அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு பலரும் வேலை கொடுக்க முன்வருவதில்லை. தன் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர்கள் கைவிடப்படுவதால் மரியாதை இழந்து அவதியுறுகிறார்கள்.
பல நேரங்களில் திருநங்கைகள் சமூகத்தினர் பாலியல் துன்புறுத்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களால் பாதிக்கப்படுவதும் நிகழ்கிறது. இந்தச் சூழலில், அந்தச் சமூகத்தில் இருந்து வெளிவரும் முதல் பாடல் வீடியோ, சகிப்புத்தன்மை உலகில் தங்களுக்கு மகிழ்ச்சி கிட்டுவதாக அமைத்திருப்பதும், அவர்களுக்கான உலகத்தை விவரிப்பதும் சிறப்பு”