சை.கிங்ஸ்லி கோமஸ்(மலையகம் இலங்கை)
-தோட்டங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு உள் வாங்கப்பட வேண்டும்
-அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் -தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும |
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியின் நுவரெலியா வலப்பனை அப்புத்தலை பிரதேச சபைகளுக்காக பொட்டியிடும்; முதன்மை வேட்பாளர்கள் நடத்திய ஊடகவியளாளர் மகா நாடு 09.02.2011 தினம் அட்டன் டீ விலா ஓட்டலில் நடைபெற்ற போது தங்களின் கொள்கை விளக்கத்தினை வழங்கும் தேசிய அமைப்பாளர் வீ மகேந்திரன் பிரதான வேட்பாளர்கள் ஏ.சீ.ஆர்.ஜோன் இராகலை பன்னீர் மார்க்ஸ் பிரபாகரன் கலந்து கொண்டனர்
– தோட்டங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு உள் வாங்கப்பட வேண்டும்
– அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்
– தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்
– தோட்டதொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக அனைத்து பிரதேச சபைகளும் குரல் கொடுக்க வேண்டும்
– போன்ற இன்னும் பல கொள்கைகளுக்குhக தாங்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தளில் போட்டியிட முன் வந்ததாக கூறும் இவர்கள் தாங்கள் எந்த காரணம் கொண்டும் விலை போக மாட்டோம் என்பதுடன் பலர் பொய்யான வாந்திகளை பரப்பி வருவதனை நிராகரிப்பதாகவும் கூறுகின்றனர் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று எமக்கு ஆதரிப்பார்பளாக இருந்தால் அதனை தாங்கள் வரவேற்பதாகவும் நுவரெலியா பிரதேச சபை முதன்மை வேட்பாளர் ஏ.சீ.ஆர்.ஜோன் தெரிவித்தார