கிறிஸ் மனிதனுக்கு பயந்து இருக்கும் குமரியின் கேள்வி
மீண்டும் இனத் துவேசத்தையும் பயமுறுத்தலையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை அரசு. அது தான் கிறிஸ் மனிதன் என்ற விவகாரம் மனித உரிமை அமைப்புகளினால் முன்வைக்கப்படும் போர்க்குற்றத்தை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒரு அங்கமாக புலம் பெயர் நாடுகளிலுள்ள தமது ஆதரவாளர்கள் மூலம் இலங்கை அரசு கிறிஸ் மனிதன் என்ற விவகாரம் பொய் என்ற செய்தியை கூற முற்படுகின்றது. இதன் விளைவாகத் தான் அண்மையில் இலங்கை அரச ஆதரவு இணையத்தளங்களில் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் கட்டுரை ஒன்று (அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை!) பிரசுரம், மறுபிரசுரம் செய்யப்பட்டதன் பின்னணியாகும்.கடந்த ஒரு மாத காலமாக ‘கிரீஸ் பூதங்கள’; என்று மக்களால் அழைக்கப்படும் ஒரு வகையான மர்ம மனிதர்களின் நடமாட்டம் சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. தமது அடையாளத்தை மறைப்பதற்காக ஒருவகை கறுப்பு களியை உடலெங்கும் பூசியுள்ளதாலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குவதாலும் அங்குள்ள மக்கள் ‘கிரீஸ் பூதங்கள்’ என்று அந்த மர்ம மனிதர்களை அழைக்கிறார்கள். இதில் என்ன துயரம் எனில் இந்த மர்ம மனிதர்களின் இலக்கு சிறுபான்மை இனப்பெண்களேயாகும்.
இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இதுவரை தாக்குதல் நடந்த இடங்களில் எந்த திருட்டும் நடக்கவில்லை, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் சிறைப்பிடிக்க முற்பட்டபோது அவர்களை இலங்கை அரசின் இராணுவம் காப்பாற்றி தம்மோடு அழைத்து செல்வது தினமும் நடந்து வருகிற கதையாக தற்போதும் உள்ளது. ஆனால் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்…இதெல்லாம் பொய் கட்டுக்தை என்கிறார். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கிறிஸ் மனிதன் பற்றி விசாரித்தவர்களில் ஒரு சிலரைப் பாருங்கள் அனைவரும் இலங்கை அரசை சேர்ந்தவர்கள்.
பேராசிரியர் திஸ்ஸவிதாரண, ஆலையடிவேம்புப் பிரதேசத்தைச்சேர்ந்த பாராளுமன்ற வாதியான பியசேனா யாழ்நகர அதிபர் இமெல்டா சிங்கள தமிழ் எழுத்தாளரும், பொதுநலவாதியுமான மத்துக்கிரிய விஜயரட்னா சமூக சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என பலரிடம் விசாரித்தாராம் மடம் ராஜேஸ்வரி அவர்களே! இவர்கள் எல்லோரும் மனித பிணங்களின் மேல் அரசியல் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் மனித உரிமைவாதிகள் என நீங்கள் கருதினால் அதை நான் யாரிடம் சொல்லி அழ…