யசோதா இந்தியா
திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அவ் சித்திரவதையை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்தார். எனினும் ஆயிஷாவின் தந்தை, அவரை மீண்டும் கணவர் தரப்பிடமே ஒப்படைத்துவிட, அவர்கள் ஆயிஷாவை மலையின் உச்சிக்கு கொண்டு சென்றனர் |
2010ம் ஆண்டின் சிறந்த புகைப்படம் எனக் கருதப்பட்டு ஆப்கானிஸ்தானின் 18 வயதான பிபி ஆயிஷா என்ற பெண்ணின் புகைப்படம் ஊடகங்களில் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டதுமல்லாமல் பல மில்லியன் பேர் பாவையிடப்படும் புகைப்படமாகவும் உள்ளது. இப் புகைப்படத்தில் இருக்கும், தோன்றும் பிபி ஆயிஷா, தனது தந்தை கொடுத்த வாக்குறுதியினால் ஆயிஷாவின் 14 வயதில் தலிபான் போராளி ஒருவருக்கு மணமுடித்து கொடுக்கப்பட்டவர். திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அவ் சித்திரவதையை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்தார். எனினும் ஆயிஷாவின் தந்தை, அவரை மீண்டும் கணவர் தரப்பிடமே ஒப்படைத்துவிட, அவர்கள் ஆயிஷாவை மலையின் உச்சிக்கு கொண்டு சென்று அவளது காதுகளையும், மூக்கையும் அறுத்துவிட்டு, அவளை அப்படியே குற்றுயிராக கிடக்கவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
அங்கிருந்து காப்பாற்றப்பட்ட ஆயிஷா அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டு உடனடியாக சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டதினால் உயிர் பிழைத்தார் சத்திர சிகிச்சைக்குப் பிறகு ஆயிஷா தனது இதே முகத்தோற்றத்தோடு 2010 ஜூலை மாத Time magazine இன் அட்டைப்படத்தை அலங்கரித்தார்.
ஆயிஷாவின புகைப்படம்,Word Press புகைப்பட நிறுவனத்தின் புகைப்படப்போட்டியின் செய்திப்பிரிவிலும், பொதுப்பிரிவிலும் சிறந்த புகைப்படமாக தெரிவாகியது. 2010 இன் சிறந்த (செய்தி பிரிவுக்கான) புகைப்படமாக, 18 வயது ஆப்கான் பெண் பிபி ஆயிஷாவின் புகைப்படம் Word Press Photo நிறுவனத்தினால் தெரிவாகியுள்ளது 125 நாடுகளிலிருந்து 5,847 புகைப்பட கலைஞர்களால் 108,059 புகைப்படங்கள் இப்போட்டிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் தென்னாபிரிக்க புகைப்பட காரர் ஜோடி பியெபெர், டைம் சஞ்சிகைக்காக எடுத்த ஆயிஷாவின் இப்புகைப்படத்தை எடுத்திருந்தார். அது இன்று பேசப்படும் புகைப்படமாக உள்ளது.