தி.துலக்சனா (நுண்கலைத்துறை. சிறப்புக் கற்கை. கிழக்குப் பல்கலைக்கழகம்.)
PHOTO – thanks to baatti news
ஈழத்தமிழரதுபாரம்பரியக் கலைவடிவமான கூத்தரங்கானதுஅன்றுதொடக்கம் இன்றுவரைதமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களில் உயிர்த்துடிப்புடன் இயங்கிவருவதனைக் காணமுடிகின்றது. இது பெரும்பாலும் வளர்ந்தஆண்களுக்குரியதாகவேஉள்ளது. பெண்கள் சிறுவர்களுக்கான இடம் ஆரம்பகாலக் கூத்துக்களில் காணப்படவில்லை. குறிப்பாககட்டியக்காரன்,தோழிப் பாத்திரங்களுக்குமாத்திரம் ஒருசிலசிறுவர்கள் உள்வாங்கப் படஏனையோர் வாய்பார்ப்பவர்களாகவும்,எடுபிடிவேலைகளைக் செய்பவர்களாகவுமே இருந்துவந்தனர். இவ்வாறானவிடயங்களைக் கேள்விக்குள்ளாக்கிமுற்றுமுழதாகச் சிறுவர்களுக்காகமாத்திரமேதனித்துவமாகஉருவாக்கப்பட்டஅரங்கேசிறுவர் கூத்தரங்காகும்.
இலங்கைத் தமிழ் அரங்கவரலாற்றில் சிறுவர் கூத்தரங்குஎன்றஎண்ணக்கருஅல்லதுகருத்துருவம் புதியது. இது 21 ஆம் நூற்றாண்டில் கலாநிதிசி.ஜெயசங்கர் அவர்களின் சிந்தனை மூலமாகவேஉருவாக்கம் பெற்றது. “நவீனஅரங்கின் கூறானசிறுவர் அரங்கிலிருந்தும் கல்வியியல் அரங்கிலிருந்தும் வேறுபட்டது. ஆயினும் மேற்படி இரு அரங்குகளின் எண்ணக் கருக்களையும் உள்ளிணைத்துக் கொண்டது”என இவர் கூறுகின்றார்.
சிறுவர் கூத்தரங்கானதுமட்டக்களப்புகுருக்கள்மடத்தில் “நந்திப்போர்”எனும் வடமோடிக் கூத்தின் மூலமாகவேதுளிர்விடஆரம்பித்தது. இதன் அடுத்தகட்டவளர்ச்சியாக“மழைப்பழம்”சிறுவர் வடமோடிக் கூத்தானதுஅரங்கேற்றப்பட்டது. கலாநிதிசி.ஜெயசங்கர் அவர்களினால் தமிழில் மொழிபெயர்த்துஎழுதப்பட்ட“கிரிஜா”எனும் கதையினைஅடிப்படையாகக் கொண்டது. சீலாமுனைக் கிராமத்தைச் சேர்ந்த கூத்துப் பனுவல் எழுத்தாளர் திருசெ.சிவநாயகம் அவர்களால் “மழைப்பழம்”எனும் பெயரில் கூத்துப் பிரதியாகஎழுதப்பட்டது. இதனைசீலாமுனைக் கிராமத்தைச் சேர்ந்த் திருசி.ஞானசேகரம் அண்ணாவியாhல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் 2 ஆம் வருடசிறப்புக் கற்கைமாணவர்களுக்குபயிற்றுவிக்கப்பட்டது. இவர்களுடன் இணைந்து மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுநண்பர்களும் பங்குகொண்டுமாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாச் சூழலில் 2012 ஆம் ஆண்டுஅரங்கேற்றப்பட்டது.
மழைப்பழம் எனும் சிறுவர் கூத்தினைஎனது இறுதியாண்டுஆய்வுக் கட்டுரைக்காகசித்தாண்டி– 3 இல் வசிக்கின்றசிறுவர்களைஒன்றிணைத்துஅண்ணாவியார் வே.தம்பிமுத்துஅவர்களின் உதவியுடன் பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றது. இக் கூத்தாற்றுகையின் சட்டம் கொடுத்தல் நிகழ்வானது 12.07.2014 சனிக்கிழமைசித்தாண்டி- 3,வைத்தியர் வீதியில்,ஆற்றங்கரைப் பிள்ளையார் ஆலயத்திற்குஅருகாமையிலுள்ள இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
எமதுபாரம்பரியக் கூத்தரங்கானதுபுராண, இதிகாசக் கதைகளைஉள்ளடக்கிவிடியவிடியஆற்றுகைசெய்யப்படுவதாய் அமைகின்றது. ஆனால் சிறுவர் கூத்தரங்கின் கதைக்கருவானதுபண்பாடும்,பாரம்பரியமும்,அறிவியலும் சார்ந்தவையாகக் காணப்படுகின்றது. அத்துடன் நற்கருத்துக்களை,ஒழுக்கவிழுமியங்களைஎடுத்துக் கூறுவதாகவும்,அறிவூட்டலுடன் கூடியமகிழ்வூட்டல்களைச் சிறுவர்களுக்குவழங்குவதாகவும் அமைந்துள்ளது. ஆற்றுகைக்கானகாலஅளவானதுஒன்றுதொடக்கம் இரண்டுமணித்தியாலங்களுக்குஉட்பட்டதாகவும் அமைந்துள்ளது.
கூத்துப் பாடலின் வரிகள்,மெட்டுக்கள் என்பனஎளிமையானதாகவும்,சிறுவர்கள் இலகுவில் உள்வாங்கிக் கொள்ளும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
சிறுவர் கூத்தரங்கிலேபங்குபற்றும் கலைஞர்களாகவும்,பார்வையாளர்களாகவும் உள்ளசிறுவர்கள் பலநன்மைகளைப் பெறுகின்றனர். பங்குகொள்வதனூடாகக் கற்றல்,ஞாபகசக்திவளர்ச்சி,தன்னைத் தானேஉணர்ந்துகொள்ளல்,உள்ளார்ந்ததிறமைகளைவிருத்திசெய்தல், கூத்துப் பழகுதல் தொடக்கம் அரங்கேற்றம் வரையானதொடர் செயற்பாட்டினூடாகக் காணப்படும் ஒழுங்குமுறைகள் மற்றும் பாரம்பரியமானசம்பிரதாயங்களைத் தெரிந்துகொள்ளல்,குருமரியாதை,ஒற்றுமைஎனப் பலதிறமைகளைவகுத்துக் கொள்ளஉதவும் ஊடகமாகவும் சிறுவர் கூத்தரங்குகாணப்படுகிறது.
பாரம்பரிய கூத்தரங்கிற்கேயுரியதனித்துவமானபண்புகளிலிருந்துவழுவாது,சிறுவர்களதுஉளநிலை,அவர்களின் மகிழ்ச்சி,விருத்திபோன்றவற்றைக் கருத்;திற் கொண்டுகதைக்கருமற்றும் ஆற்றுகையின் காலஅளவினையும் குறைத்துசிறுவர்களுக்கென்றுசிறப்பாகவடிவமைக்கப்பட்டுள்ள இவ்வரங்கச் செயற்பாடானது,சிறுவர்களுக்குப் பயனுடையதாகவும் அவர்களதுஆளுமைவளர்ச்சிக்குத் தூண்டுகோலாகவும் காணப்படுவதுடன்,சிறுவர் கூத்தரங்கவளர்ச்சிக்குமேலும் வலுச்சேர்ப்பதுமாகஅமைந்துள்ளது.
மழைப்பழக் கூத்தின் கதைச் சுருக்கம்.
மகதநாட்டினுடையமன்னன் மகேந்திரபூபதியுடன் அரக்கன் பகை கொண்டுள்ளகாரணத்தினால்,மழைப்பழத்தினைக் கவர்ந்துவைத்திருந்ததால்,நாட்டிலேமழை இன்றிவரட்சிநிலவியது. ஆகவேஅரக்கனின் இருப்பிடம் சென்றுமழைப்பழம் மீட்டுவருபவர்களுக்குபாதி இராட்சியமும்,தங்கமும் கொடுத்து முடி சூட்டுவதாகஅரசர் மக்களுக்குஅறிவித்திருந்தார். மழைப்பழத்தைமீட்டுவரச் செல்வோரைஅரக்கன் கல்லாக்குகின்றான். சுந்தரிஎனும் சிறுமியின் அண்ணன் மதிவதனன் மழைப்பழம் மீட்கச் சென்றுஅவனும் கல்லாகிவிட்டான். இதனால் சிறுமிசுந்தரிபாடினிகளின் உதவியுடன் அரக்கனின் இருப்பிடம் சென்று,அவன் போடும் புதிர்களுக்குவிடையளித்து,அனைவரையும் காப்பாற்றிமழைப்பழத்துடன் திரும்பிவந்தாள். பின்னர் சிறுமிசுந்தரிமழைப்பழம் நட்டுமழைபெய்ததும் அவளுக்குராட்சியம்,தங்கம் கொடுத்துஅரசர் முடி சூட்டுகின்றார்.
இக்கூத்தின் கதாநாயகியானசுந்தரிபாத்திரம் பெண்களின் உரிமைகளையும்,அவர்களின் பேச்சுச் சுதந்திரத்தினையும்,வீரத்தினையும்,துணிவையும்,ஆணாதிக்கத்திற்கெதிராகசமநீதிபேசும் பாத்திரமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானவிடயங்களைக் உள்ளடக்கிஉருவாக்கப்பட்டுள்ள கூத்தேமழைப்பழம் சிறுவர் கூத்தாகும்.
அண்ணாவியார் பற்றியஅறிமுகம்.
சித்தாண்டியில் வசிக்கும் மாண்புமிகு கூத்தாளுமையானவேல்முருகுதம்பிமுத்துஅண்ணாவியார் 1947.07.05 அன்றுபிறந்தார். இவர் 15 வயதிலிருந்துதனதுதந்தைபழக்கிய கூத்துக்களைப் பார்த்தல்,மத்தளம் அடித்தல்,தாளக்கட்டுக்களைப் பழகுதல், கூத்தர்களுடன் சேர்ந்துஆடுதல் போன்றசெயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கூத்தில் இருந்தஆர்வம் காரணமாகதனதுதந்தைபழக்கிய“மணிமாலன் சண்டை”எனும் கூத்தில் முதன்முறையாகபாத்திரமேற்றுஆடினார். இதிலேபெண் பாத்திரமேற்றுஆடியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
பிற்காலத்தில் தனியாகவடமோடி,தென்மோடிக் கூத்துக்களைப் பழக்கத் தொடங்கினார். இவர் முதன்முறையாகப் பழக்கிஅரங்கேற்றிய கூத்து“பவளக்கொடிநாடகம்”ஆகும். அத்துடன் “14 ஆம் போர்”, 18 ஆம் போர்”,“திரௌபதைவில் வளைவு”,“சுபத்திரைகல்யாணம்”,“கலிங்கப்போர்”,“அருச்சுனன் தவநிலை”ஆகியவடமோடிக் கூத்துக்களைப் பழக்கிஅரங்கேற்றியுள்ளார்.
இவர் பலதென்மோடிக் கூத்துக்களைதனதுதந்தையுடன். சேர்ந்துபழக்கிஅரங்கேற்றியுள்ளார்.இதிலேகண்டியரசன் எனும் தென்மோடிக் கூத்தானதுதம்பிமுத்துஅண்ணாவியாரால் 2012 ஆம் ஆண்டிலேகிழக்குப் பல்கலைக்கழகநுண்கலைத்துறையின் சிறப்புக் கற்கைமாணவர்களுக்குபயிற்றுவிக்கப்பட்டது. இவ்வாற்றுகைச் செயற்பாட்டில் 3 ஆம் வருடநாடகமும் அரங்கியலும் சிறப்புக் கற்கைமாணவர்களும்,விரிவுரையாளர் சு. சந்திரகுமார் அவர்களும் பங்குபற்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
தம்பிமுத்துஅண்ணாவியார் கூத்தில் மட்டுமல்லாதுமத்தளம்,தவில் ஏற்றுதல்,மத்தளம் இணக்குதல்; போன்றவிடயங்களிலும் ஆளுமைமிக்கவராகக் காணப்படுகின்றார். விவசாயம் செய்தலைபிரதானதொழிலாகக் கொண்ட இவர் சேனைப் பயிற்செய்கையிலும் இயற்கையானமுறைப்படிசுயமாகஈடுபட்டுவருபவர். ஓடாவிவேலைசெய்வதிலும் அனுபவம் உள்ளவர். அத்துடன் தோணிசெய்வதிலும் ஈடுபாடுடையவர்.
15 ற்கும் அதிகளவான கூத்துக்களைப் பழக்கிஅரங்கேற்றியுள்ளார். சித்தாண்டியில் மட்டுமல்லாது,மட்டக்களப்புமாவட்டத்தின் பலபகுதிகளிலும் உள்ள கூத்தார்வலர் இவரைஅழைத்தும் கூத்துக்களைப் பழகியுள்ளமைகுறிப்பிடத்தக்கது. இவ்வாறாகபல்துறைசார்ந்தஆளுமைகொண்டவராகதம்பிமுத்துஅண்ணாவியார் திகழ்கின்றார்.
பங்குபற்றும் கூத்துக் கலைஞர்கள்
கட்டியக்காரன் : சு. தேனுசன்
1ஆம் பாடினி : இ. திவ்வியா
2ஆம் பாடினி : த. தனுஸ்க்கா
3ஆம் பாடினி : க. றீத்திக்கா
வேதவல்லி(தாய்): தே. ரவிச்சந்திரன்
மதிவதனன்(மகன்): தே. நிறோசன்
சுந்தரி(சிறுமி) : த. தர்மிக்கா
மகேந்திரபூபதி(மன்னன்): சி. விதுசன்
மந்திரி : க.கரன்
விஜயன் : க. முகுந்தன்
கிழவி : யோ. விதுசிக்கா
அரக்கன் : யோ. விபுதராஜ்
பறையறையோன்: த. கிரிசாந்த்
அண்ணாவியார் : வே. தம்பிமுத்து
ஏடுபார்ப்பவர் : தி. துலக்சனா
தாளம் : சு. சந்திரகுமார்
யோ. விபுதராஜ்
பிற்பாட்டு : சி.விதுசன்
த.தர்மிகா
தே.ரவிச்சந்திரன்
க.றீத்திகா