தேவா (ஜெர்மனி)
இத்தகவல்கள் ஆதரவு-எதிர்தரப்பினால் தங்கள் சார்புக்கு ஏற்றமாதிரி கருத்துக்களை தரலாம். இதிலே யோசிக்கவைப்பது என்னவெனில் ஒரு இளம்பெண்-போராடி வாழவேண்டிய வளர்பருவத்தினள் தன்னை எரித்துக்கொண்டு ,,எதற்காக நான் உயிரையே கொடுக்கிறேன்,, என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பதுவே. |
செங்கொடியின் தீக்குளிப்பு யாவரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலே, பல இணையங்களிலுமிருந்து அவளின் மரணத்துக்கு பல்வேறுகாரணங்கள் கற்பிக்கப்படு கின்றன. தீக்குளிப்பு செய்யும்படி தூண்டிவிடப்பட்டதாயும், காதல்தோல்வியால் அவள் இம்முடிவுக்கு வந்ததாயும் வெளியான தகவல்கள் எந்தளவுக்கு உண்மையானவை என ஆராய்வது அல்ல என் எண்ணம்.
இத்தகவல்கள் ஆதரவு-எதிர்தரப்பினால் தங்கள் சார்புக்கு ஏற்றமாதிரி கருத்துக்களை தரலாம். இதிலே யோசிக்கவைப்பது என்னவெனில் ஒரு இளம்பெண்-போராடி வாழவேண்டிய வளர்பருவத்தினள் தன்னை எரித்துக்கொண்டு ,,எதற்காக நான் உயிரையே கொடுக்கிறேன்,, என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பதுவே. இவளுடைய முடிவு மிக மிக உணர்ச்சிகரமானது என்பதை நிச்சயமாய் மறுக்கமுடியாது. செங்கொடி எத்தனையோ போராட்டங்கள் செய்திருக்கின்றாள்.ஒரு தீவிரத்தின்; தீவிரம் அவள் செயற்பாடுகளிலே இருந்தது. சிறுமியாய் இருந்தபோதே போராட்டவாழ்விலே தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவ்வளர்இளம்பெண் தான் செத்தாவது மற்றய 3 தூக்குதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளை காப்பாற்றமுயன்றாள் என்பதும் செய்திகளில் வந்தது. செங்கொடியின் தற்கொலை ஒரு நீதியான தீர்ப்பொன்றை- மரணதண்டனையே வேண்டாம் என்ற உறுதியான கோசத்தை வேண்டிநிற்கிறது என்பதே;வெளிப்படையாக புரிகின்ற முக்கியவிடயம்.
தன்னை மாய்த்துக்கொள்ளலுக்கு மிகப்பெரிய துணிவு தேவை. பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் விரக்தியின் பால்பட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைக்கு தூண்டப்படும் காரணங்கள் சொந்தவாழ்வின்-அரசியல் ;நிலைமை- (இன்னும்பலஏதுக்களும் இருக்கலாம்)மீதான விரக்தியே; என சாவுக்குபின் வெளியாகின்றன. இதனை ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும், செங்கொடி ராஐPவ்காந்திகொலைவழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 3பேரின் தூக்குதண்டனைக்கெதிராக தானே போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் காலத்திலா காதல்தோல்விக்காக உயிரை விடவேண்டும்?
இந்திய அரசின் இறையாண்மைக்கு-அதனுடைய சட்டங்களுக்கு முன்னால் பிரசையானவன் சிரம்தாழ்த்தியாகவேண்டுமென ஐனநாயகரீதியான கோட்பாட்டை வழிநடத்துவதுதான் சரி என்றுதான் ஒத்துக்கொண்டாலும் கூட, மரணதண்டனையிலிருந்து ஆயுள்தண்டனையாக்க சட்டத்தில் இடமில்லாமலா இருக்கிறது?எதிர்காலத்திலே இந்தியஅரசின் நீதித்துறைக்கு செங்கொடியின் தற்கொலை மரணதண்டனைதீர்ப்புபற்றி இதுவரைகேட்கப்படாமலிருந்த கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கிறது. தீர்ப்புபற்றிய மறுபரிசீலனை அல்லது கருணைமனு என்பவைகளுக்கு அப்பால் மரணதண்டனையே வேண்டாம் என்கிற கோசங்கள் நாடெங்கும் ஓங்கிஒலிக்கின்றன.
தற்போதய நாடாளாவிய போராட்டங்களையும், எதிர்ப்புக்களையும் சமாளிக்க அரசு தீர்ப்பினை இச்சமயத்தில் தாக்காட்டிக்கொண்டே பின்னர் அதனையே நிறைவேற்றலாம். இந்த ஆபத்து மரணதண்டனைதீர்ப்புசட்டத்தை- இது தேவைதானா-என்ற மறுபரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளாதவரைக்கும் இருக்கும்.
அண்மையில் டில்லியில் வெடித்த குண்டுவெடிப்பின் பின்புல கோசம்,,மரணதண்டனையை ரத்து செய்,, என்பதாக அறியப்படுகிறது. ஒரு ஐனநாயக-பல்லினஅரசு தாம் என மார்தட்டிக் கொள்ளும் இந்திய அரசு தனது நீதிசட்டங்களை; இன்னொரு சர்வாதிகாரஅரசின் அளவுகோல்களை; பின்பற்றி கடைப்பிடிப்பது பெரும்முரணான-சார்புநிலைப்பட்டதென தெளிவாகிறது. மேலும் கொலைக்கு,கொள்ளைக்கு,வன்முறைக்கு,(நீண்டபட்டியல் கொடுக்கலாம்) நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்படவேண்டும். நியாயமானதே. ஆனால் ,,பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் போன்ற காட்டுமிராண்டித்தனமான போக்காக மரணதண்டனை தீர்ப்புக்களை இந்நூற்றாண்டிலும், அளிப்பது எவ்விதத்தில் நியாயம்?
செங்கொடியின் மரணம் நீதிக்கு முன்னால் ஒரு கேள்விக்குறியை முன்வைத்திருக்கிறது என்பதே நேர்மையாய் சிந்திக்கப்படவேண்டிய விடயம்.