-ஆவண படக்குழுவினர்-
ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட தலித் சமுகம் மட்டுமே சமூகத்தால் உளரீதியாக அடிமைபடுத்தப்பட்டு இழி தொழில்களாக கருதப்படுகிற மலம் அள்ளுதல், சாக்கடையில் இறங்கி வேலை செய்தல், கழிவுகளை அள்ளுதல் போன்ற தொழில்களை செய்து இந்திய நாட்டு மக்களை நோயிலிருந்தும் காப்பாற்றிவரும் இவ் மக்களின் துயரத்தை 30 நிமிட ஆவணப்படமாக கொண்டுவந்துள்ளோம் . உண்மையில் 300 மணி நேரம் படம் எடுத்தாலும் இவர்களின் துயரத்தை இச்சமுகத்தால், அரசால் இவர்களின் அவலங்களை சொல்லிவிட முடியாது. இவ் ஆவணப்படத்தின் நோக்கம் இம் மக்களின் நிலையை சொல்வது மட்டும் அல்ல…. குறைந்தபட்சம் இச்சமுகமும் நாமும் இவ் மக்களை மனிதர்களாக மதித்தாலே இந்த ஆவண படத்திற்கு வெற்றிதான். –