யாழினி – யோகேஸ்வரன்
பெண் என்றொரு பொம்மை நான்
பேசவும் கேட்கவும் முடியா
பெயரற்றவளாகி விடுகின்றேன்
எதையும் பெயர் சொல்லி
அழைக்க முடியா
குரலற்றவளாகி விடுகின்றேன்
நட்சத்திரங்கள் அற்ற வானமாய்
இருண்டு கிடக்கிறது வாழ்வு
வாடிப் போன மலர்களுக்குள்
கருகிய வாடை வீசிச் செல்கிறது
மாறி வரும் பகல் இரவன்றி
இரவை மட்டுமே கண்டு
மரத்துப் போகிறது மனது
எனக்கு மட்டுமேயான வாழ்த்துக்கள் இவை
வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில்
சாவு மட்டுமே உயிர்ப்போடு உள்ளது.