Thanks To…http://www.wsws.org/tamil/articles/2015/dec/151225_nope.shtml
இந்த விடுமுறை காலத்தில், உலகெங்கிலுமான மக்கள் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அவர்களது தனிப்பட்ட நல்லெண்ணம், ஏதோவிதத்தில், குறைந்தபட்சம் கொஞ்சமாவது, உலகைப் பீடித்துள்ளக் களங்கங்களிலிருந்து அதை தூய்மைப்படுத்தும் என்ற தொலைதூர நம்பிக்கையில், அவர்களுக்குள் பரிசுகளையும் மற்றும் வாழ்த்து அட்டைகளையும் பரிமாறிக் கொண்டு, இன்னும் கொஞ்சம் அதிகமாக சிரிக்க முயல்வார்கள்.
இந்த உள்ளார்ந்த உணர்வுகள், நிச்சயமாக, பாரிய உத்தியோகபூர்வ ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் சீண்டிவிடப்படுகின்றன. உலகின் பெரும்பகுதிகளில் விடுமுறை காலத்தில் ஒரு வணிக அங்காடிக்கோ அல்லது விமான நிலையத்திற்கோ விஜயம் செய்யும் எவரொருவரும், ஒலிபெருக்கிகளில் “பூமியில் சமாதானம், மனிதர்களுக்குள் நல்லெண்ணம்” என்று ஒலிக்கும், அவற்றைக் கூறுவதற்காகவே “கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை” ஒலிக்கும் கிறிஸ்துமஸ் உபதேசப் பாடல்களைக் கேட்கலாம்.
இந்த விடுமுறை காலம் எப்போதுமே அரசியல் ஸ்பாதகத்தின் சேவைக்கு அழுத்தமளிப்பதற்குரிய ஒரு காலமாக இருக்கிறது, மதம் மற்றும் வெறித்தனமான வியாபார சந்தைப்படுத்தலுக்கு இடையிலான போட்டிகளிலிருந்து ஒரு “கிறிஸ்துமஸ் உற்சாகம்” உருவாக்கப்படுகிறது. ஆனால் நிறைய ஜனங்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியற்ற விடுமுறை காலமாகவும் இருக்கிறது. அதில், “கிறிஸ்துமஸ் உற்சாகம்” என்று முன்வைக்கப்படும் சகிப்புத்தன்மை மற்றும் நல்லெண்ண உத்வேகம் மிக வெளிப்படையாக யதார்த்தத்துடன் மோதுகிறது.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலக போர் முடிந்ததில் இருந்து, “உலகில் சமாதானம்” இன்மை இந்தளவிற்கு கூர்மையாக இருந்ததில்லை, அல்லது “மனிதர்களின் நல்லெண்ணம்” இந்தளவிற்கு இல்லாமல் போனதும் இல்லை. போப் தொடங்கி ஜோர்டன் இளவரசர் வரையில் நியூ யோர்க் டைம்ஸ் தலையங்க பக்கம் வரையில், எண்ணிறைந்த பொது பிரபலங்கள், மூன்றாம் உலக போர் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவிக்கின்றனர்.
அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் டிரோன்கள் மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவை மொய்க்கின்றன, அவை மில்லியன் கணக்கான மக்கள் மீது குண்டுவீசி, படுகொலை செய்து, கண்மூடித்தனமாக காயப்படுத்தி, அவர்களது வீடுகளிலிருந்து அவர்களை விரட்டி வருகின்றன. பத்திரிகை செய்திகளின்படி, ஜனாதிபதி ஒபாமா சிரியாவில் மக்கள் நிறைந்த பகுதிகளில் குண்டுவீசுவதை இன்னும் அதிகளவில் விரிவாக்கும் திட்டங்களைக் குறித்து யோசிக்க அவரது விடுமுறையைச் செலவிட இருக்கிறாராம், இது பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இன்னும் துரிதமாக அதிகரிக்கும்.
முதல் இரண்டு உலக போர்களின் சண்டையிட்ட ஒவ்வொரு பிரதான தேசமும், மீண்டும் போர்பாதையில் இறங்கியுள்ளது. ஜேர்மனி மற்றும் ஜப்பான், முறையே ஐரோப்பிய கண்டத்தில் மற்றும் கிழக்கு ஆசியாவில் அவற்றின் செல்வாக்கை மீளஸ்தாபிதம் செய்ய துடிப்போடு மீள்இராணுவமயமாகி வருகின்றன.
போர் மற்றும் வறுமையால் இடம்பெயர்த்தப்பட்ட மில்லியன் கணக்கான மனிதயினம் ஒவ்வொரு இடத்திலும், முறுக்கிய கம்பிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் நாடுகளால் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஐந்து மில்லியன் பேர் அவர்களது வீடுகளை விட்டு தப்பியோட நிர்பந்திக்கப்பட்டனர், இத்துடன் மேற்கத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட மத்திய கிழக்கு போர்களின் விளைவாக ஐரோப்பாவில் ஒரு மில்லியன் பேர் தஞ்சம் கோரியுள்ளனர்.
சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகளுக்குச் சுய-பாணியிலான அரண்களாக நிற்கும் இந்த இதே சக்திகள், உதவி கோரி வெள்ளமென வந்த இந்த நிராயுதபாணியான மக்களுக்குத் தங்களின் வெளி எல்லைகளை மூடியும் மற்றும் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் ஏகியன் கடல் வழியாக அவர்கள் பாதையைக் காண நிர்பந்தித்தும் விடையிறுப்பு காட்டுகின்றன. இப்பாதையில் ஐரோப்பாவிற்குள் கடந்து வர முயன்ற 3,000 க்கும் அதிகமானவர்கள் இந்தாண்டில் மரணமடைந்துள்ளனர், இதில் 1,000 க்கும் மேலானவர்கள் குழந்தைகளாவர்.
பாரிய பெருந்திரளான மனிதயினத்தைப் பொறுத்த வரையில், இந்த கிறிஸ்துமஸ் “மகிழ்ச்சியானதாக” இருக்காது. உண்மையில், சமீபத்திய தசாப்தங்களிலேயே எந்தவொரு கிறிஸ்துமஸூம் இந்தளவிற்கான மக்களுக்கு இந்தளவிலான வறுமையோடு இருந்திருக்குமென கற்பனை செய்வதும் கடினம் தான்.
அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களைப் பொறுத்த வரையில், அவர்களது நண்பர்களுக்கும் மற்றும் விருப்பத்திற்குரியவர்களுக்கும் விடுமுறை அன்பளிப்புகளை வாங்கிக் கொடுக்கும் சந்தோஷம் கூட வறுமையால் தடுக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு ஆண்டாக இருக்கும்.
உலக நிதியியல் மையமான அமெரிக்காவை விட இது வேறெங்கும் இந்தளவிற்கு உண்மையாக இருக்காது, இங்கே ஐந்தில் ஒரு அமெரிக்கர் உணவு-பாதுகாப்பில்லா குடும்பங்களில் வாழ்கிறார் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் ஒரு விடுமுறைகால உணவுக்குப் போதிய பணமின்றி அத்தனையையும் துடைத்தெடுக்க போராடுவார்கள். ஊடகங்கள் பெருமைபீற்றும் மொத்த அறநெறி “கருணையைப்” பொறுத்த வரையில், டெக்கன்சிய மட்டத்திலான கொடூர வறுயை மேலோங்கிய சமகாலத்திய அமெரிக்காவை விட அதிக இரக்கமற்ற சமூகத்தை ஒருவர் அரிய விதத்தில் கற்பனை செய்து பார்க்கலாம்.
“அமெரிக்க கிறிஸ்துமஸின்” ஒரு பொருத்தமான அடையாளமாக, Idaho நடுநிலை பள்ளியின் ஒரு உணவுவிடுதி தொழிலாளர், பசியால் வாடிய ஒரு குழந்தைக்கு இலவசமாக உணவு வழங்கினார் என்பதற்காக “திருட்டு” என்று கூறி வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் உள்ளூர் செய்தி நிலையத்திற்குக் கூறுகையில், “எனது இதயம் வலிக்கிறது” என்றார். “நான் உண்மையிலேயே எனது வேலையை நேசித்தேன், நான் மீண்டும் அதை செய்ய மாட்டேன் என்று என்னால் கூறவியலாது,” என்றார்.
உலகெங்கிலும், அரசாங்கங்களும் ஊடகங்களும் தேசியவாதம், வெளிநாட்டவர் விரோத உணர்வு, வகுப்புவாத வெறுப்பு மற்றும் பீதியுணர்வைத் தூண்டிவிடுவதன் மூலமாக இரக்க உணர்வை எதிர்கொள்ள முனைந்துள்ளன. அமெரிக்காவில், முன்னணி குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒரு பகிரங்கமான வெறியில் உள்ளார். மெக்சிகர்கள் கற்பழிப்பாளர்கள் என்றும், அந்நாட்டிற்குள் முஸ்லீம்கள் நுழைவதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்றும் அறிவிக்கிறார். ஒரு பிரிட்டிஷ் முஸ்லீம் குடும்பம் டிஸ்னி வோல்டைக் காண விமானத்தில் வந்திறங்கியதும் இம்மாதம் வெளியுறவுத்துறையால் எந்தவித விளக்கமும் இல்லாமல் அவர்கள் தடுக்கப்பட்ட போது, டோனால்ட் ட்ரம்ப் இன் வீராவேசம் நடவடிக்கையில் வெளிப்பட்டது.
ஜேர்மனியில், “வரவேற்கும் கலாச்சாரத்தை” ஊக்குவிப்பவர் என்று கருதப்படும் அங்கேலா மேர்க்கெல், “பன்முக கலாச்சாரம் ஒரு மோசடி” என்று அறிவிக்கிறார். பிரான்சில், அரசியலமைப்பிற்குள் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வர முனைந்துவரும் ஆளும் சோசலிஸ்ட் கட்சி, அவர்களது குடியுரிமையிலிருந்து இரட்டை குடியுரிமை முறையை நீக்கும் அதிகாரத்தைப் பெறுவதற்கு உறுதிபூண்டுள்ளது, இந்த நடவடிக்கை கடைசியாக இனப்படுகொலையின் போது விச்சி ஆட்சியின் கீழ் பாரியளவில் யூதர்களை வெளியேற்றுவதற்காக பிரான்சில் பயன்படுத்தப்பட்டது.
2015 இல் உலகைக் கண்டுற்ற எவரொருவரும், 2016 ஆம் ஆண்டு முன்னொருபோதும இல்லாதளவிற்கு வன்முறை மற்றும் சமூக வறுமையின் ஓர் ஆண்டாக இருக்குமென்று எதிர்நோக்குவார். ஆனால் உலக போரின் விளிம்பிற்கு உலகை உந்திவரும் அதே நிகழ்வுபோக்குகள், தொழிலாள வர்க்கத்தின் சமூக போராட்டங்களுக்கும் உயர்வளித்தே ஆக வேண்டும்.
நிதியியல் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் கருத்து-பிரச்சாரகர்கள் மற்றும் தொழில்ரீதியிலான பொய்யர்களைப் போலில்லாமல், மனிதயினத்தின் பெருந்திரளான உழைக்கும் மக்கள் உலகெங்கிலுமான சமாதானம் மற்றும் சகோதரத்துவ கருத்துக்களைத் தீவிரமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு நல்லுலகின் மீது நிஜமான நம்பிக்கை வைத்து போராடுகின்றனர்; அதற்காக போராடுவார்களும் கூட. வரவிருக்கும் காலத்தில், மில்லியன் கணக்கானவர்கள், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து ஒரு சர்வதேச அடித்தளத்தில் சமூகத்தை மறுஒழுங்குபடுத்தும் ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டம் மட்டுமே “பூமியில் சமாதானத்தை” எட்ட ஒரே வழி என்பதை முடிவு செய்வர்