மட்டக்களப்பு சடங்கு நிகழ்த்துதல் வழி பெண்ணிய அடையாள அரங்கு 2

கி.கலைமகள்

kalaimagal10 குடும்ப சமுக இயக்கம் என்பது சுயாதீன சிந்தனையுள்ள மனித உருவாக்கத்திற்கு இன்றியமையாதது . ஆனால்; பாரபட்சமுடைய அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படும் குடும்பம் சமுக இயக்கத்தின் செயற்பாடு பாரபட்சமுள்ள சுயாதீனமான சிந்தனை திறனற்ற மனிதர்களையே உருவாக்கின்றது.

பாரம்முறி விளையாட்டு அளிக்கை)

சூரியாபெண்கள் அபிவிருத்தி நிலைய கலாசார குழுவினரால் மட்டுநகர் கண்ணகைகள் தொடர்ந்து பாரமுறிக்கும் விளையாட்டு என்னும் அரங்க அளிக்கை  கொம்பு  முறி என்னும் சடங்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

கொம்பு முறிவிளையாட்டில் கொம்பு கட்டுவதற்கான தாய்மரம் தெரிவு செய்யப்பட்டு, வட சேரி தென் சேரி என்னும் இரு சேரிகளும் கொம்புகளை ஒன்றோடு ஒன்று பொருத்தி மரத்தில் கட்டுவார்கள். குறிப்பிட்ட நாளில் இடப்பக்கமாகவுள்ள வடத்தை வடது சேரியும் வலது பக்கமாகவுள்ள வடத்தை இடது சேரியும் பிடித்து இளுப்பார்கள். எவருது சேரி கொம்பு முறிகின்றதோ அவருது சேரி தோற்ற சேரியாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு சேரிகளும் தங்களது சேரியை புகழ்ந்து பாடுவதும் மற்ற சேரியை இகழ்ந்து பாடுவதுமுண்டு.கொம்பு முறி விளையாட்டு சேரிகளின் பலத்தினை செல்வாக்கினை காட்டுவதாகும் . வெற்றி பெற்ற குழுவே பாராட்டப்பட்டு அவர்களது கொம்பினை ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். 

இச்சடங்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாரமுறி விளையாட்டு அளிக்கையில் பார்வையாளர் சுற்றி அமர்ந்திருக்க மரக்கம்பு நடப்பட்டு அதில் கயிறுகள் கட்டப்படும் கட்டியக்காரனும் கட்டியக்க காரியும் மேடைக்கு வந்து அரங்கினை தொடர்வார்கள்.  ‘இது பாரமுறிக்கும் விளையாட்டு நாங்கள் கருத்து  நிறைந்த கதையினை சொல்லப் போகின்றோம்’ எனத் தொடர்வார்கள். ஆற்றுகை செய்வோர் ஆண்குழு, பெண்குழு என இரு குழுக்களாக பிரிந்து கயிறு இழுக்கதொடங்குவார்கள். சோடிசோடியாக எதிர் எதிர் பாடலாக பாடுவார்கள்.

‘ஆண் – அதிகாலை கண்விழித்து அத்தனை வேலையையும் செய்யோனுமடி
பெண் – வெளியில் வேலை செய்து விட்டு வீட்டு வேலையும் செய்து வாரன்.’
என ஒவ்வொரு சோடியும் தங்கள் பாடல்களைப் பாடுவார்கள்.
அப்போது கட்டியக்காரனும் கட்டியக் காரியும் தோன்றி இது தீர்வே இல்லாத பிரச்சனையா? என உரையாடலைத் தொடர்வார்கள். தீர்வாக வேலையை மாற்றி செய்து பார்ப்பம் என வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு
செய்யப்படுகின்றன.

 kalaimagal10

‘ஆண்- உழைத்து களைத்து வரும் பெண்ணே உந்தனுக்கு நானும் உதவிடுவேன்’
எனவேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அரங்கில் நிகழ்தப்படுகின்றன.
இறுதியில்  ஆணும் பெண்ணும் சமமாக ஆளுக்கொரு வேலை செய்திடுவோம். எனப்பாடி சேர்ந்து கொம்பினை சுமந்து கொண்டு செல்கின்றனர்.
பாரம்முறி விளையாட்டு பெண்மீது சுமத்தப்படும் வேலைப்பிரிப்பினை அதன் மூலம் பெண் மீது செலுத்தப் படும் வன்முறையை கேள்விக்குட்படுத்தியது. குடும்பம், குழந்தை வளர்ப்பு பெண்ணுக்கே உரிய கடமையாக பெண்மீது திணிக்கப்படுவதால் பெண்மீது விழும் இரட்டைச் சுமைகளைபற்றி   அரங்கு பேசியது.
குடும்ப சமுக இயக்கம் என்பது சுயாதீன சிந்தனையுள்ள மனித உருவாக்கத்திற்கு இன்றியமையாதது . ஆனால்; பாரபட்சமுடைய அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படும் குடும்பம் சமுக இயக்கத்தின் செயற்பாடு பாரபட்சமுள்ள சுயாதீனமான சிந்தனை திறனற்ற மனிதர்களையே உருவாக்கின்றது. சமத்துவமற்ற சமுகச் செயற்பாடு என்பது சமத்துமற்ற சூழலையே உருவாக்கின்றது.
‘அரங்கு யுக்திஎன்பது சூழலை பற்றி  மக்களை சிந்திக்க வைக்கின்றது.தீர்வினைநோக்கி  நகர்த்துகின்றது. நாம் அனைவரும் சேர்ந்து இயங்குகின்றோம்.’ ( ஒகஸ்ராபோல்)

இங்கு கொம்பு குடும்பம் சமுகம் இவற்றின் குறியீடாக்கும.; இவற்றில் ஆண் பெண் செயற்பாட்டையே கொம்பு முறி ஊடாக பேசியிருந்தது.பெண் மீது சுமத்தப்டும் இரட்டை சுமைகளை மனித வாழ்வியலை வலியுறுத்தியது. கொம்பு முறிப்பாடல் மெட்டினை கொம்பு முறி விளையாட்டை பாரம்முறி அரங்க அளிக்கை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் மீதான பாரபட்சங்களை உரையாடலை நோக்கியதாக அரங்கு ஊடாக நகர்த்தியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *