கிளிநொச்சி மாவட்டத்தில் 2792 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1434 மாற்றுத்திறனாளிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 250 மாற்றுத்திறனாளிகளும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் 516 மாற்றுத்திறனாளிகளும்கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 592 மாற்றுத்திறனாளிகளும் வசித்து வருவதாக அந்த புள்ளி விபரத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கிளிநொச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகளில் தெரிவு செய்யப்பட்ட 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் தலா 3000 ரூபாய் வீதம் உதவி கொடுப்பனவுகள் சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படுகின்றன. மேலும் மிகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 250 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையான உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
உலக வங்கியின் 55 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் மாற்று திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதகால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.