இ.சாந்த கலா (கோலாலம்பூர் மலேசியா )
அன்புத்தோழி. . .!
நீ சென்ற பிறகு
இன்னும் சிலர்
தோழிகளாயினர்
உன்போல்
கைகொடுத்து
கண்ணீர் துடைக்க
ஒருவரும் இல்லை
சிறுவயதில்
கரட்டையில்
மண்சோறு சமைத்து
கடலோரம் நண்டு பிடித்து
புல்வெளியில்
பட்டாம் பூச்சி விரட்டி
விளையாடி விளையாடி
நட்பு தொடர்ந்தது
பூப்பெய்திய பிறகு
பல்லாங்குழியில்
பலமணிநேரம்
தாயக்கட்டை சொக்கட்டான்
விளையாடி இருந்தோம்!
நம் தோழமையில்
பலரும்
பொறாமை கொண்டார்கள்
கல்லூரியில்
இரு கைகளும் பிரியாமல்
இதயத்தில் இணைந்திருந்தோம்.
வயதுக் கோளாறில்
நீ மட்டும்
தனியாக விளையாடினாடீநு
காதல் விளையாட்டு
என்னவன்
வருகிறான் என்றே
என்னை விட்டுப் பிரிந்தாய்
என்
நிழலும் விலக்கினாடீநு
உன் நிழற்படம் பார்த்து
நானும் நீயும்
களித்துத் திரிந்த
நம் கிராமத்து மண்ணை
இன்றைக்கும்
பார்த்துப் பார்த்து ஏங்குகிறேன்
ஒன்றை மட்டும்
உணர்த்திச்
சென்றிருக்கிறாய் தோழி
பெண்ணுக்கு எதுவும்
நிரந்தரம் இல்லை
(வளரிக்காக எழுதப்பட்ட இக்கவிதையை ஊடறுவுக்கு அனுப்பித்தந்தவர் சாகில்)