1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர்.
விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வசித்துவந்த ராஜம் கிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார்.இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இடதுசாரிப் பார்வை கொண்ட அவர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார்.
1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு ‘கரிப்பு மண்கள்’ என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘டாகுமான்சி’யை சந்தித்தவர். அதன் விளைவாக ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர்.
இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முகங்களுள் ஒன்றான திருமதி. கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:
1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953—கலைமகள் விருது
1973— சாகித்திய அகாதமி விருது
1975—சோவியத் லாண்ட் நேரு விருது
1991—திரு.வி.க. விருது
இவரின் படைப்புகளுள் சில:
கூட்டுக் குஞ்சுகள்
வனதேவியின் மைந்தர்கள்
உத்தரகாண்டம்
மாறி மாறி பின்னும்
மலர்கள்
பாதையில் பதித்த அடிகள்
உயிர் விளையும் நிலங்கள்
புதியதோர் உலகம் செய்வோம்
கரிப்பு மணிகள்
வளைக்கரம்
ஊசியும் உணர்வும்
வேருக்கு நீர்
இடிபாடுகள்
அலை வாய்க்கரையில்
கூடுகள்
அவள்
முள்ளும் மலர்ந்தது
குறிஞ்சித் தேன்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
அன்னையர்பூமி
பெண்ணியம்
காலம்தோறும் பெண்
காலம்தோறும் பெண்மை
யாதுமாகி நின்றாய்
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
வாழ்க்கை வரலாறு
டாக்டர் ரங்காச்சாரி
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
சத்திய தரிசனம்
தன் வாழ்க்கைக் குறிப்பு