வடபகுதியில் பார்க்கும் இடமெல்லாம் பௌத்த மயம்! –

‘தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அம்மக்களின்  இதய பூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை பௌத்த மயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கலாம்.

இலங்கையின் வடபகுதியில் தாங்கள்  சென்ற  இடமெல்லாம்   திட்டமிட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டு வருவதாக சென்னையை தளமாகக் கொண்டியங்கும் The Weekend Leader எனும் இணையத் தளத்தில்வடபகுதியில் உள்ள தமிழர்  பிரதேசங்களுக்கு ஊடாகப் பயணம் செய்பவர்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என  குறிப்பிட்டுள்ளார்.  செய்திக் கட்டுரையில் தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமாகவும் அம்மக்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தி நிற்பதுமான இப்பிரதேசங்கள் தற்போது பௌத்த மயமாக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அம்மக்களின்  இதய பூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை பௌத்த மயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கலாம்.தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணம் செய்த போது பேரினவாத  ஆதிக்கத்தின் மனோநிலையை வெளிப்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் அவதானிக்க முடிந்தது. அங்கு நாம் சுவாசித்த இடமெல்லாம் பேரினவாதம  வீசியது. இலங்கை படைத்தரப்பின் ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாகப் பயணம் செய்பவர்களில் 90 சதவீதமானவர்கள் தமிழ் மக்களாவர். ஆனால் இங்கு கடமை புரியும் சிறிலங்கா படைத்தரப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதில் சொல்ல வேண்டும்.தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா படைத்தரப்பினரின் முகாம்களும் படைத்தரப்பினரும்
அதிகமாகக் காணப்படுகின்றன.

 
A recently constructed Buddhist stupa at Kanagarayankulam

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் ஏழாயிரம் சதுர கிலோ மீற்றரை சிறிலங்கா படைத்தரப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த 2,500 இந்து ஆலயங்களும் 400 கிறிஸ்தவ ஆலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்களை மீண்டும் புனரமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை.இப்பிரதேசங்களில் இருக்கின்ற சிறிலங்கா படைத்தரப்பினர் மட்டுமே பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் இப்பிரதேசங்களில்  கடந்த ஒரு சில ஆண்டுகளில் 2,500 புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட இராஜமகா விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.வடபகுதியில் ‘வடக்கின் வசந்தம்’ என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

A huge Buddha statue at Kilinochchi, the erstwhile capital of Tamil rebels

அதேவேளை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவித்தித் திட்டத்தின் பயன்கள் தமிழ் மக்களைச் சென்றடைவதில்லை. மாறாக அத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளில் சிங்கள இளைஞர்களே ஈடுபடுத்தப்பட்டு வருவதுடன், இத்திட்டங்களுக்கான ஒப்பந்தக்காரர்களாகவும் சிங்கள இனத்தவர்களே காணப்படுகின்றனர். செட்டிக்குளத்தில்புதிதாகக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இப்பகுதியில் மீள்குடியேறியள்ள எல்லா  மக்களுக்கும் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படாமல் 75 சிங்களக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, கொக்கச்சன்குளம் என்ற இடம் காலபொவசெவெள எனப் பெயர் மாற்றப்பட்டு அப்பகுதியில்  165 சிங்களக் குடும்பங்கள் புதிதாக குடியேற்றப்பட்டுள்ளனர். மடு வீதியை அண்மித்துள்ள தமிழ்ப் பாடசாலைகள் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் இப்பாடசாலைகள் மீண்டும் புனரமைக்கப்படாது இப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களச் சிறுவர்களுக்கான சிங்களப் பாடசாலை ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றது.

அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பினரின் ஆசிகளுடன் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அமைந்துள்ள காடுகளுக்குச் செல்லும் சிங்கள மக்கள் அங்குள் மரங்களை வெட்டிச் செல்வதால் காட்டு வளம் பாதிக்கப்படவுதாக உள்ளுர் மக்கள் கவலையை வெளியிட்டனர். இந்நிலையில், தமிழர் தாயப் பிரதேசத்தை சிங்கள மக்களின் பூர்விக இடமாக சித்தரிப்பதற்கு அங்கு செல்லும் சிங்கள தொல்லியல் துறை நிபுணர்கள் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடபகுதியில் தற்போது பெருமளவு சிங்களப் பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.

முல்லலைத்தீவு மற்றும் வேறு சில பிரதேசங்களில் தமிழ் மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், இக்கடல் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.கிளிநொச்சியிலுள்ள வீதிகளின் பெயர்கள் மகிந்த ராஜபக்ச மாவத்தை, அலுத் மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஏ – 9 நெடுஞ்சாலையில் உள்ள கனகராயன்குளத்தில் இருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்கு கொசல பெரேரா வீதி, அனுரா பெரேரா வீதி, வணக்கத்திற்குரிய யற்றிராவன விமல தேர வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்பெயர்களில் முதல் இரண்டு பெயர்களும் போரில் ஈடுபட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் இருவரின் பெயர்களாகவும், மூன்றாவது பெயர் பௌத்த மதகுரு ஒருவரின் பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது

http://www.theweekendleader.com/Causes/615/Exclusive:-Inside-Lanka.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *