தேனுகா –பிரான்ஸ்
பிரெஞ்சு நாட்டு ஓவியர் கோகென் வரைந்த ஓவியம் ஒன்று 300 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்கப்பட்ட கலைப்படைப்புகளிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டஓவியப் படைப்பு இதுவாகும். எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்? என்ற இந்த ஓவியத்தை 1892ல் கோகென் வரைந்தார். தாகித்தி தீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற இந்த ஓவியம் சுவிட்ஸர்லாந்து நாட்டின் பாசலைச் நகரத்தைச் சேர்ந்த ருடால்ஃப் ஸ்டாச்செலின் என்பவரிடம் த ஒரு சேகரிப்பாளரிடம் இருந்துவந்தது. தற்போது கட்டாரில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இந்த ஓவியம் விற்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பாக, பால் செஸன் வரைந்த ஒரு ஓவியத்தை 259 மில்லியன் டாலருக்குகட்டார் நாடு வாங்கியிருந்தது. இதுவரை இந்த ஓவியம் சுவிட்ஸர்லாந்தின் இருந்தது. பல வருடங்களாக இந்த ஓவியத்தை, பாஸெலில் இருக்கும் கன்ஸ்ட் அருகாட்சியகத்திற்கு கடனாகக் கொடுத்திருந்தார் ஸ்டாச்செலின். தற்போது அந்த அருங்காட்சியகத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளையடுத்து, அதனை விற்க அவர் முடிவெடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.