கி.கலைமகள்
(பெண் சஞ்சிகையில் வெளியாகியது) ஒளவையின் கவிதை நூல் ஓர் பார்வை
எதை நினந்தழுவதும் சாத்தியமில்லை தனது கவிதையில் பெண்ணின் காதல்இவாழ்தலுக்கான எதிர்பார்ப்பு மண்ணுக்கும் மண்ணுக்கும் தன் சொந்த நிலத்திற்காக உறவு இவற்றினை பிரதிபலிப்பதாக அமைகின்றன காதல்,உணர்வு பெண்களுக்கு மறுக்கப்பட்டது ஒழுக்கத்திற்குப் புறம்பானது வெளிப்படுத்தலுக்குரிதன்று.வெளிப்படையானதுமல்ல பெண்ணின் காதல் வெளிப்படையாக வெளிப்படுத்தலுக்குரியது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாக இருந்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால் ஆண் தன் காதலை எப்போதும் எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம் இத்தகைய சமூகச் சூழலில் நின்று ஒளவை தன் காதலை வெளிப்படுத்துகின்றார்.
“காதல் பெரிது கற்றிட முடியாது
கரையேறல்கூடக் கனவு தான்
உண்மையாய் இரு
அதுவே காதல்“
என காதலுக்கு முழமையான விளக்கம் கொடுப்பதும்
“காதலை நான் மிகவும் நேசிக்கிறேன்…“ என்னும் கவிதையில் பெண்ணின் காதல் எதனை எதிர்பார்க்கிறது என்பதனை தெரிவிக்கிறார் கூறையும் பட்டுமாய் கனவு காண்பவர்ளாய்ப் பேசிவரும் ஊடகங்களும் வாழ்வு நடைமுறைக் கருத்துருவாக்கங்களுக்கும் இவரது கவிதைகள் எதிர்முனை சாட்சிகளாய் நிற்கின்றது. இவரது காதல் கவிதைகள் இவரது காதல் எதிர்பார்ப்பும், உணர்வும் ,சமூகம் கற்பித்த காதலுக்கும் சினிமா காட்டும் காதலுக்கும் விமர்சனமாய் இருக்கிறது
ஒளவையின் காதல் பற்றிய கவிதைகள் சாதாரண வாழ்வியல் நிலையில் நின்று ஒருபெண் தன் வாழ்தற்கான காதலை அன்பை தேடுவதாய் உள்ளது. இதுவரை சமூகம் பெண்ணுக்காய் கற்பித்த காதலை, குடும்பம் என்னும் அமைப்பின் மீதான பெண்ணின் நம்பிக்கையையும் ஒரு பெண் எதிர்பார்ப்பது எது என்னும் கேள்விக்கு விடையாகவும் உள்ளது.
இங்கு காதலையும் இரண்டு விதமாய் பதிவு செய்கிறார் போர்க்காலச் சூழலில் காதலின் எதிர்பார்ப்பும், சாதாரண சூழலில் காதலின் எதிர்பார்ப்பும், வேறுபட்டு நிற்கின்றது போரின் நடுவே நிற்கும் காதலை பின்வரும் கவிதை விமர்சிக்கிறது
“நாளைய இரவில் நானோ நீயோ
எங்கள் இதழ்களோ
எதுவும் இருப்பது
நிச்சயமில்லை
நாளைய இரவு
அவர்களுக்கோ”
அல்லது புதைகுழி நிரப்பும் ஈர மண்ணுக்கோ
அக்கால சூழலில் நின்று காதல் பேசும் கவிதையாய் கலியாணத்தை சீதனத்தை விமர்சிக்கின்றார்
“தாடி இருக்காம்
அந்நிய நாட்டில் வாழ
அனுமதியும் இருக்காம்
இதற்க்கப்பால் என்ன?
குன்னி கழிப்பதே வாழ்வின் இலட்சியமாய்
தாலிஇநகைஇகூறையுடன்
ஓடு”
“நிலம் நான் வாழ்வு, என்னும் கவிதைகளிருந்து நிலத்தை வாழ்விலிருந்து பிரிக்க முடியாது என்பதும் நிலத்தின மையப்படுத்திய போராட்ட சூழலை பிரதிபிலப்பாகவும் தன் வேதனையின் சுவடாகவுமுள்ளது. போராட்ட காலங்களில் தன் நிலம் விட்டகன்றது ,தன் உறவுகளை, தன் நண்பர்களை, கண்முன் இழப்பினும்,கையறு அற்ற நிலையில் நிற்கும் ஒரு துர்பாக்கிய நிலை ஒளவையின் கவிதைகளில் இழையூடுவதைக் காணலாம் . தாய் மண் புதல்வர்களைக் கேட்பதனை ஏற்க முடியாமல், தாய்மார்களின் புதல்வர்களின் இழப்பினையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அதேவேளை இவற்றினைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் தவிப்பினையும் காணலாம்
“அம்மா நான் போக வேண்டும் விடை கொடு எனக்கு என்னும் கவிதையில் இதனைக் காணலாம்.
அத்துடன் இதுவரை பெண்ணுக்காய் சொல்லி வைத்த வாழ்தலிலிருந்து விடுபடும் ஒரு விடைபெறலாய் ஒளவை இதனைப் பதிவு செய்துள்ளார்.
“புதைகுழியும் மணல் மேடும்
ஏன் புதல்வர்களின் சடலங்கலால்
நிரம்பிய பிறகு
இன்னுமா தாய் நிலம்
புதல்வர்களைக் கேட்கின்றது”
என்கிறார்
குறிப்பாக வாழ்தல் ,காதல், போர் இவற்றினை பதிவு செய்கின்றார் குறிப்பாக போர் போருக்கு பின்னரான வாழ்தல் சொந்த மண்ணுக்கும் தனக்குமான உறவு இவற்றினை ஆழமாக பேசியிருக்கிறார் இவரது மீள்வருகை என்பது போருக்கு பின்னரான வாழ்தலின் குறியடுகளாக உள்ளன. நடந்தவற்றிற்கும் சாட்சியாகவும் நிற்கின்றன.
ஓளவையின் எளிமையான மொழிவளம் கவிதையை இலகுவாக விளங்க வைக்கவும் மீண்டும் மீண்டும் வாசிக்கவும் தூண்டுகின்றது. இயல்பாகிப் போன வேதனை தரும் வாழ்தல் காலங்களையும் பல கேள்விகளையும் எதிர்பார்ப்பினையும் எழுப்பியுள்ள போருக்குப் பின்னரான அசாதாரண வாழ்வுமுறைகளை அப்படியே ஏற்கமுடியாமல் அதனை விமர்சிக்கும் கவிதைகளாகவே அதிக கவிதைகளுள்ளன
ஒரு பெண் காணும் வன்முறையுள்ள உலகையும் மனிதர் சுதந்திரமாய் வாழவிழையும் உலகை ஆக்கும் உலகினை நோக்கிய கேள்வியாய் விமர்சனமாய் இவரது கவிதைகள் உள்ளன.