தேவா (ஜேர்மனி)
100வருடங்களுக்கு பின் ஒருதடவை பெண்கள் திரும்பிபார்த்துக்கொள்ள இத்தினம் உதவலாம். தன்வாழ்வை-தன் அம்மாவாழ்வை- தன் மகள்வாழ்வை அசைபோடக்கூட இத்தினம் உதவலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை சுற்றிவாழும் சகோதரிகளுக்காக்-தாயகத்திலும், உலகம்முழுவதிலும் உழைத்தும் உடல்வன்முறைக்கும் ஆளாக்கப்பட்ட எம் இனத்துக்காக நாம் கட்டாயம் திரும்பிபார்த்தாகவேண்டும். |
சர்வதேசபெண்கள்தினம்; ஒரு நீண்ட வரலாறு கொண்டது. எல்லாதளங்களிலும் சமஉரிமைக்காகவும் வாக்குரிமைக்காகவும் அதனுடைய போராட்டம் செயல்பட்டது. 1857ல் உருவான தொழிலாளர்போராட்டத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியானது இன்றுவரை ஓய்வெடுக்கவில்லை. குடும்பம்,குழந்தை,தொழில் பொறுப்புகளிலிருந்து பெண் விடுபடமுடியாதபடியும்,அரசியல்,போர், சமூகம் ஆகிய புறக்காரணிகளும் கொடுக்கும் நெருக்கடிகளால் அவள் தன்னுடைய பங்கை எடுத்துக்கொள்ள தொடர்ந்தும் போராடிவரவேண்டியுள்ளது. அடிப்படைஉரிமைகளான தன்வாழ்வுபற்றி தீர்மானிப்பது, சமூகவரையறைகளை கடந்துவருவது,குழந்தைபற்றிய முடிவுபோன்ற முக்கியமானவைகூட இன்னும் தன்னகக்தே வைத்திருக்க உரி;மை அற்றவளாயிருப்பது தெரிந்ததே. போரின் சுவடுகள் பெண்ணுக்கு மேலே அழுத்தப்பட்டிருக்கின்றன. பொருளாதாரசுமைகளும் தனியே ஏற்கவேண்டிய நிலைமக்கு தள்ளப்படுவதும் ஆசியநாடுகளிலே சாதாரணமாகியிருக்கிறது. மதத்தினதும், கலாச்சாரத்தினதும் காவிகளாக பெண்களை செயல்படவைத்திருப்பது உலகெங்குமே பரவியிருக்கிறவிடயமாகும். காலம்காலமாக பெண்ணுக்கு மேல் தொடுக்கப்பட்டிருக்கும் இவவகைபோர்களுக்காக பெண்போராட்ட்ம் தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிறிய வாய்ப்புக்களை நம்பி வாய்மூடி இருத்தல் தொடர்ந்தும் பெண்ணுரிமையை-அதன் சிந்தனையை மந்தமாக்கும்.
பெண்கல்வி மறுக்கப்படுகிறது. காரணம் குறைந்தசம்பளதொழிலாளிகள் தேவைப்படுகினறனர். வீட்டுவேலைக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உடல்வன்முறைக்குள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்படடு,கொலைசெய்யப்படுவதும் இந்தநூற்றாண்டில் நிகழ்கிறது. நாளாந்தம் பெண்கள் கொலைசெய்யப்படுவது – தற்கொலைகள் ஆய்க்கொள்வதன் அடிப்படைக்காரணிகளை நோக்கினால், சமூக கலாச்சாரபின்னடைவின் போக்கு என்பதற்கும் மேலே அரசுகளின், ,,பெண்கள்தானே,, என்கிற அலட்சியபோக்கும் முக்கியகாரணம் எனலாம். ஆகவே பெண்ணுக்கு மேலான அக்கறை என்பதில் பாரபட்சம் அரசியலிலே இருக்கிறது. பெண்ணுடைய உழைப்பு- அது வேலைத்தளத்திலும் சரி- வீட்டிலும் சரி கணக்கிலெடுக்கப்படுவதில்லை. ஆனால் சுரண்டப்படுகிறது.
கவர்ச்சி;-பெண் என்கிறஅடிமட்டசிந்தனை செயல்களை உடைக்க இனிவரப்போகும் நூற்றாண்டுகளில் வேலைசெய்யவேண்டியிருக்கிறது. சமசம்பளம், சமஉரிமை,சமூகமாற்றம் போன்றவை இன்னும் நியாயமாக முன்னெடுக்கும்வரை போரரட்டம் தொடரவேண்டும். அரசியலிலே பெண்களின்பங்கு தீவிரமாக்கப்படுதல் அவசியமே. அது நியாயமான உழைப்பின் பெறுமதியை பிரதிபலிக்க கூடியதாய் இருந்தாலே அது பெண்உரிமையை பெற்றதாக கொள்ளலாம்.
100வருடங்களுக்கு பின் ஒருதடவை பெண்கள் திரும்பிபார்த்துக்கொள்ள இத்தினம் உதவலாம். தன்வாழ்வை-தன் அம்மாவாழ்வை- தன் மகள்வாழ்வை அசைபோடக்கூட இத்தினம் உதவலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை சுற்றிவாழும் சகோதரிகளுக்காக்-தாயகத்திலும், உலகம்முழுவதிலும் உழைத்தும் உடல்வன்முறைக்கும் ஆளாக்கப்பட்ட எம் இனத்துக்காக நாம் கட்டாயம் திரும்பிபார்த்தாகவேண்டும்.
திரும்பி பார்ப்போம்.
சர்வதேசபெண்கள்தினம்; ஒரு நீண்ட வரலாறு கொண்டது. எல்லாதளங்களிலும் சமஉரிமைக்காகவும் வாக்குரிமைக்காகவும் அதனுடைய போராட்டம் செயல்பட்டது. 1857ல் உருவான தொழிலாளர்போராட்டத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியானது இன்றுவரை ஓய்வெடுக்கவில்லை. குடும்பம்,குழந்தை,தொழில் பொறுப்புகளிலிருந்து பெண் விடுபடமுடியாதபடியும்,அரசியல்,போர், சமூகம் ஆகிய புறக்காரணிகளும் கொடுக்கும் நெருக்கடிகளால் அவள் தன்னுடைய பங்கை எடுத்துக்கொள்ள தொடர்ந்தும் போராடிவரவேண்டியுள்ளது. அடிப்படைஉரிமைகளான தன்வாழ்வுபற்றி தீர்மானிப்பது, சமூகவரையறைகளை கடந்துவருவது,குழந்தைபற்றிய முடிவுபோன்ற முக்கியமானவைகூட இன்னும் தன்னகக்தே வைத்திருக்க உரி;மை அற்றவளாயிருப்பது தெரிந்ததே. போரின் சுவடுகள் பெண்ணுக்கு மேலே அழுத்தப்பட்டிருக்கின்றன. பொருளாதாரசுமைகளும் தனியே ஏற்கவேண்டிய நிலைமக்கு தள்ளப்படுவதும் ஆசியநாடுகளிலே சாதாரணமாகியிருக்கிறது.
மதத்தினதும், கலாச்சாரத்தினதும் காவிகளாக பெண்களை செயல்படவைத்திருப்பது உலகெங்குமே பரவியிருக்கிறவிடயமாகும்.
காலம்காலமாக பெண்ணுக்கு மேல் தொடுக்கப்பட்டிருக்கும் இவவகைபோர்களுக்காக பெண்போராட்ட்ம் தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது.