மனித உரிமைகள், பெண்விடுதலை, பெண்ணியம் என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூட இந்தப்படுகொலைக்கு எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. காலம் கடந்த நீதி செத்த நீதியாகும் அநீதி தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நடந்துகொண்டவிதம் தமிழன் கொலை செய்யப்பட்டால் அது கொலையல்ல என்ற இலங்கையின் பொது உணர்வோ என ஐயமுறவைத்துள்ளது. |
வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்ப நல மருத்துவப்பெண் தர்ஷிகாவின் மரணமானது யாழ் மாவட்ட சுகாதார வட்டாரத்தில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடமை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவமாகும். அங்கு சென்று உடலைப் பார்த்திருந்தால் இதனை உணரக்கூடியதாக இருந்திருக்கும்
இம் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நீதி விசாரணை யின் போது உடனடியாகச் சந்தேக நபர் கைது செய்யப்படாமை என்பன ஆரம்பகட்ட விசாரணையில் உள்ள குறைபாடுகளாகவே கருதப்படுகின்றன. அடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்தினைப் புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் பதிவுசெய்திருந்தால் அவை சிறந்த சாட்சியங்களாக அமைந்திருக்கும்.
இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நடந்துகொண்டவிதம் தமிழன் கொலை செய்யப்பட்டால் அது கொலையல்ல என்ற இலங்கையின் பொது உணர்வோ என ஐயமுறவைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கண்டனமோ கண்ணீர் அஞ்சலியோ அல்லது அனுதாபமோ வடமகாண சுககாதாரப்பணிமனையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை. முறையான நீதி விசாரணைபற்றி அரச மருத்துவர்கள் சங்கமோ யாழ் மருத்துவர்கள் சங்கமோ அழுத்தம் கொடுக்கவில்லை.
இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சுகாதாரப் பணிமனையில் இருந்தும் சில சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இருந்தும் பணியாளர்கள் எவரும் வரவில்லை. இவையாவும் இறந்தது ஒரு அரச பணியாளர் என்ற மரியாதை கூட இல்லாது நடந்த விடயங்கள்.
இப்படத்தில் உள்ள வசனங்கள்
இடது பக்கம்
சுருக்கிட்டுத் தற்கொலை செய்தால் முகம் வீங்கி நாக்கு வெளியில் வரும் அவ்வாறான நிலமை காணப்படவில்லை
பிளாஸ்ரிக் கதிரை விழுந்து உள்ளது.
வலது பக்கம்
தலை சரிவு இறந்த பின் திருப்பட்டுள்ளது. கழுத்தின் இடது பகுதியில் சுருக்குடுவதற்கு சாதாரணமாக இவ்வாறு சுருக்கிட முடியாது.
(பொத்தியபடி)
இறுகிக் கைகள் உள்ளன. தற்கொலையாயின் கை உதறும் போது விரிந்து காணப்படும்
தற்கொலை செய்திருந்தால் உடல் இத்திசையில் நேராக இருந்திருக்கும்
ஒரு கால் மறுகால் மேல் உள்ளமை இறப்பு படுக்கையில் ஏற்பட்டதனையும் பாலியல் வல்லுறவினைத் தடுத்தமைக்கான சான்றாகவும் இருக்கலாம் என இப்படம் சொல்லுகிறது.
(அப்பெண்ணே இறந்த பின் பத்திரிகையாளர்களும் நீதிமன்றமும் அவ்வுடலை வைத்து இப்படி யெல்லாம் ஆராய்ச்சி செய்துவிடுகிறார்கள். ஆனால் அப்பெண் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட பின்பும் எந்த நீதியம் கிடைக்கவில்லை.)
******
குடும்பநல உத்தியோகத்தர்களுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரியும் ஒரு பெண்மணி குடும்பநல உத்தியோகத்தர்களால் தாயாக மதிக்கப்பட்டவர்.ஏன் இந்த விசர்ப்பிள்ளை யூனிபோமுடன் தூக்குப் போட்டது என்று கூறிவிட்டு அவர் கிளிநொச்சிக்குப் போய் விட்டார். ஒரு பெண் அதிகாரியே தனக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு ஏற்பட்ட கஸ்டங்களை விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் மற்றவர்களால் என்ன செய்ய முடியும்.?
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் பணியாளர்கள் சுகாதார சேவையின் பல மட்டங்களிலும் உள்ளனர். பெண் வைத்தியர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரையானோரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவர்கள் உள்ளனர். இவ்வாறான மனப்பாங்கு நிறைந்த அதிகாரிகளால் ஆளப்பட்ட நிர்வாகத்தில் பெண்களுகஇகு நீதி கிடைப்பது அரிது.
மனித உரிமைகள், பெண்விடுதலை, பெண்ணியம் என்று என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூட இந்தப்படுகொலைக்கு எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
காலம் கடந்த நீதி செத்த நீதியாகும் அநீதி தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். ஆனால் கல்வி கற்றவர்கள், சமூக விழுமியங்களை அறி.தவர்கள் என்று எமது சூழலில் வாழ்பவர்கள் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். அன்றேல் இங்கு வருகின்ற ஒவ்வொருவனும் கொலை புரிந்து விட்டு உடனடியாக இடமாற்றத்தைப்பெற்றுக் கொண்டு நீதிபதியிடம் சரணடைந்துவிட்டு அதே கதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு பிணையில் வீட்டிற்கு சென்றுவிடுவான்.
23 யூலை யாழ் தினக்குரலில் வந்த குறிப்பு இது
மனது வலிக்கின்றது. மனித உயிர் இன்று மலிவாகிவிட்டது. தமிழர் என்பதினாலா அல்லதும் மனிதம் மரத்துப் போனதாலா?!