பாலியல் பாகுபாட்டை குறித்து விழிப்புணர்வு

தோழர்களே,

 என் பெயர் நிர்மலா. கொற்றவை என்ற பெயரில் எழுதி வருகிறேன். பெண்ணியம் எனது களம். 

paypal எனும் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தில் சாதியின் பெயரால் குழுக்கள் உருவாக்கி போட்டிகள் நடத்தியது, அதற்கெதிராக தோழர்கள் திரண்டது, அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டது என்பதை உங்களில் பெரும்பாலோர் அறிந்திருக்ககூடும் .

 http://tamil.oneindia.in/news/2011/11/09/paypal-apologised-using-cast-names-for-celebration-aid0136.html

 பொதுவாக இங்கு குழுக்கள் இணைந்து போராடும் ‘அரசியல்’ பிரச்சனைக்கு நிகரான ஒன்றாக வெகுஜன ஊடகங்கள் (குறிப்பாக திரைப்படங்கள், விளம்பரங்கள்) பெண்கள், மாற்று பாலினத்தார் மீது தொடுக்கும் பாலியல் சுரண்டல், அவர்கள் போற்றும் பாலியல் பாகுபாடு ஆகியவற்றை குறித்து நான் கவலை கொள்கிறேன்.  இதை முன்னெடுத்து செயல்பட M.A.S.E.S எனும் ஒரு வட்டத்தை (அமைப்பு!) துவங்கியுள்ளேன்.  இதற்கு முன்பு சூர்யா நடித்து ‘Fair & Handsome Cream for Men’ எனும் விளம்பரம், ஆண் நகப்பூச்சு போடுவதை பெண்மையின் குணமாக பேசி ”நீ பெண்ணாக மாறப்போகிறாயா ஐய்யோ” என்று கொந்தளிப்பார்…அந்த விளம்பரத்திற்கு எதிராக துவங்கப்பட்ட ஒரு முகப்புத்தக பக்கம் இன்று ஒரு சிறு அமைப்பாக வளர்ந்திருக்கிறது. அவ்விளமரத்தை எதிர்த்து ASCI (Advertising Standards Council of India) வுக்கு புகார் அனுப்பப்பட்டது.  சில நாட்கள் கழித்து அந்த விளம்பரம் வரவில்லை, பிறகு ஒன்றிரண்டு முறை வந்தது….பிறகு காணோம்..

 விளம்பரங்களின் அரசயலை, குறிப்பாக பாலியல் பாகுபாட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை எனது களமாக எடுத்து செயல்பட்டு வருகிறேன்.  இதற்காக ஒரு கூகிள் வட்டம் (google groups) துவங்கியுள்ளேன், அழைப்பின் பேரில் அதில் இணையலாம். உங்கள் அனுபவங்களை, வழிகாட்டுதலை அதில் பகிர்ந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் எனக்கு இக்கடிதத்தின் வாயிலாக பதில் தெரிவித்தால், இணைக்கிறேன். உங்கள் ஆதரவு கிடைத்தால் உதவியாக இருக்கும்.

 ebay.in இன் பாலியல் பாகுபாட்டை போற்றும் விளம்பரத்திற்கெதிராக உங்கள் கையெழுத்தை இட்டு ஆதரவு தெரிவியுங்கள். நன்றி

 http://www.change.org/petitions/ebayin-we-want-ebayin-to-remove-the-gender-discriminating-promo-on-their-website

 கொற்றவை

http//saavinudhadugal.blogspot.com

http://www.facebook.com/pages/MASES-Movement-Against-Sexual-Exploitation-and-Sexism/280244415362023

3 Comments on “பாலியல் பாகுபாட்டை குறித்து விழிப்புணர்வு”

  1. வணக்கம்,

    இத்தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி…ASCI குறித்து இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ASCI க்கு அனுப்பிய புகாருக்கு அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.. email, Face Book, நேரடி கடிதம் என்று தொடர்ந்து அவர்களிடம் இருந்து பதில் கேட்டேன் வரவில்லை…அந்நிறுவன முதல்வருக்கும் கூட கடிதம் எழுதினேன்…பயனில்லை…

    இருந்தாலும் அவர்கள் நிறைய விளம்பரங்களை தணிக்கை செய்துள்ளனர், முகப்புத்தகத்தில் ‘சில நபர்களுக்கு’ மட்டும் பதில் சொல்கிறார்கள்…எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை…நன்றி

  2. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

    ஆண்களின் உள்ளாடைகள். பர்ஃபுயூம், வாகனத்தின் டயர் என்பவற்றின் விளம்பரங்களின் போதும் அரைகுறை ஆடையோடு பெண்களைத் தோன்றச்செய்து (பணத்துக்காய் மாய்ந்து மாய்ந்து இதில் “நடிக்கும்” பெண்களை என்ன சொல்ல! 🙁 ), பெண்ணை வெறும் “விளம்பரப் பண்டமாய்” மாற்றியுள்ள அபத்தத்துக்கு எதிரான உங்கள் போராட்டம் போற்றத்தக்கது நிர்மலா. தொடரட்டும் உங்கள் பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *