புதியமாதவி, மும்பை.
பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி.ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ்,சி.வி.ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் – அறிவியலில் பெண்கள் இல்லையா இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா.?
ஜனவரி 2005ல் ஒரு கருத்தரங்கில் ஹார்வர்ட் பல்கலைத் தலைவர் லாரன்ஸ் ஸம்மர்ஸ்பெண்கள் குறித்து சில கருத்துகளைச் சொன்னார். அதற்கு நிறைய எதிர்வினைகள் இருந்தன. அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார்?
பெண்களின் குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்ய முடியாத அவள் நிலை, பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமை இதெல்லாம் பெண் விஞ்ஞ்சானிகள் வராமல் இருப்பதற்கு காரணம் என்று அவர்
சொல்லி இருந்தால் சமூகப்பார்வையில் அவர் சொன்னது சரிதான் என்று ஒத்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை.
வேறு வார்தைகளில் சொன்னால் பெண்களுக்கு எதிரான பாரபட்சமோ அல்லது நிறுவனங்களின் செயல்பாடுகள், கொள்கைகள், அறிவியல், பொறியியலில் பெண்கள் அதிக அளவில், குறிப்பாக உயர் பதிவிகளில் இடம் பெறாததற்கு காரணமல்ல. இயற்கையாகவே பெண்கள் சிலவற்றில் ஆண்களை விட திறன் குன்றியவர்கள். சம்மர்ஸ் ஒரு சாதாரண நபராக இருந்து இதைக் கூறியிருந்தால் இவ்வளவு தூரம் சர்ச்சை எழுந்திராது. அவர் உலகில் முதலிடத்தில் உள்ளதாக கருதப்படும் பல்கலையின் தலைவர்.இதற்கு முன்பு அமெரிக்க அரசிலும், அதற்கு முன்பு உலக வங்கியிலும் உயர்பதவிகள் வகித்தவர்.
பெண்களைப் பொருத்தவரை அவர்கள் பங்கேற்ப்பிற்கு பல காரணிகளும் தடையாக உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும், குடும்ப நிர்வாகம் செய்யவும் படைக்கப்பட்டார்கள் என்ற கருத்து.இதன்படி பெண்களின் விதியை அவர்கள் உடலே தீர்மானித்துவிட்டது. இதற்கு மாறாக செயல்படுவது என்பது இயற்கைக்கு முரணானது, சமூக அமைப்பிற்கே எதிரானது. ஆண்டவன் பெண்களை இப்படித்தான் படைத்திருக்கிறான் என்ற கருத்து 19 ஆம் நூற்றாண்டு வரை சிந்தனையாளர்கள் மத்தியில் நிலவியது. அரிஸ்டாடில் கூட ” menstruation is a sign of female inferiority என்று தான் சொன்னார்.
ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை பெரும்பான்மையான பல்கலைகழகங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இத்தகையப் படிப்பிற்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என்ற கருத்தும் நிலவியது. அவர்களின் சிறிய மூளைக்களுக்கு அறிவியல் உகந்ததல்ல எனவும், அவர்களுக்கு அறிவாற்றல் இல்லை எனவும் கருதப்பட்டது. மேலும் பல்கலையில் படிப்பது அவர்கள் உடல்நலத்திற்கு உகந்தது அல்ல எனெனில் உயர்கல்வி அவர்களது இனப்பெருக்க திறனைப் பாதிக்கும் என்றும் வாதிடப்பட்டது. 18ம் நூற்றாண்டில் மத்தியதர வர்க்கம் வலுப்பெற்றது. உயர்குடிப் பெண்கள் சலூன்கள் என்ற பெயரில் விவாத அரங்குகளை நடத்திய போது அது சமூக விரோதச் செயலாகவும், பெண்மைக்கே இழுக்கு எனவும் விமர்சிக்கப்பட்டது. மேலும் அறிவியல் ஆய்வு என்பது ஆண்தன்மையுள்ள செயல்பாடு அதில் பெண்களுக்கு இடமில்லை எனவும், அவ்வாறு பெண்கள் அறிவியலில் ஈடுபடுவது பெண்கள் ஆண்களாகவதற்கு ஒப்பானது என்றும் காரணங்கள் கூறப்பட்டன.பெண்களின் வேலை குடும்ப நிர்வாகம், குழந்தைகளுக்கு கல்வி என்று வரையரை செய்த பின் பெண்களின் இடம் வீடு என்று வகுக்கப்பட்டது.
வரலாறு, அறிவியலை ஒரு சில மேதைகளின் உழைப்பினால், அறிவாற்றலால் மட்டும் உருவான ஒன்று என்று சித்தரிப்பதில்லை. ஒரு ஆர்க்கிமிடிய புள்ளியிலிருந்து அறிவியல் செய்வதில்லை. பெண்களின் பங்களிப்பு குறித்த அக்கறைகள் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு குறித்து போதுமான தகவல்கள் இல்லை. பெண்கள் ஆதிகாலத்தில் விவசாயத்திலும், வேட்டையாடுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளனர். புதிய பயிரின வகைகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ஆனால் முதல் பெண் அறிவியலாளர் யார் என்பது நமக்குத் தெரியாது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் பண்டைய கிரேக்கத்தில் பெண் தத்துவஞானிகள் இருந்திருப்பது தெரியவருகிறது. உபநிடதங்களிலிருந்து கார்கி என்ற பெண் தத்துவஞானி இருந்திருப்பதும் தெரிகிறது.
ஹிப்பேஷியா – இவர் கணித அறிஞர், தத்துவஞானி.இவர் கருவிகளை உருவாக்கியவர். தியொன் என்ற கணிதவியலாளரின் மகளான இவர் கணிதமும், இயற்கைத் தத்துவமும் கற்பித்தார்.கணிதம், வானியல் குறித்து நூல்களுக்கு உரைகள் எழுதியிருக்கிறார்.சமகால தத்துவஞானிகளிடம் உரையாடியவர். நீர் வடிகட்டும் கருவி, கன அடர்த்தியை அளக்கும் கருவி உட்பட மூன்று கருவிகளை உருவாக்கியவர். எகிப்தில் அலெக்சண்டிரியா நகரில் வசித்தார்.அப்போதைய மத்தியதரைக் கடல் பகுதியில் இயற்கைத் தத்துவத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த தத்துவவாதிகளில் ஒருவராக கருதப்பட்டார். சுதந்திர சிந்தனைக்கும், பகுத்தறிபிற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். தவறாக சிந்திப்பது சிந்திக்காமலே இருப்பதை விட மேலானது என்பதால் சிந்திக்கும் உரிமைக்கு முக்கியத்துவம் கொடு என்று எழுதினார். இவர் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு காரணங்கள் சரியாகத் தெரியவில்லை. சிரில் என்ற கிறிஸ்துவ பிஷப்பின் ஆதரவாளர்களால் இவர் கொல்லப்பட்டார் என்றும், உள்ளூர் அரசியல் காரணங்களால் கிறிஸ்துவர்கள் இவரைக் கொன்றனர் என்றும் கூறப்படுகிறது.கிறிஸ்துவர்களால் இவரது தத்துவம், புகழ் ஆகியவற்றை ஏற்க இயலவில்லை, மேலும் இவர் பெண்ணாக வேறு இருந்ததும் இவர் மீது பொறாமை ஏற்பட காரணமாக இருந்தது. எனவே சிரில் தன் ஆதரவாளர்களை கும்பலாக அனுப்பி அவரை கொலைச் செய்தான் என்று குறிப்புகள் கூறுகின்றன. தேவாலயத்தில் இவர் கொலைச் செய்யப்பட்டார் என்றும் குறிப்புகள் கூறுகின்றன. ஹிப்பேஷியா பிளாட்டோவின் தத்துவங்களின் அடிப்படையாகக் கொண்ட நவபிளாட்டோனியத்தை முன்னிறுத்தியவர்.ஏக இறைக்கொள்கை கொண்ட கிறித்துவர்கள் இவரைக் கொன்றிருக்கிறார்கள். பெண்ணியவாதிகளுக்கு ஹிப்பேஷியா மிக முக்கியமானவர்.எனவே பெண்களும்,தத்துவமும் குறித்த ஒரு ஜர்னல் ஹிப்பேஷியா என்ற பெயரில் வெளியாகிறது. அவரது நூல்கள் அழிக்கப்பட்டன, அலெக்சாண்டிரியாவில் இருந்த பெரும் நூலகம் தீக்கிரையானது.எனவே எஞ்சியிருப்பவை அவர் குறித்த குறிப்புகளும், வேறு தகவல்களும்தான். ஆனால் 18ம் நூற்றாண்டில் அவர் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்பட்டார். எனினும் அவரைக் குறித்த சில முக்கியமான நூல்கள் 1990களில்தான் வந்தன. இன்று ஹிப்பேஷியா ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறார்.
சடங்குகள் அனைத்தும் மூடத்தனமானவை. ஏனேனில் சடங்குகளைச் செய்யும் எவருக்கும் அதை ஏன் செய்கிறோம், எப்போது செய்ய ஆரம்பித்தோம் என்ற உண்மையை எடுத்துச் செல்ல தவறி இருக்கிறோம். அதனால் சடங்குகள் அனைத்தும் வெறும் சம்பிராதாயங்களாக இருக்கின்றன. இச்சம்பிரதாயங்களை மதங்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் போது ” ஏன், எதற்கு” என்ற கேள்வியைக் கேட்காதே என்ற அதிகாரமும் சேர்ந்துக் கொள்வதால் சடங்குகள் இன்று வெறும் சடங்குகளாகவே இருக்கின்றன. ஆனால் சடங்குகளின் காரணங்களை நாம் ஆராயப்புகுந்தால் இதுவரை திறக்காத சிலக் கதவுகள் திறக்கும். புரியாதப் புதிர்களுக்கு கூட விடைக் கிடைக்கும். மனித வரலாற்றின் கடந்த காலத்தின் சில முக்கியமானபுள்ளிகளை நாம் அடையாளம் காண முடியும். ஆனால் நாம் அப்படி செய்யத் தயாராக இல்லை. பெண்களின் கண்டுப்பிடிப்புகள் வரலாறு நெடுக வெறும் சடங்குகளாக மாறிவிட்டன. பெண் தான் நிலவையும் நிலவின் வளர்பிறை தேய்பிறை சுழற்சியை தன் மாதாவிடாய் நாள் சுழற்சியின் கணக்குடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்தாள்.
அதன் வழி நாள், கிழமை, திங்கள் என்ற நாட்காட்டியை உருவாக்கிய வானியல் அறிவின் வழிகாட்டி அவள். (பார்க்க என் கட்டுரை: நிலவுப் பெண்ணும் யோனி பீடமும்) மரம் செடி கொடிகளின் வளர்ச்சியைக் கவனித்தாள். விதைகளைப் பார்த்தாள் சேகரித்தாள் விதைகள் மண்ணில் விழுந்து முளைவிட்டு செடியாக வளர்வதையும் அவள் தான் கவனித்தாள். வேட்டைச் சமூகத்தில் ஆணுடன் வேட்டைக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்படும் தீட்டும் குழந்தைப் பேறும் அவளை வீட்டில் உட்கார வைத்தது. அப்போது அவள் ஆணின் வேட்டைக்கருவிகளை உருவாக்கினாள். கற்களை, மரங்களை கூர்மையாக்கி அவள் வேட்டை ஆயுதங்கள் தயாரித்ததுடன் அவள் தான் விவசாயத்தையும் கண்டுப்பிடித்தாள். அவள் கண்டுப்பிடித்த விவசாயம் ஏர் பிடித்து உழுத விவசாயத்திற்கு முந்திய விவசாயம். ஒரு குச்சியால் கட்டியான மண்ணைக் கிளறி அதில் விதைத்து ஆற்றுப்படுகையில் அவள் கண்ட விவசாயம். இன்றைக்கு ஆதிவாசிகளிடம் பெண்கள் விதைத்தால் தான் நன்றாக விளையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒருவர் இறந்தவுடன் அவர் உடலைப் புதைக்கும் போது அவர் பயன்படுத்திய பொருட்களுடன் அந்த உடலைப் புதைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு வருகிறது என்பதை நாம் எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பழமையான தொல்லியல் கண்டுபிடிப்புகளில் பெண் விவசாயத்தைக் கண்டுப்ப்டித்தாள் என்பதற்கான வலுவான ஆதாரமாக இருப்பது அவள் உடலைப் புதைத்த தாழிகள் தான். புதிய கற்காலத்தில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலுடன் அவள் பயன்படுத்திய hoes – முக்கூறுள்ள வேலாயுதத்துடன் புதைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில்ஆணின் உடலுடன் இந்த விவசாயக்கருவியான HOES புதைக்கப்படவில்லை என்பதையும்கவனிக்க வேண்டும்.
பச்சையம்மா, பச்சம்மா தெய்வங்களின் விவசாயத்தைக் குறிக்கும் தெய்வங்கள். goddess of crops. இக்கருத்து தான் உலகின் பிற நாகரிகங்களிலும் இருக்கிறது என்பது இன்னொரு சுவையானத் தகவல். கிரேக்க நாகரிகத்தில் தாய் தெய்வம் தான் கலப்பையைக் கண்டுப்பிடித்தாள் என்ற கதை உண்டு. பெண்ணே விவசாயத்தைக் கண்டுபிடித்தவள் எனற கருத்தை பல்வேறு ஆதாரங்களுடன் முன்வைக்கும் அறிஞர் அதொவசியோ adovasio இன்னொரு முக்கியமான கருத்தையும் முன்வைக்கிறார். பெண் தான் மொழியையும் கண்டுப்பிடித்தாள் எங்கிறாள்.
வெறும் விலங்குகளின் ஓசையை மட்டுமே மொழியாகப் பயன்படுத்துது வேட்டைக்காரனுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருந்திருக்கும் . ஆனால் பெண்ணுக்கு அதில் போதாமை ஏற்படுகிறது. எங்கெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அங்கே கண்டுப்ப்டிப்புகள் உருவாகும் வைதான் கண்டுப்பிடிப்புகளின் தாய் என்று இப்போதும் சொல்கிறோம்.
பெண்ணுக்கு ஏற்பட்ட இத்தேவைதான் அவள் கண்டுப்ப்டித்த மொழி. இக்கருத்தை முன்வைக்கும் அடோவசியோ உடலியல் ரீதியாகவும் தன் கருத்தை உறுதி செய்கிறார். எப்படி என்றால் பெண்ணின் மூளையும் ஆணின் மூளையும்
உடலுடன் இணைக்கப்பட்டிருக்கும் வகையில் உள்ள பெருத்த வேறுபாட்டைக் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக மூளையை ஒரு பல்ப் என்று வைத்துக்கொள்வோம். ஆணுக்கு மொழி பற்றிய புரிதல் அவனுடைய இடதுப்பக்க மூளையில்
இருக்கிறது, அவனுடைய இடதுபக்க மூளைக்கு இரு வொயர் கனெக்ஷன் இருக்கிறது, பெண்ணுக்கு மொழி பற்றிய புரிதல் இடது வலது என்று அவள் மூளையின் இரண்டு பக்கமும் இருக்கிறது. அவளுடைய மூளையின்
இப்பகுதி 3 வொயர்களால் இணைக்கப்பட்டுள்ளது.
(It’s meant to be provocative,” he said. His reasoning is clear enough, though: Paleolithic females were expected to care for offspring. Communication between mother and child was essential. Communication between different mothers was also important, not just to ease the rigors of child-raising, but to share information about the availability of food, water or shelter. “It’s not unnatural to assume,” said Adovasio, “that communication for females was more important (than it was for males) and that there was a selective advantage for language among females. They would have developed skills proporti(onate to their demands and needs.”
He points to a bit of biology to buttress his contention: Male and female humans brains are wired differently. Most language function in a male brain occurs in the left hemisphere. In females, it happens in both sides. Females have three distinct pathways connecting the two hemispheres; males have two. ) அடோவசியாவின் கருத்து விவாதத்திற்குரியது தான் என்றாலும் முழுவதும் புறக்கணித்துவிட முடியாது. அதன்பின் சமையல் அறை. இன்றுவரை பெண்ணின் சமையலறை கண்டுப்பிடிப்புகள் கண்டுப்பிடிகப்புகள் என்ற அந்தஸ்த்தைக் கூட பெறுவதில்லை. இட்லியும் புட்டும் ஆப்பமும் களியும் சட்னியும் அப்பளமும் வத்தலும் ரசமும் சாம்பாரும் கேக்கும் சாக்லெட்டுகளும் என்னவோ தீடிரென ஒரு தியரியை எழுதி கண்டுப்ப்டிக்கப்பட்டது அல்ல. பல ஆண்டுகள் செய்த செய்முறை முயற்சியில் அவர்கள் கண்டறிந்த சுவைகள், விருந்துகள் எண்ணிலடங்காதவை.
185 இனக்குழு மக்களிடம் ஒரு கள ஆய்வு நடத்தினார்கள். அதில் 117 இனக்குழுக்கள் சமையல் வேலை எப்போதும் பெண்களுக்கு மட்டுமே உரியது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். 63 இனக்குழுக்கள் இப்போதெல்லாம் ஆண்களும் சமையல் செய்கிறார்கள் என்றாலும் ஒரு காலத்தில் எங்கள் சமூகத்தில் பெண்கள் மட்டுமே சமையல் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். பெண்கள் இன்றுவரை சமையலறையில் செய்திருக்கும் கண்டுப்பிடிப்புகளின் பலன்களை அனுபவிக்கும்nஆண்கள் இனியாவது அதைக் கொண்டாட வேண்டும். இனி அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு வருவோம். நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தார். நமக்குத் தெரியும். ஐன்ஸ்டின் ‘ரிலேட்டிவிட்டி தியரியைக் கண்டுபிடித்தார். நமக்கெல்லாம் தெரியும். ஆனால் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு ஈடான இன்னொரு கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் நிறமாலை பற்றியது. நட்சத்திரங்கள், கோள்களின் வெட்பநிலையும் நிறமாலையையும் தீர்மானிப்பது அதில் இருக்கும் உலோகப்பொருட்களோ கனிமங்களோ அல்ல. ஏனேனில் சூரியனில் இருக்கும் சிலிக்கான், கார்பன் மற்ற கனிமங்கள் பூமியிலும் இருக்கின்றன. ஆனால் இரண்டையும் வேறுபடுத்துவது ஹைட்ரஜன் என்று சொன்னார்.
இதைக் கண்டுப்பிடித்த சிசிலியா பெய்னி பற்றி நமக்குத் தெரியாது. இன்றைக்கு நாமெல்லோரும் கணினி யுகத்தில் வாழ்கிறோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பது கூட முகநூலில் தான் . அந்தளவுக்கு கணினி நம் வாழ்க்கையில் தவிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்தக் கணினியைக் கண்டுப்பிடித்தவர் ஒரு பெண். அவர் பெயர் அடா லவ் லேஸ். ஒரு எந்திரம் எப்படி கணக்குகளை, எண்களை, வார்த்தைகளை குறியீடுகளை அடையாளப்படுத்தும் எங்கிற programme ஐ எழுதியவர் இப்பெண். அவள் எழுதிய அந்த நோட்ஸ் தான் முதல் இன்றைக்கு கணினி உலகத்தில் அறியப்படும் algorithms and computer programming,
There is a very important fact that everyone knows. Hydrogen is the most common element, and is a building block for the whole universe. High School science informs us that Newton discovered gravity, and Einstein relativity, but for some reason never stops to mention who discovered this fact which is equally amazing. Cecilia Payne was born May 10, 1900 in Wendover, England. Her parents were Helena and Edward John Payne.
ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது க்ரோமோசம். ஆணிடம் X , & Y என்று இரு ககுரோமோசம் இருக்கிறது. பெண்ணிடம் இருப்பது எக்ஸ் க்குரோமோசம் மட்டும் தான். என்பதைக் கண்டுபிடித்தவர்.
Nettie Stevens 1862–1912 ஆனால் நிட்டியுடன் வேலைப்பார்த்த தாமஸ் ஹண்ட் முர்கன் இதைப் பற்றி முதலில் புத்தகம் போட்டுவிடுவதால் கண்டுப்பிடிப்பு அவ்ருடையதாகிவிடுகிறது. தாமஸ் ஹ்ண்ட் முர்கன் நோபல் பரிசும் பெற்றார். ரோசலின் ப்ராங்க்ளின் எக்ஸ்ரே வைப் பயன்ப்டுத்தி டி என் ஏ வின் படத்தை எடுத்துவைத்திருந்தார். டி என் ஏ எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அதே கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஜேம்ஸ் வாட்சனும் பிரான்சிஸ்
கிரிக்கும் ரோசலினுக்குத் தெரியாமல் அவள் ஆராய்ச்சியைத் திருடினார்கள்.அவர்களுக்குத்தான் மருத்துவக்கண்டுப்பிடிப்பில் நோபல் பரிசு கிடைத்தது. படகுகளில் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டால் காப்பாற்றும் தண்ணீரில் மிதக்கும் உடையைக் கண்டுப்பிடித்ததும் பெண் தான்.
(1) ஒரு கையால் ஏந்தி ஊசியில் மருந்தை உறிஞ்சி அதை உடலில் போடும் சிரிஞ்ச் கண்டுப்பிடித்தவள் பெண்.
(2)இன்றைய மின்சாரத்தில் இயங்கும் ரிபரிஜ்ரேட்டர் கண்டுப்பிடித்தது பெண்.
(3)மின் கம்பிகளோ இணைப்புகளொ இன்றி இன்று மின் காந்த அலைகளைக்
கொண்டு Wi-Fi உலகத்தில் நாம் உரையாடிக்கொண்டிருக்கிறொம்.இதைக் கண்டுப்பிடித்தவள் பெண்.
(4)இத்துடன், குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசங்களை அணிந்து நம் தலைவர்கள் சமாதான ஒப்பந்தங்ளில் கை எழுத்திடுகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் அந்தக் குண்டு துளைக்காத ஆடையைக் கண்டுபிடித்தவளும் பெண் தான்
(5) அணு ஆராய்ச்சியில் அணுவைப் பிளக்கமுடியும் என்ற கண்டுப்பிடிப்பு மிகவும்
முக்கியமானது. அணுவைப் பிளக்க முடியும் என்பதைக் கண்டுப்ப்டித்தவர் ஜெர்மனியில் வாழ்ந்த லிஸ்ஸி மிட்னர் என்ற யூதப்பெண்.. இரண்டாவது உலகப்போர் நடந்தக் காலக்கட்டம். ஜெர்மனியிலிருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்ந்த லிஸ்ஸி தன் கண்டுபிடிப்புகளை ரகசியமாக தான் சந்தித்த ஓட்டோ ஹன் என்பவரிடம் சொல்கிறார். ஓட்டோ அதை அபப்டியே தன்னுடைய கண்டுப்ப்டிபபாக எழுதி வெளி உலகத்திற்கும் காட்டி 1944ல் நோபல் பரிசும் பெறுகிறார். ஆனால் இத்தவறு நோபல் பரிசு கமிட்டியால் பிற்காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டது. இன்று nuclear element NO; 119 க்கு லிஸ்லியின் பெயர் வைத்து மரியாதை செய்திருக்கிறது அணு ஆராய்ச்சி அறிவியல் உலகம்.
(6)இந்தி மொழிக்கவிஞர் ஜீயோட்சனா மிலன் எழுதிய கவிதை
அவளுக்குப் பின்னால்
—————————————-
பாதிதூரம் வந்த பின்
அவள் திரும்பிப் பார்த்தாள்
காணவில்லை
அவள் கடந்து வந்த பாதையை.
வயல்களில்லை
வீடுகளில்லை
மனிதர்கள் இல்லை
எதுவுமில்லை
எங்கிருந்து அவள் புறப்பட்டாள்
என்பதற்கான
எந்தத் தடயங்களும் இல்லை
யாரோ
அவளுக்குப் பின்னால்
கவனமாக
அவள் வாழ்வின் அடையாளங்களை
துடைத்துச் சென்றிருக்க கூடும்..
இது வெறும் பெண்ணியக்கவிதை மட்டுமல்ல.
பெண்ணின் அறிவியல் திறமைகளும் அறிவுக்கூர்மையும்
கண்டுப்பிடிப்புகளும் காலந்தோறும் மறக்கப்பட்டும்
மறைக்கப்பட்டும் களவாடப்பட்டும் வந்திருக்கும்
பெண்ணிய வரலாற்றின் பக்கமும் கூட.
—————————
விவரக்குறிப்புகள்:
(1)One day in 1882, Maria Beasely looked out at the sea and said, “People should, like, stop dying in huge transportation disasters.” And then she invented life rafts. Beasely also invented a machine for making barrels, and it made her really fucking rich.
(2)Oh, the wonders of modern medicine. In 1899, Letitia Geer invented a medical syringe that could be operated with only one hand. Remember her the next time your doctor injects you with only one hand.
(3)Florence Parpart invented the modern electric refrigerator in 1914. In 1900, Parpart also received a patent for a vastly improved street-cleaning machine, which she marketed and sold to cities across America, because she was incredibly badass.
(4)Hedy Lamarr’s invention of a secret communications system during World War II for radio-controlling torpedoes, employing “frequency hopping” technology, laid the technological foundations for everything from Wi-Fi to GPS. She also happened to be a world-famous film star.
(5)The chemist Stephanie Kwolek invented the super-strong Kevlar fibre, used to make bulletproof vests. Kwolek’s invention is five times stronger than steel, and also has about 200 other uses.
(6)The process of nuclear fission was a huge discovery for the scientific world, and few know that a woman by the name of Lise Meitner was the first to hypothesize it. Unfortunately, her work in radiology occurred in the midst of World War II, and she was forced to meet in secret with a chemist by the name of Otto Hahn.During the Anschluss, Meitner left Stockholm while Hahn and his partner Fritz Strassman continued to work on their experiments with Uranium. The male scientists were puzzled by how the uranium seemed to form atoms that they thought were radium when the uranium was bombarded with neutrons. Meitner wrote to the men posing a theory that the atom may have broken down after bombardment into what was later realized to be barium. This idea had huge implications for the world of chemistry and, working with the help of Otto Frisch, she was able to explain the theory of nuclear fission. She had also made the observation that no element larger than uranium existed naturally and that nuclear fission had the potential of creating enormous amounts of energy. Meitner was unable to be mentioned in the article published by Strassman and Hahn, though her role in the discovery was severely downplayed by them. The men went on to win a Nobel Prize for their “discovery” in 1944 with no mention of Meitner, which was later claimed to be a “mistake” by the Prize committee. While she didn’t receive the Nobel Prize or formal recognition for her discoveries, Meitner did have element number 119 named after her, which is a pretty good consolation prize.