இவரது ஓவியக்கண்காட்சி உங்கள் பார்வைக்காக திகதி: 18, 19 டிசம்பர் 2021இடம் : Farook Sharifudeen Art Chamber – 74, Shahbana Manzil, 2/3 Common Road, Akkaraipattu 2. காட்சிப்படுத்தப்படுகிறது.
வீதிவிளக்குகள், கோபுரங்கள், மாடங்கள், கதவுகள், யன்னல்கள், கூரையமைப்புக்கள், தளபாடங்கள் என அத்தனையும் எரைந்தவர்.வரலாற்றுப் புகழ்வாய்ந்த கட்டட நிர்மாணங்களைத் தேடித் தேடி பயணித்தவர்.. வெவ்வேறு கலாசாரப் பின்னணிகளில் கட்டடக்கலைக்காக இருந்த தனிப் பாணிகள், அவற்றைத் தழுவி அமைக்கப்பட்ட கட்டடங்கள், ஒன்றுக்கு மேற்பட்டகட்டட பாணிகளைத் தழுவி பின்னாளில் வந்த கட்டடக்கலை வல்லுனர்கள் ஆக்கிவைத்த நிர்மாணங்கள் போன்றவற்றை ஆய்ந்து புரிந்துகொள்வதை ஓர் அலாதியான அனுபவமாக உணர்ந்தவர்..
கட்டடக்கலை தொடர்பான இவரது தேடலுக்கான உந்துதல் இவருக்கு இயல்பாக இருக்கின்ற வரைதிறன் என்றே சொல்லலரம்.அதன் அழகியலை நயந்து, அதனை தனது சாயலில் வரைந்து பார்ப்பது அத்தனை இன்பம் என்கிறார் றக்ஷானா வெறும் கோட்டுக் கிறுக்கல்களாக ஆரம்பித்து வண்ணங்கள் சேரச் சேர தன் தூரிகையின் போக்கில் ஒரு கட்டடக்கலையம்சம் வளர்ந்துகொண்டு போகும் போது தனது ஓவியங்களை வரைவதையும் வளர்த்துக்கொண்டுள்ளார்.