குப்பை::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா)

நீ
கொடுத்தவை
அனைத்தையும்
சேர்த்து வைத்துப் பார்கையில்

சேர்ந்தவை
அனைத்தும்
குப்பைகளாக
குழுமியிருக்க

எனது பயணத்திற்கு
ஏதுவாக..
என் பெட்டி சுமையின்றியிருக்க

தரம்பிரித்து
குப்பையை
குப்பையிலும் – மற்றதை
பெட்டியிலும் வைத்தேன்.

பொருக்கி எடுத்த
குப்பைகளை
மீண்டும் தரம்பிரித்து

இனித்தத்தையும்
ருசித்ததையும்
ரசித்ததையும்

திரும்ப
பொருக்கிக்கொண்டேன்
மீதம் நின்ற குப்பைகள்

என்னை
எரித்திடாதே …!!!
புதைத்திடாதே…!!!
என கூச்சலிட….

சீ… போகட்டும் என
அதையும் பொறுக்கியெடுத்து
பெட்டியில் வைத்தேன்

மீண்டும் என் மனபெட்டி
உன் குப்பைகளால்
நிரம்பி …

வழிய வழிய
சுமந்து செல்கிறேன்

சவப்பெட்டிக்குள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *