தாமி

 thami
  • சிறார் கைதிகளின் அவலம் குறித்து HARD TIME என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தவர் கைலி கிரே என்னும் பெண்மணி. இப்படம் இருளில் தவிக்கும் சின்னஞ்சிறு பூக்களின் கருகல் வாசனையைப் பதிவு செய்திருக்கிறது.தாமி போன்ற பல்வேறு சிறுவர்களை முன்வைத்து இப்படம் எடுத்த சூழல் பற்றி அல்ஜசீரா இதழுக்கு விரிவாக விவரிக்கிறார்.   

சர்வதேச வளர்ச்சி என்ற பாடத்தில் எம்.ஏ பட்டம் பெறநான்  படித்துக்கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன்.செபு நகர சிறையில் வாடும் சிறுவர்களுக்காக இலவசமாக வாதாடும் சட்டநிபுணர் நினா வேலன்ஸோனாவை எனது விரிவுரையாளர் அப்போதுதான் சந்தித்திருந்தார். அக்குழந்தைகளின் கதை எனது மனதைவிட்டு அகற்றவே முடியவில்லை. தெற்கு „பிலிப்பைன்ஸ்ஸிலுள்ள செபுநகர சிறையில்
அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களைக் கண்டு உரையாடி, அவர்களது அவலங்களை பற்றி ‘ஹார்டு டைம்’ என்ற படத்தை எடுத்தவர் இயக்குநர் கைலி கிரே. அப்படம் உருவான விதம் பற்றியும், சிறார் கைதிகளின் இதயத்தை நொறுக்கும் கதைகளுக்குப் பின்னாலுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதில் அவர் பேசுகிறார்:சர்வதேச வளர்ச்சி என்ற பாடத்தில் எம்.ஏ பட்டம்பெற நான் படித்துக்கொண்டிருந்த போதுஇ பிலிப்பைன்ஸில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். செபு நகர சிறையில் வாடும் சிறுவர்களுக்காக இலவசமாக வாதாடும் சட்டநிபுணர் நினா வேலன்ஸோனாவை எனது விரிவுரையாளர் அப்போதுதான் சந்தித்திருந்தார். அக்குழந்தைகளின் கதை எனது மனதைவிட்டு அகற்றவே முடியவில்லை.
நினா வேலன்ஸோனா மற்றும் அவரது மகளுடன் இணைந்து செயல்பட்டு ஆறுமாதங்கள் பிலிப்பைன்ஸிள்ள ஆயிரக்கணக்கான சிறார் கைதிகளின் நிலை குறித்து ஆராய்ந்தேன். அச்சிறுவர்களின் விதி சர்வதேச அளவில் பேசப்படவேண்டும் என நான் உணர்ந்தேன். சிறு குற்றங்களுக்காக பெரியவர்களுடன் சேர்த்து சிறையில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள். உண்மையில் அவர்களுக்குத் தேவை வழிகாட்டல்இ அன்பு மற்றும் ஓரு நல்ல வீடுதானே தவிர சிறைத்தண்டனை அல்ல. பொதுமக்களின் கவனத்தை இந்த விஷயம் பெறவேண்டும். பெரியவர்களுடன் சேர்ந்து சிறுவர்களையும் சிறையில் அடைப்பது உண்மையில் பிலிப்பைன்ஸ் சட்டதிட்டங்களுக்கு எதிரானது என்பதையும் நான் கண்டுகொண்டேன். சிறையிலிருக்கும் அனைத்துச் சிறுவர்களின் கதைகளும் ஊடகங்களின் கவனத்தைப் பெறவேண்டும் என நான் முடிவு செய்தேன். அது அதிகாரிகளை அவர்களுக்காக ஏதாவது செய்யவைக்கும்.ஆறுமாதகால ஆவுய்க்குப் பிறகு உள்ளுர் ஆட்கள் உதவியுடன் படப்பிடிப்புக்கு ஏற்பாடானது. செபு நகர சிறைக்கு மூன்று வாரங்கள் படம் பிடித்தோம். தினமும் சிறைக்குள் செல்வது ஆரம்பத்தில் சிரமமானதாக இருந்தது பிறகு நிலைமை சீரானது. வாரம் ‘ஒருமுறை அச்சிறைக்குச் சென்று சிறார் கைதிகளைச் சந்திக்கிற எண்பத்தி நான்கு வயதான சட்டநிபுணர் வேலன்ஸனாவுடன் நாங்கள் அங்கு சென்றோம். அவரது பெருந்தனமை எங்களுக்கு உதவியது. அந்தச் சிறுவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடும் அவர்இ சட்டங்களை தேசிய அளவில் மாற்றவும் போராடுகிறார். அவரும் உள்ளுர் மக்கள்  சிலரும்தான். நான் சந்தித்த மனிதர்களிலேயே ‘ஒரு உந்துதலை உருவாக்குவதில் உன்னதமான வர்களாகத் தெரிகிறார்கள். அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறிஇ சிறைக்குள்  சிறுவர்களைப் படம் பிடிக்க அவர்தான் உதவினார். சிறையைச் சென்று பார்த்தபோது அங்கே பாகாப்பு வசதிகளற்று கைதிகள் இருப்பது ஆச்சரியமளித்தது அறைகளுக்கிடையே அவர்கள் சுதந்திரமாக உலவினர். சிறுவர்களிடம் சிறக்காவலர்கள் அன்பாக நடந்து கொண்டனர்; அச்சிறுவர்கள் அங்கே இருக்கலாகாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். சிறைக்குள் நெரிசல் நெரிசல ;அவர்களின  வயது  திடுககிடச  செய்வதாகஇருந்தது.  எட்டு வயதுகாராப் பிள்ளைகள.;.செபு பகுதியின் வட்டாரப் பாசையை பேசக் கூடிய உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் ‘ஒருவர் என்னுடன் வந்தார். ஆர்வத்துடன் தங்கள் கதைகளை அச்சிறுவர்கள் எங்களிடம் கூறினர். சிறையிலிருந்து அதன்மூலம் விடுதலை பெறமுடியும் என அவர்கள் நம்பினர். அவர்களது கதைகள்  இதயத்தை நொறுக்குவனவாகஇருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் பசியின் காரணமாக உணவைத் திருடியவர்களே. தம் பெற்றோர்களால் அன்பு செலுத்தப்பட வேண்டிய மற்றும் பாகாக்கப்பட வேண்டியதாக அவர்களது நிலமை  இருந்தது. அவர்களுக்கென உறவினர்கள் எவரும் இல்லாததால் அவர்கள் சிறயிலிருக்கின்றனர்.ஃபிலிப்பன்ஸில் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் வறுமைஇ ஊழல்இ சமச்சீரற்ற வகையில் புழங்கும் பணம் மற்றும் அதிக மக்கள் தொகை பெருக்கம் ஆகியவை அந்நாட்டின் முக்கியப் பிரச்சினகளாக இருக்கின்றன. . மிண்டானாவில் நடக்கும்  ஆயுதந்தாங்கிய போராட்டமும் அம்மக்களுக்கு மேலும் ஒ’ரு பிரச்சினையாக உள்ளது. தெருவில் வசித்தல்இ வேலை செய்தல்இ பிச்சையெடுத்தல்இ சுத்தம் செய்தல்இ சிறு திருட்டு மற்றும் பாலியல் தொழில் போன்றவற்றை இக்குழந்தைகள் தமது இருப்பின் பொருட்டு செய்யும் படிக்குவறுமையும்இ வன்முறையும் தூண்டுகிறது. தமது இருப்பிற்காக அவர்கள் செய்கின்ற காரியங்கள் குற்றத்தன்மை கொண்டதாக மாற சட்டத்திற்கும் அவர்களுக்குமிடையே ‘ஒரு முரண் உண்டாகின்றது.‘ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல்’ என்பதை அவர்கள் விரும்பிச் செய்வதில்லை; அது அவர்களது வாழ்வின் ‘ ஓரு அம்சமாகவே உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளிள்ள பல சிறைகளைப் போலவே அந்தச் சிறையும் ‘ஒ ஓரு ‘மினி நகரம்’ போல வியாபாரங்கள் நடப்பதாகவும்இ குடும்பங்கள் குடியிருப்பதாகவும் இருந்தது. ‘லார்டு ஆஃப்த ஃபிளைஸ்’ போல சிலர் அங்கே இருந்தனர்.

தனது ஒ’ன்பதாவது வயதிலிருந்து அச்சிறைக்குள் வந்து போய்க் கொண்டிருக்கும் பதினொரு வயது தாமி எங்கள் படத்தின் பெரும் பகுதியில் வருகிறான். வறுமையும் பெற்றோர் அன்பில்லாமையும் தான் அவனது விதி. பணக்காரர்களிடமிருந்துதான் தான் திருடியதாகஅவன் சொன்னான். தனது ‘ஒரே ஜோடி உடையுடன் சிறையிலிருக்கும் அவன்இ காலையில் தூங்கியெழுந்தவுடன் முகம் கழுவிக் கொண்ட பிறகுஇ ‘ஒரு தட்டு சோற்றுக்காக வரிசையில் நிற்பான். பிற கைதிகளுக்குப் போதைப் பொருள் கொடுக்க மூத்த கைதி யாராவது அவனை உதவச் சொல்லலாம்.அவனது பெற்றோர்கள் குடித்தே பொழுதைக் கழிக்கின்றனர். குடிக்காமல் இருக்கும் நேரத்தில் மட்டும் அவனது அம்மா சந்தையில் மீன் விற்பாள். தாமி சிறைக்குப் போனதற்கு அவனது பெற்றோர்கள்  இருவரும் ‘ஒருவரையருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தனர்; முடிவில் அவர்களில் ‘ஒருவரும் அவனுக்கு நேர்ந்ததுபற்றி கவலைப் படவேயில்லை.

சிறையிலிருந்து அவன் விடுதலையானவுடன்இ தன்னுடன் அவன் சேர்ந்திருக்கக்கூடாது என அவனது அம்மா கூறிவிட்டாள். வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதையும்இ அம்மாவைஇ சகோதர சகோதரிகளைக் காணவேண்டும் என்பதையும் தான் எந்த அளவுக்கு எதிர்பார்த்தேன் என அவன் எங்களிடம் தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தான். அவனது அம்மா அவனை நிராகரித்தது இதயத்தை நொறுக்குவதாக இருந்தது. நான் படம்பிடித்த சிறுவர்கள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள் என்பதையெண்ணி வீட்டுக்குச் செல்லவே எனக்குக் கஷ்டமாக இருந்தது. இன்னொருபடம் எடுக்கநான் மீண்டும் அங்கு திரும்பிச் செல்லவில்லை.

ஆனால் அங்குள்ள குழந்தைகளிடம் எஸ்பெரென்ஸாஇ வேலன்ஸோனா மற்றும் அவரதுசேவை அமைப்பு மூலமாக தொடர்பிலிருந்தேன். அப்படத்தை முடித்த பிறகுஇஃபிலிப்பைன்ஸிலுள்ள சிறார் கைதிகள் பற்றி பல சர்வதேசக் கதைகள் இருந்தன. ஐ.எல்.ஒ”இ யூனிசெஃப்இ சேவ் த சில்ரன் மற்றும் பல உள்ளூர் என் ஒ.ஜி”க்கள் மாற்றத்திற்காக அரசிடம் பேசின. ஒன்பது வருடபிரச்சாரத்திற்குப் பிறகுஇ ஜுவெனைல் நீதி மசோதா (சிறுவர்களுக்கான சட்டம்) நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல்28இ 2006ல் அதிபர் குளோரியா அர்ரோயோ மசோதாவில் கைசாத்திட்டார். ஃபிலிப்பைன்ஸில் பதினைந்து வயதிற்குட்பட்டவர்கள் மீது கிரிமினல் குற்றம் சுமத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாக ஆகியுள்ளது. முன்பு ‘ஒன்பது வயதுக் குழந்தை மீது கூட கிரிமினல் குற்றம் சுமத்த முடியும். புதிய சட்டம் அமுலுக்கு வந்தவுடன்இ நாட்டிலுள்ள பல்வேறு பெரியவர்களுக்கான சிறைகளிலுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களை வேறு நல்ல வாழிடங்களுக்கு மாற்றும் மிகப்பெரிய பணி துவங்கியது.

ஜுவெனைல் டிடென்சன் சென்டர்கள்சிறுவர்களுக்கென)ஏற்படுத்தப்பட்டன. குழந்தைகள் மீதுஎந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படுவதில்லை அவர்களைக் கைது  செய்வதுமில்லை அவர்களது குடும்பத்தினரிடமோ அல்லது அவர்களை வளர்க்க விரும்புகிறவர்களிடமோ அவர்கள் சேர்க்கப்படுகின்றனர்; அல்லது மாற்று ஏற்பாட்டின் கீழ் அவர்கள் கவனித்துக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால்இ இவையனைத்தும் மற்றும் அவனது நண்பர்கள் விஷயத்தில் நடக்கவில்லை. நான் படம் பிடித்த ஐந்து சிறுவர்களில் ஒ’ரேயொரு சிறுவன் மட்டுமே பள்ளிக்கு மீண்டும் திரும்பிச்சென்றான்; மூன்றுபேர் இறந்து போய் விட்டனர். பணக்காரனாக வேண்டும் என்ற கனவு தாமிக்கு பலிக்கவில்லை. புத்திசாலியாகவும் நம்பிக்கையோடும் அவன் இருந்த போதும்இ நிலைமைகளை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஷாபு என்ற போதைப் பொருளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட மாரடைப்பால் தாமி தனது பதினான்காவது வயதில் இறந்தான்.

அவனது நண்பன் பன்ஸ ‘ஒரு கார் மோதி தனது பனிரெண்டாவது வயதில் இறந்தான். அச்சிறுவர்களால் வாழ முடியவில்லை. ஏனென்றால்இ சிறையிலிருந்து விடுதலையானதும் அவர்கள் மீண்டும் தெருவிற்கே சென்று வாழவும் தமது வலியையும் பசியையும் மறக்க வேண்டியவற்றைச் செய்யவும் தலைப்பட்டனர். தாமியினது கதையைப் போன்றதொரு சூழலில் இன்று உலகமெங்குள்ள சிறைகளில்இ ஏறத்தாழ ‘ ஓரு மில்லியன் குழந்தைகள் அவதிப்படுகிறார்ள் என்பது ஒ’ரு துயரமிக்க செய்தியாகு 

 

தமிழில் வீ ஆனந்தராஜ்
ஜனவரி 2010 உன்னதத்தில் வெளிவந்த  இவ் ஆவணப்படத்தின்  விமர்சனத்தை ஊடறுவுக்கு அனுப்பித் தந்த கௌதம் சித்தார்த்தனுக்கும் நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *