– யாழினி யோகேஸ்வரன்
இருளின் ஒளியில்
மினுங்கிக் கொண்டிருக்கிறேன் நான்
கடலின் அடியில்
மிதந்து கொண்டிருக்கிறேன் நான்
மேகக் கூட்டங்களில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்
எந்த வாயிலும் எனக்கானதாக
அமைந்துவிடவில்லை – ஆயினும்
யன்னல்கள் கூட -உட்புகமுடியா
கம்பிகளை முறுக்கோடு
இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது.
இரு வீங்கிய சுவர்களுக்கிடையில்
நீட்டவும் முடக்கவும் முடியா
மனதின் ஆழத்தோடு
ஒடுங்கிக் கிடக்கின்றன
வார்த்தையிழந்த பேச்சுக்கள்
வரங்களற்ற சாபங்கள் மீதமாய்
குவிந்த வண்ணம் உயிரோடெனை
அச் சிறிய இடைவெளிக்குள்
மெல்ல அழைத்துச் செல்கிறது
தேடல்கள் எதுவுமற்று
உணர்வுகள் மட்டும்
வெறுமனே கிடக்கின்றன
தரையில் நீட்டி நிமிர்ந்தபடி…
அசத்தலான வரிகள்…