விஜயலட்சுமி சேகர்
இப்ப முளைச்சதுகள் றக்க கட்டி
பறக்குதுகள்…
பொன்னாச்சியின் முனு முனுப்பு
நேரம் இல்ல எண்டாத்தான்
காலம் போல…
இது எனது அவதானிப்பு
தூங்கி முளித்த கண்ணுடன்
படுக்கையில் புரள்வேன்
பகல் கனவாய்…
பாதையெங்கும் பட்டு
விரிக்க வேண்டும்
எனும் ஆதங்கம்
என்னுள் பொங்கும்.
எரிச்சலுடன் எழுவேன்
எத்தனையோ வேலைகள்
எனக்காக காத்திருக்க
எனக்கான வேலைகளை
எப்போது செய்வது…
எவர் எவரோ வேலைகளுக்கு
நான்தான் இலவச
இணைப்பாக்கும்
கண்ணாடியில் என் பிம்பம்
பரிதாபமாய்ப் பார்க்கும்
எடுத்துச் சொல்ல வேண்டும்
இன்றைக்காவது…
அடுப்படியில் திட்டம்
பலமாய் எழுதப்படும்
இன்றும்…
அலுவலக வேலைக்கும்
ரிசேச்”என வத்ததுக்கும்
நேரம் பறக்க
விட்டால் போதும் என்றபடி
பேனையையும் விட்டு
வீட்டிற்கு வந்து
எல்லாம் முடித்து
|அப்பாடா
எழுதலாம் என்ற…
நினைப்பே களைப்பாகி
இல்லாத பேனை தேட
பேனை இல்லை
இதுவே களைப்புக்கு
மருந்தாக
அடுப்படியில் திட்டம்
இன்றாவது கட்டாயம் – என அடுத்தநாளும்
எழுதப்படும் அகப்பையுடன்;