வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா எக்நெலிகொட

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், ‘தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்’ என்று பதில் கடிதம் வந்தது. கவனத்தில் கொள்ளுங்கள். ‘நான் தெற்கில் பிறந்து வளர்ந்தவர். ஒரு சிங்கள பெண். பௌத்த மதத்தை சேர்ந்தவர். (அதாவது இலங்கையின் பெரும்பான்மையினத்தவர்களில் ஒருவர்). எனக்கே நீதி கிடைக்காத போது, வடக்கில் சிறுபான்மையின தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு சாதாரண நபர் காணாமல் போனால் அவருடைய குடும்பம் எந்த வகையில் நீதியை எதிர்பார்த்து நம்பிக்கை கொள்ள முடியும்..?

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு (ஆகஸ்டு 30) அச்சுறுத்தலுக்கு உள்ளானோருக்கான அமைப்பு ((Society for Threatened Peoples)>   சர்வதேச மன்னிப்பு சபை(Amnesty International) மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான சர்வதேச வலையமைப்பு(International network of Sri Lankan diaspora)ஆகியன இணைந்து கருத்தரங்கு ஒன்றை  ஏற்பாடு செய்திருந்தனர் இதில்ஊடகவியலார் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட பிரமதம விருந்தினராகவும்,    அச்சுறுத்தலுக்கு உள்ளானோர் அமைப்பின் பிரதிநிதிAnna Leissing சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி Martin Naef, மனித உரிமைகள் பாதுகாப்பு துறை அமைச்சின் பிரதிநிதி ,Damiano Sguaitamatti ஆகியோரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்குக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளானோர் அமைப்பின் பிரதிநிதி

தலைமை தாங்கினார். சுவிற்சலார்ந்துக்கும்   இலங்கைக்குமான  அரசியல்   தொடர்புகள், இலங்கை தொடர்பில் தற்போது சுவிஸ் கவனம் செலுத்து விடயங்கள் என்ன என்பது பற்றி Martin Naef,Damiano Sguaitamatti  ஆகியோர் எடுத்துரைத்தனர்.  சந்தியா எக்னெலிகொட தனது உரையில்  இலங்கையின் மிக மோசமாக பாதிக்கப்படும் மனித உரிமை மீறல், கருத்துச்சுதந்திரமின்மை, ஊடக அடக்குமுறைகள் தொடர்பில் பிரகீத் இறுதியாக போராடி வந்தார். இறுதி யுத்தத்தின் போது, இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருந்தார். இச்செயற்பாடுகளை தொடர்ந்தால் உயிராபத்து ஏற்படலாம் என பல பேர் எச்சரித்திருந்தனர். சொல்லுங்கள், இதனை நிறுத்துமாறு நான் அவரிடம் முதலிலே கூறியிருக்க வேண்டுமா? ஒரு ஊடக பணி இப்படி நடைபெறுவது நாட்டுக்கு நல்லதல்ல என நீங்கள் கருதுகிறீர்களா..?

இன்று பிரகீத்தை பற்றி நான் அரசியல் தலைமைகளிடம் பேசப்போனால் என்னை கண்டு அவர்கள் பயபப்டுகிறார்கள். ஆனால் இன்று உங்கள் முன் நான் பேசுவதால் நானும் ஒருவேளை காணாமல் போகலாம். 1970 களிலேயே காணாமல் போகச்செய்தல் இலங்கையில் தொடங்கிவிட்டது. 1990 களில் தெற்கிலும் பரவிட்டது. பிரகீத் காணாமல் போன போது நான் முதலில் ஜனாதிபதியிடம் சென்றேன். பின்பு, நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணையகம்,  காவற்துறை, என அடுத்தடுத்து சென்றேன். ஒருவரிடமிருந்தும் நம்பிக்கைக்குரிய பதில் கிடைக்கவில்லை. எனக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அனைவரும் நிராகரித்தனர். பிரகீத் வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், முன்னால் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் கூறியிருந்தார். 7 மாதங்கள் போராட்டத்தின் பின்னர் அவரை நீதிமன்றத்திற்கு வரவைத்து, ‘உங்களுக்கு எப்படி தெரியும்?, பிரகீத் இப்போது எங்கு இருக்கிறார்..?’ என கேட்டோம். ‘நம்பிக்கை உரிய புலனாய்வு தகவல் கிடைத்தது. சொன்னவர் பெயர் மறந்துவிட்டேன்’ என்றார். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், ‘தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்’ என்று பதில் கடிதம் வந்தது. கவனத்தில் கொள்ளுங்கள். ‘நான் தெற்கில் பிறந்து வளர்ந்தவர். ஒரு சிங்கள பெண். பௌத்த மதத்தை சேர்ந்தவர். (அதாவது இலங்கையின் பெரும்பான்மையினத்தவர்களில் ஒருவர்). எனக்கே நீதி கிடைக்காத போது, வடக்கில் சிறுபான்மையின தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு சாதாரண நபர் காணாமல் போனால் அவருடைய குடும்பம் எந்த வகையில் நீதியை எதிர்பார்த்து நம்பிக்கை கொள்ள முடியும்..?

 

வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு எனக் கூறிய  சந்தியா

 ‘இலங்கையில் அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் ‘ஏன் சிறையில் இருக்கிறோம் என்றே தெரியாமல் பல வருடங்களாக சிறையில் வாடுவதாகவும்,  எங்கள் மீது வழக்காவது பதியுங்கள் என்ற கோரிக்கையுடனும் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். அதன் போது தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் ஒருவரின் சடலத்தை பெற்றோர் தமது வீட்டுக்கு கொண்டுவரக்கூட நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. தற்போது இதே சம்பவத்தில் மற்றுமொருவர் சுயநினைவின்றி இருக்கிறார். இலங்கையின் வடக்கில் ஒரு குழந்தை தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கும் இராணுவ அனுமதி பெறவேண்டியுள்ளது’. ளுடுடுசுஊ அறிக்கை உலகுக்கு என்னவேண்டுமானாலும் கூறட்டும். உலகம் பார்க்கும் இலங்கைக்கும், உள்ளே செயற்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.  தொடர்ந்து போராடுவோம். எமக்கான நீதி கிடைக்கும் வரை, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் வரை போராடுவோம். எம்முடன் ஒன்றிணைந்திருங்கள். ஆதரவு தாருங்கள். இந்த அச்சுறுத்தல்கள் இல்லாத அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு இலங்கை நிச்சயம் ஒரு நாள் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதற்கு இலங்கை மீதான சர்வதேச பார்வையும், அழுத்தமும் மிக முக்கியமானது.  அப்படி ஒரு அமைதியான இலங்கையில் உங்கள் அனைவரையும் நான் மீண்டும் சந்திக்கிறேன் என்றார்.அனைவரும் எங்களுடன் ஒன்றிணையுங்கள். நாங்கள் போராடுவோம். எமக்கான அநீதிகளுக்கு நியாயம் கேட்போம். ஒரு நாள் நிச்சயம் அதை இலங்கையில் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையுடன் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

பிரகீத் வரைந்த கேலிச் சித்திரைபடைப்புக்கள்  கண்காட்சி ஒன்றும்  தொடக்கி வைக்கப்பட்டள்ளது. .எதிர்வரும் செப்.14 திகதி  பிரகீத் எக்நெலியகொடவின் சித்திர படைப்புக்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. கண்காட்சி நடத்தப்படும் இடம் மற்றும்  மேலதிக விபரங்களுக்கும்

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொட வரைந்த கேலிச்சித்திரங்களின்  (புகைப்படங்கள்)

1 Comment on “வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா எக்நெலிகொட”

  1. //இந்த அச்சுறுத்தல்கள் இல்லாத அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு இலங்கை நிச்சயம் ஒரு நாள் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. //

    அப்படியான நன்னாள் வெகு விரைவில் மலரட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *