நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராம தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முறையான நீதியும், நிவாரணமும் வழங்க வலியுறுத்தி அந்த கிராம மக்கல் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆதிக்க சாதி வெறி தாக்குதல்களையும், கொள்ளைகளையும் ஜெ தலைமையிலான தமிழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை, எந்த அமைச்சரும் இதுவரை மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை. நிவாரணக் குழு கூட அமைக்கப்பட்டதாக தெரியவில்லை.
அரசு மௌனம் காத்துவரும் வேளையில் தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கு கொள்வது ஒவ்வொரு தலித் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள், புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் மற்றும் சமூக அர்வலர்களின் கடமை.
ஒவ்வொரு அமைப்பின் சார்பாகவும், ஜனநாயக சக்திகளாகவும் தினம் தினம் நூற்றுக் கணக்கானோர் இந்த தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் கேட்டுக்கொள்கிறது.
அம்மக்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
http://saektamilnadu.wordpress.com/2012/12/01/தொடர்-உண்ணாநிலை-அறப்போரா/