சலனி (இலங்கை)
கவிதை ஒன்றுக்கான அத்தனை முனைப்புகளுடனும்
இந்த பின்னேரம் சாத்தியமாகியிருக்கிறது.
ஒளிபட்டுக் கலங்கும்
இலைப்பரப்புகளை நீவிய விழிகளுடன்
மணல்களைத் துளாவிய பாதங்களை..
—-
ஒரு உயர்ந்த பொதுநிறமான
தாடிக்காரன் தடைபடுத்தி விட்டான்..
மிலேச்சத்தனங்களின் பிரதிபலிப்புகளுக்காய்
வாங்கிப் போட்ட
காணிக் குடிசையுள்
மெலிந்த, வெளிறியான
பொடியனுடன் நுழைகிறான்..?
ஓலைக்கிடுகுகளால் கொசுவப்பட்ட
தட்டி சாத்தப்படுகிறது.
தூரத்து முகாமின்
சடாரென்ற குண்டுவெடிப்பில் அதிர்கின்றன பாதங்கள்