இஸ்லாமியப் பெண்கள், முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் அணியும், பர்தா என்ற அங்கியை அணிவதற்கு பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் இன்று 11.4.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது
இந்த சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு மத மற்றும் கலாச்சார ரீதியான அடக்கு முறையிலிருந்து விடுதலை தரும் ஒரு முற்போக்கான சட்டம் என்று ஒரு சாராரும், இஸ்லாமிய சமூகம் தனது கலாச்சாரத்தையும் மதத்தையும் பேணி காப்பதனால் அதன் கட்டுக்கோப்பை உடைப்பதற்காக உருவாக்கப்பட்டு அதன் மீது தொடுக்கும் ஒருவித அரசியல் அராஜகப் போக்கின் உச்சக்கட்டம் அல்லது தாக்குதல் இது என்று மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர்.பிரெஞ்சு அரசு வெளியிட்ட தகவல்களின்படி பிரான்ஸில் வசிக்கும் சுமார் 2,000 முஸ்லீம் பெண்கள்தான் பிரான்சில் இது போன்ற அங்கியை அணிகிறாரர்கள் என்ற கணக்கீட்டை அறிவத்துள்ளது ஆனாலும் இவ்வளவு சொற்ப எண்ணிக்கையிலானோரை சம்பந்தப்படுத்தும் ஒரு பிரச்சினைக்கு இப்படி ஒரு சட்டம் அவசியதானா என்ற கேள்வி எழும் நிலையில் ”இது போன்ற ஒட்டுமொத்த உடலையும்,முகத்தையும் மறைக்கும் இந்த அங்கியை அணிந்திருப்பவர் உண்மையில் பெண்ணா அல்லது ஆணா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுகின்றதாகவும், இது போன்ற ஆடைகளை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அச்சமஇ உள்ளதினால் தான் இது போன்ற ஒரு சட்டத்தை அரசு கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தியது” என்ற வாதத்தையும் ஒரு சாராரும் முன் வைக்கும் நிலையில்
பிரெஞ்சு புரட்சி,சமத்துவம், சுதந்திரம் தனிமனித சுதந்திரம் என்ற பிரெஞ்சின் முகம் இன்று அம்பலமாகியுள்ள நிலையில் இச்சட்டம் இன்று அமுலுகஇகு வந்துள்ளது. இச்சட்டத்தை போன்றே ஐNihப்பா முழுவதும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு வெகுவிரைவில் தடைச்சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சுவிஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடைவிதிக்கப்பட்டுள்ளது
மத அடக்கு முறையிலிருந்து விடுதலை தரும் ஆரம்பமாக இதற்க்கு ஆதரவு கொடுப்பது முற்போக்காளர்கள் இடதுசாரிகளின் கடமை.