது வரலாற்று கதையாடல்களை பெண்மொழியில் மறுஆக்கம் செய்வதிலிருந்து எதிர்க்கதையாடல்களை பெண்ணெழுத்தில் பெருக்குவது வரை அனைத்தையும் பெண்ணிலையாக்கம் செய்வது பற்றிய ஒரு திட்டத்தை சிமாந்தா தொடர்ந்து முன்வைத்து வருகிறார் பின்காலனிய கதையாடலை பெண்ணிய இயங்கியலுடன் இணைப்பதன் வழியாக வெள்ளைமய மைய உலகையும் ஆண்மைய உலகையும் ஒருசேர சிதைவாக்கம் செய்யும் ஆற்றலை பெறுகின்றது சிமாமந்தாவின் கதைமொழி. சிமாமந்தா பெண்ணியத்தின் ஒரு முக்கிய பகுதியான கருப்பின பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பவர் அதனால் இந்நிய- தமிழ்ப்பெண்ணியத்தின் அனைத்து கேள்விகளுக்கும்பொருந்தக்கூடிய கதை மொழி கொண்டவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *