“பெண்”ணொருவருக்கு வாக்களியுங்கள்

சந்தியா-  (யாழ்ப்பாணம். இலங்கை)

CAVW3 இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில்  “Vote for a Woman”  என்ற கோசத்தில் பல பெண்களை அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பிரசன்னமாக்கியுள்ளனர். அரசியல் கட்சிகளான  UPFA,UNP,TNA போன்ற கட்சிகள் “சுதந்திரமான ஒரு கூரை”யின் கீழ்  பெண்களை  உள்ளுராட்சி தேர்தலுக்காக இடை நிறுத்தியுள்ளனர்

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டுமென்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தமது அரசியல் இலாபங்களுக்காக இவ் அரசியல் கட்சிகள் பெண்களை துஸ்பிரயோகம் செய்கின்றதா என்ற கருத்தும்  கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாதது.

CAVW2

இலங்கையில் தற்போதைய சனத்தொகைக் கணிப்பின்படி 21.3 மில்லியன் மக்கள்தொகை  என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் ஆவர். ஆனால் பெண் வேட்பாளர்கள் அரசியலில் தெரிவு செய்யப்பட்டு பாராளமன்றத்திற்கு போவது 5.8%.; 4.1 %  உள்ளுராட்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

  

1.8 %  தான் ஆசியாவிலேயே பெண்கள்    பாரளமன்றத்திற்கு போகும் மிகக் குறைந்த வீதமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

கடந்த 50 வருடங்களாக இலங்கையில்  மிகக் குறைந்த பெண்களே பாராளமன்றத்திற்கு தெரிவானார்கள். ஆனாலும் பல பெண்கள் அமைப்புக்கள் கடந்த 10 தொடக்கம் 15 வருடங்களாக நியமனம் எடுப்பதற்கு  பல வழிகளில் முயற்சித்து வந்தன வருகின்றன.
CAVW1

ஜேவிபி தனது தேர்தல் பிரச்சாரத்தில ஆரம்பத்தில் 3, 4 %மே பெண்களுக்காக  ஒதுக்கி வந்துள்ளது. ஆனால் இம்முறை 12 %  என்ற விகிதாசாரத்தில்   பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது ஜேவிபி.  அதே போல் முஸ்லிம் காங்கிரசும் பெண்களுக்கு என சிறு வீதத்தையே ஒதுக்கியுள்ளது.

பதுளை,காலி,மொனராகலை, திருகோணமலை போன்ற இடங்களில் பெண்கள் அமைப்புக்கள் சில உள்ளுராட்சி தேர்தலில் பெண்களை நிறுத்துவதற்கான வேட்புமனுக்களை கையளித்திருப்பதாக சில பெண்கள் அமைப்புக்கள் கூறியுள்ளன. 185 பெண்கள் உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள போதும் இதில் 72 பெண்களுக்கே தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகக்குறைந்தது பெண்கள் 30 வீதமாவது போட்டியிட அனுமதி தரவேண்டும் என பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

  

Sarvodaya Women’s Movement –  Galle 

Women’s Development Centre ~ Badulla

Women’s Resource Centre ~ Kurunegala 

 Vizhuthu ~ Trincomalee

Uva Wellassa Farmer Women’s Organisation (Monaragala),

இவ்அமைப்புக்கள் 181 பெண்களின் பெயர்களை வேட்பு மனுத்தாக்கலுக்காக பரிந்துரைத்துள்ளது 
என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்

 CAVW7

 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டு பெண்கள் பலர் தெரிவாகியுள்ளனர். காலி மாவட்டத்தில் 4 பெண்களும் திருகோணமலையில் 2 பெண்களும் குருநகலில் 1 பெண்ணும் மொனராகலையில் 5 பெண்களும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். அதனால் இம்முறையும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில் பெண்கள் அமைப்புக்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளன

 

election

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *