நூறுகோடி பெண்களின் எழுச்சி என்ற உலகலாவிய பிரச்சாரமானது ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14ம் திகதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. “வன்முறைகள் இல்லாத வாழ்தல் கொண்டாடப்பட வேண்டியது” இவ் எழுச்சி பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம் மண்ணிற்கும் பெண்ணிற்கும் ஊரில்லா வாழ்விற்காய் கூத்திட்டு பண் இசைப்போம் எனும் நோக்கோடு செயல்வாதங்களை முன்னெடுத்தது. அந்நிகழ்வில் ஆளுமை துளிகள் சிறுவர்களின் சேதன முறை வீட்டுத் தோட்டத்தை ஊக்குவித்தலுக்கான செயல்வாதமும், எண்ணித்துணிவோம் என்கின்ற கருத்தியலான நாடகமும். உணவு என்பது உரிமை என்ற தொனிப்பொருளில் சிறு கலந்துரையாடலும் இடம்பெற்றது.