கவிதை, அறியாமையிலிருந்து அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்குக் கவிதை உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகின்றது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. . |
சாமான்யமாக உணர்த்துவதிலும் பார்க்க உணர்ச்சி பூர்வமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ள கவிதைகள் உண்மையில் அதிர்வூட்டி நிற்கின்றன இத்தொகுதியிலுள்ள ~உடைந்த இதயம்| எனும் கவிதையை உற்று நோக்கினால், அது அநுபவமா? அனுமானமா? இயல்பு நவிற்சியா? இவையெல்லாம் கலந்தவையா, இப்படி எத்தனையோ அறிவுயர் சிந்தனைகளை எழுப்பி நிற்பதை உணரலாம். இவ்விதமே இவரது அநேகமான கவிதைகள் உணர்ச்சிபூர்வமான சிந்தனைச் சிதறல்களைப் பரப்பி விரிக்கின்றன. மதிப்புமிக்க மனிதகுண வல்லமைகளையும், வரட்சிமிக்க அவலங்களையும் மறைமுகமாகவும், நேர்முகமாகவும் எடுத்தோதும் சிறப்பினை இக்கவிதைகள் பெறுகின்றன.
சாதாரண பிரயோகத்திலிருந்து விலகுவதும், திருத்துவதும் கவிதைக்குரிய பண்பல்ல. சொல்லணிக்குள்ள குணமென அவற்றைக் கருதலாம். சொல்லணிக்குரிய செயற்பாட்டைக் கவிதைக்குள் இழுத்து வாசிப்போரை இணையவைத்து உணர்ச்சி ஊட்டும் பண்பை இக்கவிதைகள் செய்கின்றன. இக்கவிதைக்குரிய ஆசிரியர் கவிதையுலகுக்குப் புதியவராகலாம். ஆனால், கவிதைக்கு இவ்வாசிரியர் புதியவராகத் தோன்றவில்லை. இந்த முடிவுக்கு வருவதற்கு இத்தொகுதியின் அடக்கமே காரணமாகின்றது
.
ஒன்றைச் சொல்லி, மற்றொன்றை உணரச் செய்யும் தன்மையை இக்கவிதைகள் தந்தாலும், நேர்நின்று சொல்லும் திறத்தால், பொருள் விரிவுபட்டு நிற்பதை உணர்ச்சிபூர்வமாக அறியலாம். இத்தொகுதி, இவ்வாசிரியரின் முதல் தொகுதி. முன்னேற்றத்திற்குரிய வழி விரிந்து நிற்பதால் எதிர்காலம் இவரை இத்துறை மிக உயர்த்தும் என்பதில் நம்பிக்கையுண்டு என முகவுரை எழுதிய கவிஞர் ஏ. இக்பால் றிபாயா மன்ஸில்|-( தர்கா நகர்)தனது முகவுரையில் இவ்வாறு கூறியுள்ளார்
வெளியீடு- இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை,
5டீ, 1ம் சப்பல் ஒழுங்கை,
கொழும்பு- 06
தொடர்புகட்கு
poetrimza@yahoo.com