சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம், இலங்கை)
எந்த வேத அடிப்படையில் பெண்கள் சாதியத்தினை தூக்கிப் பிடிக்கிறார்களோ அந்த வேதஅடிப்படையிலும் காணப்படும் பெண் கடவுளர்களும் பெண்களும் இழிவாக்கப்பட்டிருப்பது இவர்களின் அறிவுக்கு ஏனோ அகப்படவில்லை.துடக்கு என்ற பெயரில் பெண்கள் ஓதுக்கப்படுவதும் பலிபீடத்தை அண்ட முடியாத பெண்கள் பூஜகர்களாக முடியாத வகையிலும் தான் பெண்ணை சாஸ்திரங்கள் பேசுகின்றன. |
நூற்றாண்டு பல கடந்தும் மில்லேனியம் கொண்டாடியும் தொழில்;நுட்பம் உச்சத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த தொழிநுட்ப யுகத்திலும் சாதியம் பற்றிய சிந்தனைகளையும் அதன் வெற்றிகளையும் வாய்கி;ழியக் கத்திக் கொண்டிருக்கும் பலரைப் பார்த்து சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை.பண்டைக்கால வேதங்களிலும,; பிராமணங்கள், உபநிடதங்கள,; இஸ்மிருதிகள,; சாஸ்திரங்கள,; புராணங்கள் என்பவற்றிலும் மனித வாழ்வு வளம் பெற ஓங்கி நிற்கும் சமூக பொருளாதார அரசியல் வாழ்விலும் இந்த சாதிய அமைப்பு முறை பல்வேறுப்பட்ட கோணங்களிலும் முறைகளிலும் புதிய பரிமாணங்களை பெற்றுள்ளதினை நாம் அவதானிக்க முடிகிறது.
தனியுடமை சமுதாயப் பாதுகாப்புக்காகவே ஒவ்வோர் மனிதனும் திட்டமிட்டுப் பின்பற்றும் கொள்கை (?)யின் விளைவாகவே இந்த சாதியத்தின் ஓங்கலும் கொடுமைகளும் சாஸ்திரங்களும் அதிகரித்துள்ளமையை நாம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்வதும் கடினமான செயலல்ல.
இந்த சாதியத்தை தூக்கிப்பிடித்து இன்றும் அது நீடித்த ஆயுளுடன் ஜீவிக்க துணை புரிந்ததில் பெண்களுக்கு கணிசமான பங்களிப்பு உண்டெனலாம்.அநேகமான சாதியத்தின் அடையாளங்களாக செயற்படும் பெண்கள் தம்முடைய ஒவ்வொரு கண் மூடித்தனமான காரியங்களாலும் சாதியத்தையும் சடங்காசாரங்களையும் வலுப்பெற வைத்தப் பெருமை பெண்களுக்குண்டு.(?)
பொதுவாக வீடுகளில் நடக்கும் விசேட நிகழ்வுகளிலும் அமங்கல நிகழ்வுகளிலும் இந்த சாதிய சம்பிரதாயங்களை எந்தவித அறிவியல் சிந்தனைகளையும் சிந்திக்காது கட்டாயத்தின் பெயரிலும் பிடிவாதத்தின் பெயரிலும் சம்பிரதாயங்களை நிறைவேற்றி வைக்கும் பாரிய பணியை செய்வதில் பெண்கள் ரொம்பவும் முனைப்பாக இருப்பது ஆழமான சிந்திப்புகளிலே தெரிய வரும். சாதியில் இப்படி செய்ய மாட்டார்கள் இது நம்ம சாதிப் பழக்கம்.இது நம்ம வரன் முறை சாதிக்கு ஒரு கோட்பாடு இருக்கில்ல என்றபடி வாய் கிழிய கூவி இப்படி கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சாதிக் கொன்றாக உருவாக்கியும் உற்பத்தி பண்ணியும் பன்முகப்படுத்தியும் அதனை அடுத்த பரம்பரைக்கு அர்த்தமில்லாது கொண்டு செய்வதிலும் பெண்கள் அச்சப்படாதவர்களாகவும் கவலைப்படாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இது ஏன் இப்படி வந்தது என்பது பற்றிய கவலைகள் கூட அவர்களிடத்தில் துளியும் காணப்படாது.சாதியத்துடனான சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் ‘ஏன்’செய்யாமல் விடக் கூடாது என்பதற்கான விளக்கத்தை கேட்டாலோ அதனை செய்யாது விட்டாலோ அதனை மிக அதல பாதாளமான தெய்வக் குற்றமாக கருதும் பெண்கள் நம்மில்; அனேகர் உள்ளனர். இது அவர்களின் அறியாமையே
ஏதிர்காலத்தில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை கூட நிகழ்காலத்தில் நடக்காது போன சம்பிரதாயங்களுடன் முடிச்சிப் போடும் போலியதார்த்தங்களை அவரகள்; கட்டியெழுப்பிக்கொண்;டிருப்பது மிகவும் துக்கரமான விடயமாக காணப்படுகின்றது. சமயம் சார்ந்தும் சாராத நிகழ்வுகளில் கூட சாதியம் சார்ந்த விடயங்கள் புதிய பரிமாணங்களுடனும் நவீனமயமாக்கலுடன் மெழுகேற்றப்பட்டு அரங்கேற்றிக் கொண்டிருப்பது பொதுவாக பெண்களின் அறிவீனத்தைகாட்டுவதேயொழிய அறிவை பட்டை தீட்டும் வழியல்ல.மூடக் கொள்கைகள் என்று தெரிந்தும் அவற்றுக்கு சாவுமணியடிக்கத் தெரியாத முடியாத மனத்தி;டம் கொள்ளாத பெண்களினால் சமுதாய முன்னேற்றம் எப்படி வரும்? ;அவ்வாறான பெண்களால் விடுதலை எப்படி விட்டு விடுதலையாகி வரும்?
பெண்கள் பலர் கூடியிருக்கையிலும் குறிப்பிட்ட விழாக்கள் உறவினர்களுள் பகிர்ந்து கொள்ளும் பொழுது இவர்களின் கதைகள் கருத்துக்கள் யாவையும் சாதிய அடிப்படையான போக்கினை கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
அவ்வாறான போக்குள்ளவர்களையே இவர்கள் கூட்டுசேர்த்துக் கொள்ளும் பண்பும் பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும்.அந்த சிந்தனைகளுடன் ஒத்துப் போகாதவர்களை புறந்தள்ளி பார்ப்பதும் இழிவாக கருதுவதும் சுத்தமற்ற ஆளாக பார்ப்பதும் ஆசாரமற்ற ஆளாகவும் இழிவுப்படுத்துவதில் பெண்கள் முனைப்பாக இருப்பது நம்மில் பலருக்கும் புரியும்.
எந்த வேத அடிப்படையில் பெண்கள் சாதியத்தினை தூக்கிப் பிடிக்கிறார்களோ அந்த வேத அடிப்படையிலும் காணப்படும் பெண் கடவுளர்களும் பெண்களும் இழிவாக்கப்பட்டிருப்பது இவர்களின் அறிவுக்கு ஏனோ அகப்படவில்லை.கணவனை நம்பாத லட்சுமி தேவியாகட்டும் கண் அவிந்த காமகியான லட்சுமி தேவியாகட்டும் கங்கை கலைவாணியாகட்டும் (தேவி பாகவத புராணம்) மிக துச்சமான பிறவியாகத்தான் இவர்களை புராணங்கள் கூறுகின்றன.
துடக்கு என்ற பெயரில் பெண்கள் ஓதுக்கப்படுவதும் பலிபீடத்தை அண்ட முடியாத பெண்கள் பூஜகர்களாக முடியாத வகையிலும் தான் பெண்ணை சாஸ்திரங்கள் பேசுகின்றன. கடவுளர்களாக படைக்கப்பட்ட பெண்களும் கலா அம்சங்களுடனும் பக்தியை விட அங்கங்களால் பரவசப்படுத்துபவர்களாகவும் தவ வாழ்வை களைப்பவர்களாவும் தவத்துக்கு இடையூறு செய்பவர்களாகவும் பெண்கள் வேதங்களிலும்; புராணங்களிளும் வர்ணிக்கப்படுகின்றமை ஏன் பெண்களுக்கு புரிவதில்லை.அறிவு நிலை சாராத வெறும் சாஸ்திரங்களை சின்ன சின்ன மூடப் பழக்கங்களை நிஜமான அறிவு நிலைகளாக கருதும் பெண்கள் மத்தியில் இந்த சாதிய அமைப்பும் அதன் அழுத்தங்களும் இருப்பது என்னவோ அவர்கள் அறிவியல் சிந்தனையில் ஆழம் கருதாத நிலையாகவே காணப்படுகின்றதெனலாம்.
ஆனால் அறிவுக் கண்ணை அகலத்திறக்க வேண்டிய பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் இன்றும் சாதியத்தின் வெறியிலும் அமைப்பிலும் தங்களை மூழ்கடிப்பதுமல்லாமல் தான் சார்ந்த மாணவப் பரம்பரையையும் அமிழ்த்தி வைத்திருப்பதென்னவோ கொடுமையான விடயம் தான்.
கூட்டமாக உணவருந்தும் இடை வேளையில் அநேகமான பெண் ஆசிரியைகள் சாதிய அமைப்பை அடிப்படையாக கொண்டே உணவினை பகிர்ந்துக் கொள்வது உண்டுக்கொள்வதும் அனுபவ ரீதியாக நாம காணுகின்ற சாதாரண விடயமாகும்.
சாதிய அமைப்பு முறையை தகர்க்கும் சிந்தனைகளை இழிவாக கருதுவதும் அதுசார்ந்த ஆய்வுகளில் ஆழம் அகலம் பார்த்து அதனை தோண்டி ரிஷp மூலம் நதி மூலம் வரை அவர்களின் சிந்தனைகள் செல்வதும் அவர்களின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளேயாகும் .
சாதிய கட்டுப்பாடுகளுடன் வாழும் பெண்களை பவ்யமாக நோக்குவதும் நல்லவர்களாக கருதுவதும் அவற்றை விட்டெறிந்த பெண்களை இழிவாக கருதுவதும் (?)நம்முடைய அறிவுக் கண் திறக்க வேண்டிய பெண் ஆசிரியைகளே.
அகிலத்தை அகலக்கண்கொண்டு நோக்கச் செய்வதும் அறிவுக் கண்ணை ‘கசடற’திறக்க வேண்டிய ஆசிரியைகள் அறிவியல் சிந்தனைக்கூடாக தமது மாசற்ற பணியை சரியாக செய்பவர்களாக காணப்படல் மிகுந்த அவசியம் இவர்களினாலேயே மட்டும் சாஸ்திரப் பேய்களும் சாதியக் கொடுமைகளும் பறந்தோடி எழுச்சி பெறும் சமூகம் உருவாகுமென்பதில் சந்தேகமில்லை.இதற்கு எத்தனை பேர் தயாராக உள்ளனர்.இனி பேசுங்கள் பெண்ணுரிமையும் பெண் விடுதலையும்.
சந்திரலோகா சாதி என்ற சொல்லையே இல்லாமல் ஒழிக்க வேண்டும். உங்கள் கட்டுரையில் பெண்களைமட்டும் குறை கூறியிருப்பது கவலைக்குரியது.