பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriage–பற்றி பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனின் கருத்து

UK prime minister David Cameron calls for end to female genital mutilation, child marriages

Bondo maedchen

பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriageஆகிய இரண்டுமே, பெண்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கடுமையாகப் பாதிக்கின்றன. அதுசார்ந்த அவர்களின் முடிவை எடுக்கும் உரிமையை அவை பறிக்கின்றன. என 22.7.2014 அன்று லண்டனில் நடைபெற்ற (international summit on the issue, in London,)எனும் மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் பிரதமர் பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல் மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவற்றை மிக கடுமையாக சாடியுள்ளார்.

குழந்தைத் திருமணம் தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தெற்காசியா, சஹாரா துணைக்கண்ட ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைத் திருமணம் வெகுசாதாரணமாக நடைபெறுகிறது. குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெறும் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

குழந்தைத் திருமணங்களில் 42 சதவீதம் தெற்காசியாவில் நடைபெறுகிறது. 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட 70 கோடி பெண்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இதில், 25 கோடி பெண்கள் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள்.

Bondo maedchen

நைஜர், வங்கதேசம், சாத், மாலி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, இந்தியா, கினியா, எத்தியோப்பியா, பர்கினா பாஸோ, நேபாளம் ஆகிய நாடுகள் குழந்தைத் திருமணம் அதிகம் நடக்கும் நாடுகளில் முறையே முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளாகும்.

குழந்தைத் திருமணம் மற்றும் பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல் (எப்ஜிஎம்), ஆகிய இரண்டு பிரச்சினைகள், பெண் குழந்தைகளைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடைமுறைகள் கடந்த 30 ஆண்டுகளில் சிறிது அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A woman who performs genital cutting holds the knife

கந்துமுனை அகற்றம் ;உலகில் 13 கோடிப் பெண்கள் பிறப்புறுப்பின் கந்துமுனை அகற்றப்படுவது போன்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கைச் சேர்ந்த 29 நாடுகளில் இந்தக் கொடூரமான வழக்கம் நடைமுறையில் உள்ளது.

கந்து முனை அகற்றப்படும் சிறுமிகளுக்கு உடல் மற்றும் மனரீதியான வலி தவிர, நீடித்த ரத்தப் போக்கு, நோய்த்தொற்று, குழந்தைப்பேறின்மை மற்றும் இறப்புக்கு ஆளாகின்றனர்.

இந்த வழக்கம், கென்யா, தான்ஸானியா பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததோடு ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு, இராக், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பாதியாகக் குறைந்திருக்கிறது.

குழந்தைத் திருமணம் குறையும் வீதத்தைக் கணக்கிட்டால் வரும் 2050 வரை குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கமுடியாது என யுனிசெப் அறிவுறுத்தியுள்ளது.

5 facts you didn’t know about child marriage -Photos-  thanks Thomson reuters foundatrion

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *