குமுதினி, ப்ரியா (இலங்கை )
துன்பங்களுக்கு முகம் கொடுக்கும் மனித உரிமைகளுக்கு வரைவிலக்கணம் கொடுக்கபட்டிருக்கின்ற போதிலும் அதனை அதிகார அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ வலுவாக கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றனது. இவ்வாறான நிலையிலேயே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. |
(குமுதினி, ப்ரியா ஆகிய இருவரும் எழுதிய கட்டுரையின் பாகம் 1)
மனித உரிமைகளுக்கு வரைவிலக்கணம் கொடுக்கபட்டு இருக்கின்ற போதிலும் அதனை அதிகார அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ வலுவாக கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றனது. இவ்வாறான நிலையிலேயே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்நிகழ்வுகளில் வாழ்வதற்கனா உரிமைகள், உணர்வுகள், கருத்துச் சுதந்திரம், சித்திரவதைக்கு உட்படாமை கல்வி உரிமை, எனபன பேசப்பட்டு அவை செயற்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சர்வதேச குழு அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் படி மனித உரிமை மீறலில் இலங்கை முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் சேர்த்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கு முக்கிய அரசாங்க நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் உள்ளது
துன்பங்களுக்கு முகம் கொடுக்கும் மனித உரிமைகளுக்கு வரைவிலக்கணம் கொடுக்கபட்டிருக்கின்ற போதிலும் அதனை அதிகார அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ வலுவாக கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றனது. இவ்வாறான நிலையிலேயே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆந்நிகழ்வுகளில் வாழ்தற்னாக உரிமைகள் உணர்வுகள் உரிமை கருத்துச் சுதந்திரம் சித்தரவதைக்கு உட்படாமை கல்வி உரிமை எனபன பேசப்பட்டு அவை செயற்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும். சிறுபான்மையினரின் துன்பங்களுக்கு முகம் கொடுக்கும் சிறுவர்களுக்காக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு 1974 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் வெளியிடுகின்ற புள்ளிவிபரங்களிலிருந்து தெட்டத் தெளிவாகின்றது.
அந்த அடிப்படையில் பிலியந்தலையில் நடைபெற்ற சம்பவம் சிறுவர் உரிமை மீறலில் அதியுச்சக்கட்டமானது என்றே கருதவேண்டியுள்ளது அந்த சம்பவம் உணவிற்கான உரிமையை அப்பட்டமான முறையில் மீறியுள்ளது வீட்டுரிமையாளர்கள் இல்லாத சமயத்தில் ஐந்து பிஸ்கட்டுக்களை உண்டமைக்காக 14 வயது சிறுமியொருவர் கையில் கற்பூரம் கொளுத்தி சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் மனித உரிமை மதிக்கப்படுதல் என்பதற்கு அப்பால் மனிதாபிமானம் என்பதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. சிறுமி மட்டுமல்ல அவரது சகோதரரும் இதே வகையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு அந்த வீட்டின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்
மனதை உருக்கும் வகையிலான இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்ட்டதாக தெரியவில்லை.
மாறாக சிறுவர்களை வேலைக்கமர்த்தல் பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்துல் பழிவாங்கும் நோக்குடனும் கப்பம் பெறும் நோக்குடனும் அவர்களை கடத்துதல் சிறுவர்களை பிச்சையெடுக்க வைத்து பணம் சம்பாதித்தல் சித்திரவதைகளுக்கு உட்படுத்துதல் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமை நோய்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாமை சிறுவர்களுக்கான கல்வி மறுக்கப்படுதல் என சிறுவர்களுக்கெதிரான வன்முறைபட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. உடலியல், பாலியல்,உணர்வு,அலட்சியப்படுத்துதல்,சுரண்டல்,என சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்கள் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கிணங்க ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது மனித வாழ்க்கையில் சிறுவர் பராயமானது மிக முக்கியமான பருவமாகக் காணப்படுகின்றது. இப்பருவத்தில் இவர்கள் பெரியோரின் வழிகாட்டலில் அன்பு ஆதரவு என்பவற்றினை பெரம்பாலும் வேண்டியே நிற்கின்றனர். புpள்ளைகளின் ஆளுமை முழுமையாக வளர்ச்சியடைவதற்கு அன்புடனும் அரவணைப்புடனும் வழிகாட்டக் கூடிய குடும்பம் அவசியம். இவை அவர்களின் உரிமையுமாகும். இத்தகைய வழிகாட்ட இன்மையாலும் முறையான பாதுகாப்பின்மையினாலும் சிறுவர்கள் தங்கள் உரிமைகளை இழந்து துன்பப்படுகின்றனர்.
வுரலாற்று ரீதியாக நோக்கும் போது ஆரம்ப காலத்திலிருந்தே வறுமை,பாராம்பரியம்சமயம் என்பவற்றின் அடிப்படையில் சிறுவர்களது உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. சிறுவர்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான இன்னல்களுகஇகும் சுரண்டல்களுகஇகும் உள்ளாக்கப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இந்த வகையில் கடந்த நூற்றாண்டில் உளகளாவிய ரீதியில் சிறுவர்கள் கவனம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இதன ஓர் அங்கமாக சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் முதலாவது உலக மகாயுத்தத்தில் சிறுவர்கள் அனுபுவித்த துன்பங்களையும் அவதானித்த எக்லான்னர் ஜெப் என்ற பெண் 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தை ஜ்தாபித்தார். ஆனைத்து யுத்தஙகளும் சிறுவர்களுக்கு எதிராகவே தொடுக்கப்பட்டது. ஏன்று கூறிய அவர் சிறுவர்களை யுத்தத்தின் கொடுமையிலிருந்து பாதுகாக்க தனனுடன் கரம் கோக்குமாறு வேண்டினார்.
சிறுவர்களின் உரிமைக்காக முதலில் குரல் கொடுத்தவர் எனற அடிப்படையில் இவரால் முன்வைக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டு உலகாளவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் 1924 ம் ஆண்டு ஜெனவிவில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் அனைத்துலக மனதி உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டது இப்பிரகடனத்தில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும் தொடர்ந்தும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்பட்டனர்.