துக்கமான மாலைப்பொழுது

சலனி இலங்கை

பதட்ப்பட்டு நொருங்குகிறது
கரங்களில் ஏந்திய பின்னேரம்
இசையின் மெல்லிய விளிம்புகளால்
சட்டகப்படுத்திவிட்ட இந்த நாளின் பதட்டம்
குறுக்குச்சந்துகளுக்குள் நெருக்குப்படுவவதும்
பின் ஒளிவதுமாய்…

ஒற்றை மரத்தின் கீழாயமர்ந்த
துக்கம் கனமேறி பாரிப்பதும்
எழுந்து பின் அமர்வதுமாய்
இன்றைய நாளின் சலிப்பு
திரவத் துளிகளால உயிரின்
உள்ளடுக்குகளை
நிரப்பத் துடிக்கிறது
அதன் அலுப்பில் கலைந்துபடும்

பின்னேரம் துக்கமான மனிதர்களை பார்க்க
திறனின்றி மூடுகிறேன் கண்களை
அன்றாடம் தரம் பறத்தலகளிலிருந்து
ஓயும் வாழ்வு அவ்வளவு
இன்பத்துக்குரியதல்லதென தெரிந்தும்
விடியும் நாட்கள் இன்னுமின்னும்
நீளமாய் தெரிகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *