பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டாம் என பெற்றோர்களை ஜேர்மனி பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.கடற்கரையில் அரை நிர்வாணமாக விளையாடும் வடக்கு Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Hagen நகரை சேர்ந்த பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெண் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளாக உள்ளபோது புகைப்படங்களை இணையத்தில் பதிவது ஒரு வித உற்சாகமான விடயமாக இருக்கும். ஆனால், குழந்தைகள் வளரும்போது அவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் அதிக நிலவி வருகின்றன மேலும் ,பெண் குழந்தைகளை குறி வைத்து பாலியல் ரீதியாக மோகம் கொண்டுள்ள நபர்களின் கைகளில் அந்த புகைப்படங்கள் கிடைத்தால் அவற்றை அவர்களின் சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கென தனி உரிமையும் சுதந்திரமும் இருப்பதால், அவற்றை சீர்குழைக்கும் வகையில் அவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவது அவசியமற்ற பிரச்சனைகளுக்கு கொண்டு சென்று விடும். பிரச்சைனகளை நாமே வலிய தோற்றுவித்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் ஏற்றுவதை பெற்றோர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
பொலிசாரின் இந்த கருத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது