பொன்னையா சுதர்சினி (காவத்தை.இலங்கை)
குளிர் குத்தும் விடிகாலை
விரைந்து – குளிர் பரவும்
இரவில் நுழைவேன் வீடு
பஸ்ஸிற்குள் சுயத்திற்கான போர்….
பசிஇ தாகம, களைப்பு, கவலை
இடையில் இவைகளின்
ஆட்டம்…களைப்பில் படுப்பதா?
கவலை துறந்து படிப்பதா?…
அனைத்தும்; உடைத்து
புத்தகம் விரிக்கையில்
அடுத்த வீட்டு புதிய சீடி
அலறும்…
நாளைய பரீட்சை எனை
பயமுறுத்தும்
இதுவிடுத்து – செறிவுமிகு
“தண்ணீர்” சண்டை
ஊர்த் திருவிழா…
திருமணங்கள்…..
குடும்பச் சண்டை, குத்து, வெட்டு
என் வீட்டு “கொலவாரிகள்”
விடிகாலை எழுவோமென
சேவலுக்கு முன் விழித்தாலும்
அதற்கு முன் நாறும்
என் முற்றத்து குழாயில்
தண்ணீர்ப் போர்
காயாத சீருடை எனைச் சுடும்
பரீட்சை எனை பயமுறுத்தும்
அழுகையோடு பள்ளிநோக்கும்
பாதங்கள்;
லயமுறையின் கூட்டுவாழ்க்கை
இலக்கு நோக்கிய இளையவருக்கு
நரகம்……
good luck nice poem
regards from
Esther vijith
Trincomalee
Srilnka