அவள் …
அழுகின்றாள்,
வேண்டுகின்றாள்,
மன்றாடுகின்றாள்,
தொழுகின்றாள் .
கிடைக்கவில்லை அவள்
வேண்டுதலுக்கு முடிவுகள்
கிடைத்தது ‘மலடி’ என்ற
சமுதாய மரபுப் பட்டம்.எனக்குள்,
எத்தனை சிசுக்கள் தாயவள்
கருவறைலிருந்து மண்ணைத்
தொடும் முன் கருவறையிலேயே
அடக்கம் செய்யப்படன.
பெற்றவள் கருப்பையை முட்டி மோதி
வெளி வந்த பிஞ்சு சிசுக்கள்
பூமித் தாயின் கரங்களில் தவழ்ந்த பின்
அவள் மடியிலேயே மாண்டு போயின.
தாய்க்கு ஈமைக்கிரியை அவள்
தனயன் செய்வது மரபு -இங்கு
தாயவள் உயிரோடிருக்க
மகனுக்கு செய்தாள் அந்தியேட்டி.
மக்காளைப் பெத்த மற்றவர்
கதறுவது அறியாமல்
”மலடி” என்ற பட்டம் நீங்க
பிள்ளை வரம் வேண்டுகிறாள்
இங்கொருத்தி…….
மீண்டும் மலடாவது அறியாமல்.