இடைவெளிகளிற்ற வாழ்வில் வேண்டியதைச் செய்ய முயல்வதுதான் பெண்கள் வாழ்க்கை.

மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் வெளியிடப்படும் பெண் சஞ்சிகையை பெற விரும்புவோர்க்கான சந்தா புதிப்பித்தல் பற்றிய விபரம்

pen

அன்புடையீர்,

இடைவெளிகளிற்ற வாழ்வில் வேண்டியதைச் செய்ய முயல்வதுதான் பெண்கள் வாழ்க்கை. அந்த வகையில் பெண்களின் வாழ்வியல் பக்கங்களுடன் வாழ்ந்து வரும் நாம் அதனை தங்களுடனும் “பெண்” சஞ்சிகைக்கூடாக பகிர்ந்து கொள்கின்றோம். எனினும் பகிர்வுகள் சில நியதிகளுக்குட்பட்டே நடக்க வேண்டியுள்ளது. “காசு கொடுக்காமல் தூசும் நகராது” என்பதற்கிணங்க அரசினது விலை அதிகரிப்பானது எம்மையும் வந்தடைகிறது. இதனால் தற்போது வெளியீடுகளை அனுப்புவதற்கான முத்திரைச் செலவு அதிகரித்தே வருகின்றது.

ஆகவே எமது வெளியீடுகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக சந்தாக்களைச் செலுத்தவீர்களானால் தாங்கள் எங்கிருந்தாலும் எம்மில் ஒருவராய் இணைந்தே இருக்க எம்மால் என்றும் போலவே தொடச்சியாய் வெளியீடுகளை அனுப்பி வைக்க முடியம். சந்தாவாக US$8 இருந்ததை இவ்வருடத்துடன் US$ 10 ஆக அதிகரிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கான தங்கள் பதிலை அன்புடன் வரவேற்கின்றோம். தங்கள் மின்அஞ்சல் விலாசங்களை நாம் விரும்புகின்றோம்.

நட்புடன்

விஜயலட்சுமி சேகர்

மின் அஞ்சல் – vijesegar@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *