அமைதி – கம்சாயினி குணரட்ணம் -நோர்வே

நட்சத்திரங்கள் எப்போதுமே ஒளிர்ந்தாலும்
சூரியன் எப்போதுமே மறையாவிட்டாலும்
ஒன்று மட்டுமே நிச்சயம் நினைக்க கூடியது
அது எமக்கான அமைதிச் சூழலே!

அமைதியை அடைவதற்காய்  நான்காணும் வழி
அவசியமாகிறது எமக்கு இப்போ ?. ஆனால்
அவற்றில் நாம் உயர்வடையும் போது
இனிப் பெறுவதற்காய் ஏதும் இருக்காது

வலிகள் சுமக்கும் வம்சத்தை எண்ணிப் பார்ப்போம்
இவர்களின் காயங்கள் இங்கும் தான், அங்கும் தான்
இதயத்தில் இருக்கும் மிகப்பெரிய ரணம்
தோலாலும் துணியாலும் மறைக்கப்படுகிறது.

உதவிகள் போகின்றன உடனுக்குடன்
இடர் நீக்கம் நாம் இணைவதும் இனிதே
நீர்வீழ்ச்சியில் விழும் நீர்த்துளியைப் போல
இது தற்செயலானதும் அல்ல

யாரும் ஒரு துளிக்காக யாசிக்கவில்லை
ஒவ்வொன்றாய் இணைந்து நீர்வீழ்ச்சியாவதுபோல்
எமது எதிர்பார்ப்புகள் விரிவாகும் இந்நிலை
எமக்குகூட சாலப் பொருந்தும்

March 2007

கவனிக்கப்படாத வைரம்

2007ம் ஆண்டு ஊடறுவில் வெளியான கவிதை

http://udaruold.blogdrives.com/archive/cm-03_cy-2007_m-03_d-31_y-2007_o-8.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *