மாதவி ராஜ் (அமெரிக்கா)
உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை.சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஒஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம். ‘ஆதமின்டே மகன் அபு’ |
கடந்த ஜன் மாதம் திரைக்கு வந்த மலையாள திரைப்படம் ”ஆதமின்டே மகன் அபு’.
இந்த வருடம் இந்தியா சார்பாக, ஓஸ்கர் அகடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திரைப்படம். ஈரானிய இயக்குனர் ‘மஜிதி மஹிதி’யின் உயர்தர வரிசைப் படங்கள் போல் இந்தியாவிலிருந்து தற்போது இப்படம் வெளியாகியுள்ளது.
‘ஆதமின்டே மகன் அபு’
ஒரு ஹஜ் யாத்திரை.அதற்கான ஒரு வயதான தம்பதிகளின் முயற்சி. எந்த ஒரு பிரச்சினையான விடயமும் இல்லாமல் மெதுவான வேகத்தில் நகரும் ஆழமான படம் தான் ஆதாமின்டே மகன் அபு!
அபுவும் (சலீம்) ஆய்{ம்மாவும் (ஸரீனா வஹாப்) மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகள். அத்தரும் யுனானி மருந்துகளும் விற்று ஜீவனம் நடத்துகிறார்கள். அபுவிற்கு ஒரே ஒரு கனவு . மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் சென்றுவர வேண்டும். ஒரு ட்ரவல் ஏஜன்சியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து விட்டு பணம் சேகரிக்க ஆரம்பிக்கின்றனர். வியாபாரம் நலிந்த நிலையில் பத்து வருடம் சேமித்த பணமும் கூட போதாதென்கிற நிலமையில்
மாடு,மரம் என அனைத்தையும் விற்று ஹஜ் செல்ல தயாராகிறார்கள் இந்த தம்பதிகள். புனித யாத்திரைக்குத் தயாராகி புது துணிகள் எல்லாம் எடுத்து ஊரில் எல்லாரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புமுன் மீண்டும் பணப்பிரச்சினை. ஊரிலுள்ள அனைவரும், ட்ராவல் ஏஜன்ட் உட்பட பலர் உதவி வருகிறார்கள்.ஆனாலும்..தம்பதிகள் ஹஜ் சென்றார்களா என்பது மீதி கதை.
இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு.
உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஒஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம். ‘ஆதமின்டே மகன் அபு’