ஒரு பெண் எழுந்தாள்! அதன் பிறகு சிலர் எழுந்தார்கள். பிறகு, பலர் தெருவுக்கே இறங்கி வந்தனர். போராடினர்.இன்று, உன்னிடம் இருப்பதும், என்னிடம் இருப்பதும், நாளை எமது குழந்தைகளுக்குக் கிடைக்கப் போவதும், ஒரு பெண்ணிடமிருந்தே வந்தது. தனது வசதிகளை, பாதுகாப்புகளை, சௌகரியங்களை இழக்கத் துணிந்த பெண்னிடமிருந்து வந்தது.அதற்காகிலும். உன் இடத்திலிருந்து எழு. ஒரேயொரு முறை உனது சௌகரியங்களைத் துற.நிமிர்ந்து நில். நேரே உலகைப் பார்த்துச் சொல்.நான் இதுதான்! இப்படித்தான்! என்று.ஒரு பெண் எழுவது அவளுக்காக மட்டுமன்று.பெண்கள் தின வாழ்த்துகள்!
இசை : முரளிதரன் முத்துலிங்கம்ஒளிப்பதிவு: தங்கவேல் கணபதிப்பிள்ளை