மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினால் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இரோம் ஷர்மிளா இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று 13 ஆண்டுகாலமாக தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.இதனால் அவரை பொலிசார் கைது செய்வதும் பின்னர் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு அளிப்பதும் நடந்த வேளையில், அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து அதனையே சிறைச்சாலையாக மாற்றி பல ஆண்டுகளாக அவருக்கு மூக்கு வழியே உணவு செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று மணிப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இரோம் ஷர்மிளா மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இரோம் ஷர்மிளா மீதான மாநில அரசின் தற்கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ததுடன் அவரை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.
Thanks -http://www.newindianews.com/