எஸ்தர் விஜித்நந்தகுமார் திருகோணமலை -(மலையகத்திலிருந்த)
காலத்தின் வலிகளுடனும் தோற்றுப் போன
விரக்தியுடனும் சுடலைகளில் இன்னும்
புகைந்துக் கொண்டிருக்கும்
சடலங்கல் எங்கும் கோர விடுதலையின்
பிணவாடை ஆறவில்லை.
நெடிய துயரங்கள் இதயக்காடுகளில்
படர்ந்து விட்ட நிலையில்
மாங்காய் தேசத்தின்
கசாப்பு வேர்கள் கசப்பை சுமந்து படர்கின்றது.
முன்பொருக் காலத்தில் வயலும் பனைக் காடும்
பசுமையாய் தெரிந்தது.
பசுமைக்கெல்லாம் கறுப்புப் புகைத்தூவியது யாரோ?
தலை நிமிர்த்தி வாய் பிளந்து நிற்கின்றோம்.
நிரந்தர விடுதலையால் அதனை
நிரப்புவர்கள் யாhர் என்று?
எமது தலைகளுக்கு மேலே
வல்லூறுகளாய் அவை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன
ப+ர்வ
நிலங்களும் எல்லைகளும் இரவோடிரவாக
காவுக்கொள்ளப்பட்டது.
போகட்டும்,
தாளாத கணங்களில் தான்
ஆயுத யாகம் செய்ய தலைப்பட்டோம்.
தலைகளற்ற தழிழ் பயில்வான்களிடம் அடகு வைக்க எங்களிடம் கோவணங்கள் கூட இல்லையே சாமி.
தர்க்கங்களால் மாத்திரமே
தழிழர் தரப்பின் மதுக் கோப்பைகள் நிரம்பி
நுரைக்கின்றது.
ஈழத்தின் வெடிகுண்டுகளை
செயலிழக்க வேற்று தேசத்தை நோக்கி பயணிக்கின்றார்கள்
திரும்பி வருகிறார்கள் கோமாளிகளாய்.
அடைமழைக் காலமொன்றில் வாளாக வெளியில்
தோழியைக் காணவில்லை.
தனது கையில் ஆயுத விரலொன்று
வளர்ந்துவிட்டது
என காட்டுக்குள் மறைந்துவிட்டாள்.
தயவு செய்து தழிழ் பயில்வான்களே
அரசியல் அறம் அலட்ட வேண்டாம்.
வாதாடும் உங்கள் சத்தத்தின் நடுவில்
கொடும் நடு நிசியில் வல்லூறு ஒன்று துப்பாக்கி சன்னமிட்ட உடலொன்றை குதறிக் கொண்டிருக்கலாம்.
தெரியுமா உங்களுக்கு.
காத்திருந்து காத்திருந்து களைத்த
நாம்
ஆடையில் ஒட்டிய மண்ணை
உதறி விட்டு ஆயுதங்களுட்ன் புறப்படுகின்றோம்.
தலைவர்களே இரவுக் கோணாங்கிகளே,
எங்கள் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டது.
எங்கள் பெண்களின் யோனிகள் குதறப்பட்டவைகள்.
கருவறைகளில் நெடிய இரத்தவாடை
முலைகள் தோறும் காயங்கள் நாறுகின்றது.
இருந்தும் எமது கனவுகள் வெள்ளைபோளத்தில் தயாரிக்கப்பட்டது.
காலம் கடந்தும் மணம் பரப்பும்
தழிழ் தலைகள் இன்று
முக்காடிட்டு குருட்டு இரவுகளில்
தப்பியோடுகின்றார்கள்.
வட்டுக்கோட்டையும்
பண்டா – செல்வாவும்
திம்பு அலட்டல்களும்
ஒஸ்லோவின் ஒடிந்த உடன்படிக்கைகளும் யுத்தம் நிறுத்தா
யுத்த நிறுத்தமும்
விடாமல் துரத்துகின்றது.
இன்று பண்டாவும் செல்வாவும்
பரம எதிரிகளாக்கபட்டார்கள்.
செய்த பாவங்களுக்காக
தட்டுபடும் பிரேதங்களின் கால்களையாவது நக்குங்கள்!!
ஓ என் வராற்றுத் துரோகிகளே இங்கே வாருங்கள்!!
என் மண்ணின்
உருவத்ததை நான் வரைய வேண்டும் சந்தியிலும் காடுகளிலும் வெடித்து சிதறிடும் என் உறவுகளின் உருவத்தை வரைய வேண்டும்.
ஏனெனில் நாளை என் வரலாறு திரிவுப்படும் என்பதை நானறிவேன்.
ஓ வரலாற்றுத் துரோகிகளே வாருங்கள்.!!
வேட்கை கவிதையொன்று வேய்கின்றேன்.
மன்னிக்கவேண்டும்.
அவ்வளவு எளிதல்ல என் துயரங்களை பாடலாக்கவோ,
கவிதைகளாக்கவோ.
என் பாடலிலும், வன்கொடுமைகளிலும்
மிதிப்பட்ட தழிழ் இனமே எங்கே இருக்கின்றீர்கள்?
வாருங்கள் எமது வேட்டைக்காலம் முடிந்த விட்டது.
புலம்பெயர்ந்தவன் எனக்கொரு முகவரிக் கொடுக்க விருப்புகின்றான்.
வேண்டாம்!! வேண்டாம!!;
எனது காயங்களில் இருந்து வாள்களை உருவி விட்டேன்
எனது எதிர்காலம்
என் துயரங்களை நான் விபரிப்பேன்
எங்கள் துயரம் தோய்ந்த உடைகளில்
இரத்தம் இன்னும் காயவில்லை.
இனி வரும் விடியலில்
துயரத்தை துடைத்து நம்பிக்கை பயிரிட விளைகின்றேன்.
விடுதலையும் சுதந்திரமோ மிக அருகில் மிக அருகில்
வயலின் பச்சை நிறத்தில் உனக்nhரு வீடுக் கட்டுவேன்.
தலையற்ற தலைமைத்துவத்தை நான் இனி பார்ப்பதில்லை.
தலைகளை உருவாக்கப் போகின்றேன்.
நானொருக வரலாற்றுக் குயவன்.
முள்ளுக்கம்பியின் பின்னாலிலிருந்து மூத்திரம் பெய்த காலம் கடந்துவிட்டது.
வரலாற்றுத் துரோகங்கள் மீது காறி உழிழ்கின்றேன்.
இனியாவது கழுவி வெளுக்கட்டும்.
துப்பாக்கியின் பிடியிலிருந்த என் கைகளை விலக்கிவிட்டேன்.
;
ஒரு சமூக விடுதலையின்
அடையாளத்தை அளப்பது துப்பாக்கி அல்ல.
அது ஆன்மாவைப் பொறுத்தது.
எங்கள் இழப்புகளிலும் சிதைவுகளிலும்
நிழல்கள் வசந்தங்கள் வளரட்டும்.
தேவதையின் கனவுகள் என் பையிலுள்ளது.
வாழ்வு இம்மண்ணில தான் மீந்துள்ளது.
உயிர்த் தியாகிகளின் ஒவ்வொரு துளியும் எனது வரலாற்று அகராதியில் மட்டும்.