சுகிர்தராணி
சமூக, கலை இலக்கியத் தளங்களில் இயங்கும் பெண்படைப்பாளிகள் மீது சக படைப்பாளிகளும் மத அடிப்படைவாதிகளும் தொடுக்கும் ஒழுக்கம் மற்றும் கண்காணிப்புச் சார்ந்த வன்முறைகள் எவ்வித நியாயங்களுமின்றி தொடர்ந்து நிகழ்த்தப் படுகின்றன. அதன் நீட்சியாக கடந்த பல நாட்களாக, எழுத்தாளர் ஷர்மிளா செய்யித் மீது இணையத்தின்வழி நிகழ்த்தப்படுகின்ற உளவியல் மற்றும் வக்கிரமான செயற்தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்,அவரின் படைப்புகள் ஏற்படுத்துகின்ற பதற்றங்களை இனம்காணும் வகையிலும் இந்நிகழ்வு பெண்படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் பெண்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள். இனி எங்கள் படைப்புகளும், கலைச் செயல்பாடுகளும் தொடர்ந்து இந்தச் சமூகத்தைப் பதற்றமடையச் செய்துகொண்டே இருக்கும். நாங்கள் பதற்றப்படுகிறவர்கள் அல்ல… பதற்றப்பட வைக்கிறவர்கள்.
தொடக்கம்: பறையிசை- புத்தர் கலைக்குழு
தலைமை: ஓவியா
பங்கேற்பாளர்கள்
சுகிர்தராணி
சு தமிழ்செல்வி
கவின்மலர்
பிரேமா ரேவதி
கோம்பை அன்வர்
அஸ்மா
ஆளூர் ஷாநவாஸ்
எச். பீர்முகமது
கவிதை வாசிப்பு
சந்திரா
கவிதா முரளிதரன்
விலாசினி