2011 நவம்பர் 09 கொழும்பு இலங்கை:
அரசாங்க தகவல்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களால், 2011 நவம்பர் 05 ஆம் திகதிவெளியிடப்பட்டபத்திரிகைக் குறிப்பில், இலங்கை தொடர்பான அல்லது இலங்கை தொடர்பான உள்ளடக்கங்களைத் தாங்கிவரும், இலங்கையிலிருந்து அல்லது வேறு எங்கேயும் இருந்து பதிவேற்றம் செய்யப்படும், அனைத்துஇணையத்தளங்களும், அங்கீகாரத்திற்காக பதிவு செய்யப்பட வேண்டுமெனகேட்கப்படுவது குறித்து, கீழே உள்ள சிவில் சமூக நிறுவனங்களாகிய நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையொன்றின் பிரகாரம், இது தொடர்பாக, விசேடித்த இணையத்தளங்கள் பல முடக்கப்பட இருப்பது குறித்த, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளையும் நாம் கண்டிக்கின்றோம். இவ்விரு ஏற்பாடுகளும் ஒரு முனைப்பின் பகுதிகளா இல்லையா என்ற தெளிவற்ற நிலையில், அவைகள் இலங்கையில ; சுதந்திரமான வெளிப்படுத்துகைக்கு, ஒரு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அத்துமீறுகையை பிரதிபலிக்கின்றன. .
www.lankanewsweb.com ,www.srilankamirror.com, www.srilankaguardian.org,.www.lankawaynews.
, வெளிப்படைத்தன்மை, இசைந்துபோதல், சமனான நடத்துகை என்பனவற்றுக்காக தகவல் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்புஒழுங்குபடுத்துகை ஆணைக்குழு என்பன எந்தச் சட்டகஅமைப்பு மற்றும் செயன்முறையின் கீழ், இவ்வகையான பதிவு ஒன்றைக் கட்டாயப்படுத்தப்படலாம் என விளக்கம் அளிக்க வேண்டும். இணையத்தளங்களை முடக்குதலும் பதிவு செய்ய வேண்டப்படுதலும் உண்மையில் தணிக்கைக்கு முன்னதான ஒரு வடிவத்தை உருவாக்குவதுடன், இணையம் மற்றும் வெளிப்படுத்துகைச் சுதந்திரத்தின் மீதான அச்சமூட்டும் விளைவுகளையும் உண்டுபண்ணுவது மாத்திரமல்லாமல், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள், தனிநபரின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர உரிமையை உத்தரவாதப்படுத்தும் இலங்கை அரசியலமைப்பு உறுப்புரை 14 (1) (அ) போன்றனவற்றின ; முதற் தோற்ற மறுP கைகளையும் உருவாக்குகிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச (ICCPR)சமவாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்வதேச சட்டக் கருவிகளின் அமுல்படுத்துகையினை இலங்கை ஏற்றுக்கொண்டமையானது, சர்வதேச நியமங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் கடப்பாடுகளை தெளிவுபடுத்துகிறது.
இலங்கைச்கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் உண்மையான இலக்குக் குறித்து கவலைகளை எழுப்புகிறது. தகவல் திணைக்கள பத்திரிகைக் குறிப்பு பதிவுச் செயன்முறை எதனைக் கொண்டிருக்கும் என்றோஇ ஏதாவது வகையிலான பொறுப்பு அல்லது நிபந்தனைகள் விதிக்கப்படும் எனவோ குறிப்பிடாததை நாம் கவனிக்கிறோம். அரசாங்கத்தின் இந்த நகர்வானதுஇ செய்தி இணையத்தளங்கள் அரசாங்கத்திடம் பதிவு செய்வதைக் கட்டாயமானதாக்கும்இ சட்டவாக்க வரைபிற்கான திட்ட ஆலொசனைஇ 2010 இல் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டவாறாகஇ அதனை நடைமுறைப்படுத்துவதின் முதலாவது படியாக நாம் இதனை நோக்குகிறோம். பத்திரிகைக் குறிப்பு தொடர்பாக எம்மிடம் மேலதிகமான அக்கறைகள் உள்ளன. முதலாவதாக பத்திரிகைக் குறிப்பானது அமைச்சிலே பதிவு செய்துகொள்ள வேண்டிய இணையத்தளங்களின் அல்லது ஆட்களின் வகைகள் குறித்து போதிய தெளிவினை வழங்கவில்லை. இரண்டாவதாக சர்வதேச செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் பதிவு செய்வதற்கான தேவைப்பாடுகள் எவ்வாறுபிரயோகிக்கப்படும் என இங்கு தெளிவில்லாதிருப்பதுடன்இ இலங்கை தொடர்பாக செய்திகளை பிரசுரிக்கும் சர்வதேச நிறுவனங்களால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் குறித்தும் தெளிவில்லை
2011 மே 26 இல் UNHRCக்கு சமர்ப்பிக்கப்பட்ட கருத்து வெளிப்படுத்துகைச் சுதந்திரத்திற்கான ஐநாவின் விசேட விசாரணை அறிக்கையாளர் Frank La Rueவின் அறிக்கையின் உதாரணத்தில் பிரதிபலிக்கப்பட்டவாறான, சர்வதேச சிறந்த பழக்கங்களின் எல்லை நியமங்களோடு இந்த ஏற்பாடுகள் ஒன்றமையப் போவதில்லை எனச் சொல்லத் தேவையில்லை. இப்பதிவுச் செயன்முறைக்காக, அபகீர்த்தியை ஏற்படுத்துதல் மற்றும் தனிப்பட்டதன்மைக்கான உரிமை குறித்த கவனங்களே அன்றி, ஜனநாயக சமுதாயம் மற்றும்சர்வதேச நியமங்களின் விழுமியங்களுடன் ஒத்துப்போகும் வெளிப்படுத்துகைச் சுதந்திரம் மீதான, சட்டரீதியான வரையறைகளுக்கான, சட்டரீதியான காரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. இலங்கைச் சட்டத்தின்கீழ் அபகீர்த்தியை ஏற்படுத்துதல் அல்லது தனிப்பட்ட-தன்மையை அத்துமீறல் சந்தர்ப்பங்களுக்காக, சட்டப் பரிகாரம் தேடுவதற்கான போதிய சந்தர்ப்பங்கள் உண்டு. அது குறித்து கூட அமைச்சு இதுவரைக்கும் மேற்கொண்ட ஏற்பாடுகள,; பொருத்தமற்றவையாகவும், ஒன்லைன் ஊடக ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதாக அது கூறிக்கொள்ளும்இலக்கிற்கு பொருதத் மற்றனவாகவும், விகிதசமமற்றதாகவும் உள்ளன. மேலும் இவ் ஏதேச்சாதிகாரமான முடக்குகைகளின் நடைமுறைப்படுத்தல் தன்மையும் கேள்விக்குரியது.
இணையத்தளங்கள் மீது பரந்தளவிலான முடக்கங்களை விதிப்பதற்கான எந்த முயற்சியும், அவைகள் குறித்த அதிகரித்த விருப்பை ஏற்படுத்துவதுடன், அவைகளை இலகுவாகவும் பரவலாகவும் கிடைக்கச் செய்யக்கூடியதாகவுள்ள, சுற்றிவளைத்துச் செல்லும் கருவிகளை (வேறு ஒருவர் மூலம் செய்யப்படுதல்) இவ் இணையத்தளங்களை சென்றடைவதற்கு பயன்படுத்தவும்வழிசெய்யும். இணையத்தளங்களை முடக்குவதென்பது அரசியமைப்புக்கு எதிரானதும் தாராண்மையற்றதும் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமாகாததுமாகும். குறுகியதனிப்பட்ட விருப்பங்களைப் பாதுகாப்பதற்கு, அரச அதிகாரிகளின் தனிப்பட்ட தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்ட, இந்த ஏதேச்சாதிகாரமானதும்,சட்டத்திற்குப் புறம்பானதுமான வரையறைகளின் பின்விளைவுகள் ஆவன, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் சர்வதேச நியமங்களை முற்றுமுழுவதாக மீறுவதாக உள்ளதுடன், கருத்து வேறுபாடுடையோருடன் மோதுவதற்கும் வழிவகுக்கும். இணையத்தளங்களைமுடக்குவதற்காக அரசாங்கத்தால் வெளியிடப்படும் ஏதேச்சாதிகாரமான கட்டளைகளுக்கு அமைந்து ஒழுக்கும் இணைய சேவைவழங்குனர்கள் குறித்தும் நாம் கவலையடைவதுடன், அடிப்படை உரிமைகளை மீறுதலில் அவர்கள் இணைக்குற்றமிழைப்பவர்களாக ஆகுவதற்கு அவர்களும் இணைந்து செல்வதும் குறித்தும் நாம்நினைவூட்டுகிறோம். இணையத்திலே பல்வேறு ஊற்றுக்களிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுவதனையும், தகவல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மனித அடிப்படை உரிமையிலே உள்ளடக்கியுள்ளது என்பதையும் அழுத்தியுரைப்பதுடன், பத்திரிகைக் குறிப்பிலே உள்ளடக்கியுள்ள பதிவுத் தேவையினை தேவையற்றதாக்கும்படி அரசாங்கத்திற்குஅழைப்பு விடுக்கின்றோம்.
கையெழுத்திட்டுள்ளோர்:
1. அனோமா இராஜகருணா
2. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பு
3. செற்றிக் டி சில்வா
4. மாற்றுக்கொள்கைக்கான நிலையம்
5. சந்திர ஜயரத்ன
6. சந்திரகுப்தா தெனுவார
7. சுலானி கொடிக்கார
8. டீனி உயாங்கொட
9. கலாநிதி தேவநேசன் நேசையா
10. டில்றுக்ஷி ஹநதுன்நெத்தி
11. எமில் வன் டேர் போர்ட்டேன்
12. சம தளம்
13. காணாமல் போனோரின் குடும்பங்கள்
14. மிதக்கும் உலகம் கரையரங்குக் கம்பனி
15. சுதந்திர ஊடக இயக்கம்
16. கௌதமன் பாலச்சந்திரன்
17. ஹேர்மன் குமார, தேசிய மீனவர் ஐக்கிய இயக்கம்
18. ஐNகுழுசுஆ
19. ஐஆயுனுசு ஆசிய சமூகம ;
20. து.ஊ. வெலியமுன, சட்டத்தரணி
21. ஜயதிலக்க கமலவீர
22. ஜொவித்தா அருளாந்தம்
23. ஜொனிற்றா அருளாந்தம்
24. மு.ளு. இரத்தினவேல்
25. பேராசிரியர். கலிங்க ரியூடர் சில்வா
26. கௌசல்யா அட்டியல
27. கனிஷ்கா இரத்தினபிரிய
28. லக்ஷ்மன் குணசேகர, தலைவர் தென்னாசிய சுதந்திர ஊடகச் சங்கம் இலங்கைப் பீடம்
29. லங்கா நேசையா
30. லால் விஜேநாயக்க, சட்டத்தரணி
31. ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள்
32. லூவி கணேசதாசன்
33. மகேந்திரன் திருவரங்கம்
34. கலாநிதி. மறியோ கோமெஸ்
35. மறிசா டி சில்வா
36. இலங்கையின் தாய்மாரும் புதல்வியரும்
37. முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயற்பாட்டு ஒன்றியம்
38. இலங்கை தேசிய சமாதானச் சபை
39. நிர்மனூஷன் பாலசுந்தரம்
40. பீற்றர் ரசெல், முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர்
41. பிரியா தங்கராஜா
42. பிரியதரஷ் pனி ஆரியரத்ன, சமூக ஜனநாயக ஒன்றியம்
43. சு.ஆ.டீ சேனநாயக்கெ
44. வாழ்வுக்கான மனித உரிமை நிலையம்
45. இப்பொழுதே உரிமைகள் ஜனநாயகத்திற்கான ஒன்றியம்
46. றிக்கி பெர்னாண்டோ
47. கலாநிதி. செல்வி. திருச்சந்திரன்
48. ஷர்மினி போய்ல்
49. சாந்தி சச்சிதானந்தம்
50. ஷாரினி ஜெயவர்தன, எழுத்தாளரும் படப்பிடிப்பாளரும்
51. ஷிவன் அஹமட்
52. சுபா விஜயசிறிவர்தன
53. சுமதி சிவமோகன்
54. சியாமளா கோமஸ்
55. விழுது
56. பெண்கள்நிலையம் ஜா – எல
57. பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு
58. பெண்கள்அரசியல் கல்வியகம்
காணாமல் போனோரின் குடும்பங்கள்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் சந்தியா பிரகீத் எக்னலியகொட ஊறுவுக்கு அனுப்பித் தந்தமைக்கு எமது நன்றிகள்
இணையத்தளங்களை ஏதேச்சாதிகாரமாக முடக்குதலும் பதிவு செய்தலும்: